INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, July 3, 2024

KUGAI MA.PUGAZHENDHI

 A POEM BY

KUGAI MA.PUGAZHENDHI

Translated into English by Latha Ramakrishnan(*first Draft)



Should exit this place
soon
Everything has turned
upside down
it is not possible to
wander in this world
ever again
remembering things bygone
Our paths are not with us
They are erased without a trace.
The same pathway along which
We have walked

We should go again staggering stumbling

Forgetting the straight ones
And finding many a roundabout ways
Getting lost
In the same soil where we lived
We should become refugees.
Shedding off the landmarks that we had
Grasped in our memory
We should retrieve new ones.
All are actual humans
Depriving us of our own
These gigantic illusions
Cause dilemma in us.
The deaths accompanying
Are comfort-intact trifles.
The old address is in my hand.
But, the paths to reach our destination
Have become ultra-modern.
To our address
Where we had lived once
Google Map would lead us from hence
Without lifting the head lowered
Let’s live on
wandering along the Android screen.
In experiences chaotic let’s turn frozen
and then have normalcy regained.
இங்கிருந்து
கிளம்பியாக வேண்டும்
சீக்கிரம்
எல்லாம் தலைகீழாக
மாறிவிட்டன
பழைய ஞாபகத்தில்
இந்த பூமியில்
திரும்பவும் உலவுதல்
சாத்தியமில்லை
நம் பாதை நம்மிடமில்லை
துடைத்தழிக்கப் பட்டுவிட்டன
நாம் நடந்த அதே பாதையில்
தட்டுத் தடுமாறி நடந்தாக வேண்டும்
நேர்ப் பாதை மறந்து
பல்வேறு சுற்றுப் பாதைகளை
வழி தெரியாமல் கண்டடைந்து
நாம் வாழ்ந்த அதே நிலப்பகுதியில்
அகதிகளாக வேண்டும்
நினைவில் பற்றிய அடையாளங்களை
உதிர்த்து புதிய அடையாளங்களை
மீட்டுக் கொள்தல் வேண்டும்
அனைவரும்
அசல் மனிதர்கள்
நம்மையே நாமறச் செய்து
குழப்பும் பூதாகரங்கள்
உடன் தொடரும்
மரணங்களோ
சொகுசு குறையாத
சொற்பங்கள்
பழைய முகவரி
கைகளில் இருக்கிறது
போய்ச்சேரும் பாதைகள்
நவீனமாகிவிட்டன
நாம் வாழ்ந்த
நம்மின் முகவரிக்கு
கூகுள் மேப் வழி நடத்தும் இனி
குனிந்த தலை நிமிராமல்
ஆன்ராய்டு திரை வழி
அலைந்து வாழ்வோம்
அனுபவக் குலைவில்
உறைந்து மீள்வோம்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - JULY - SEPTEMBER, 2024