INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, July 3, 2024

PALAIVANA LANTHER

 A POEM BY

PALAIVANA LANTHER

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


I HAVE KILLED THE SON OF MY FRIEND

With his hands crisscrossed
He was pleading “Please don’t…
It was the moment when the sticky screen
spread on his eyes
began to peel off
Hence he saw me very clearly.
Unable to entwine the roots
We both were two different entities
But
his umbilical chord
had extended inside my womb.
Childbirth Toys and Dolls School
Dresses Ornaments
Three meals a day Some medicines
To compare and contrast
and have a hearty laugh
Pubs Clubs Mall and all
Charges levied for Religious teaching
It is Economy everywhere, my son
Here we the hapless have no means
off enabling you to be born.
Tomorrow
On that promised day of
the land of revival after Death
carrying queries myriad
He would be waiting for me.
In my ears that moves away in fear
taking it to be a mass of bloody flesh
His voice that allowed not to call ‘Ammaa’
would begin to sound
When his tongue swirling endlessly
leaps towards me as razor-edged daggers
I would be lying there as like a writhing worm…
He – My Friend who has
shared my hapless state
has my husband’s face….


எனது நண்பனின் மகனை கொன்று விட்டேன்
****
அவன் தனது பெருக்கல் கரங்களால்
வேண்டாம் என்று கெஞ்சிக்கொண்டிருந்தான்
அவனது விழிகளின் மீது படர்ந்திருந்த
பிசுபிசுப்பான திரை அகலத் தொடங்கிய தருணமது
ஆதலால்
என்னை தெளிவாக பார்த்துவிட்டான்
வேர்களை பிணைக்கத் தெரியாத
நான் வேறு அவன் வேறு
ஆனால்
அவனது தொப்புள்க்கொடி
எனது கருவறைக்குள் நீண்டிருந்தது
பிள்ளைபேறு பொம்மைகள் பள்ளிக்கூடம்
ஆடைகள் அணிகலன்கள்
மூன்றுவேளை உணவு சிறிதளவு மருந்து
ஒப்பிட்டு சிரிக்க கேளிக்கை கூடங்கள்
மதபோதனை கட்டணங்கள்
தொட்டதெற்கெல்லாம் பொருளாதாரம் மகனே
இங்கே ஆதாரமற்ற எங்களால் உன்னை பெற்றெடுக்க வழியில்லை
நாளை
மரித்தபிறகு உயிர்ப்பிக்கும் தளத்தின்
வாக்களிக்கப்பட்ட அந்நாளில்
எண்ணற்ற கேள்விகளை சுமந்தபடி
எனக்காக அவன் காத்திருப்பான்
குருதிப்பிண்டமென அஞ்சி விலகும் எனது செவிகளில்
அம்மாவென்று அழைக்க மறுக்கப்பட்ட
குரல் ஒலிக்கத்தொடங்கும்
அவனது நாக்கு சுழன்று சுழன்று
கத்திகளாக எனை நோக்கி பாயும் வேளை
நானொரு நெளியும் புழுவின் சாயலில் கிடக்கலாம்

என்னுடன் இணைந்து
கையறு நிலையை பகிர்ந்துகொண்ட
எனது நண்பனுக்கு எனது கணவரின் முகம்……



No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - JULY - SEPTEMBER, 2024