A POEM BY
MARIMUTHU SIVAKUMAR
Not allowing them to wander away
And turned them into a poem
Upon the mountainous space.
All over, the mountain
remained radiant
as the Eastern Sun.
I saw there that from the words
spreading all over the mountain
the chapters or songs
for the dawn of mountains
being born.
Seeing it
an authoritative stone
stirred to capture the poem.
Pillars of Power
were installed
building a barricade
around my ardent words.
The primal roots of the mountains
that have grown strong and sturdy
thanks to the deadly dance of dominance
and words ardent
stirred deliriously.
There I saw
lines afresh of songs myriad
being born
from words filled with passion.
ஆசை மிகுந்த சொற்கள்..
ஆசை மிகுந்த சொற்களை
அங்குமிங்கும் அசையவிடாது
மலைவெளியில் கவிதையாக்கினேன்.
மலையெங்கும்,
கீழ் திசை தோன்றும் சோதியாய்
பிரகாசித்திருந்தது.
மலைகளில் பரவிய சொற்களிலிருந்து
மலைகளின் விடியலுக்கான
அத்தியாயங்கள் அல்லது பாடல்கள் பிறப்பதாக கண்டேன்,
இதை கண்ட
அதிகாரம் மிகுந்த கல்லொன்று
கவிதையினை ஆட்கொள்ள கிளர்ந்தது.
எனது ஆசை மிகுந்த
சொற்களைச் சுற்றி
அதிகார தூண்கள் நிறுத்தப்பட்டது.
அதிகார தாண்டவத்தால்
ஆசை மிகுந்த சொற்களால் வலுபெற்றிருந்த
மலைகளின் ஆணி வேர்கள்
வெறிபிடித்தாற் போல்
கிளர்ந்தன..
அங்கே,
ஆசை மிகுந்த சொற்களிலிருந்து
புதிய பல பாடல் வரிகள் பிறப்பெடுக்க கண்டேன்.
~~~~~
மாரிமுத்து சிவகுமார்.
No comments:
Post a Comment