INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, January 25, 2021

K.S.AMBIGAVARSHINI

 A POEM BY

K.S.AMBIGAVARSHINI


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


This is the time of Butterflies searching for

their shadows
In the ripened and fallen cocoa nut leaf ,
strips of centipede dead and static
In each screech
the continuance of rain unending
Feathers of peacock that lilt and leap and go seeking
from the leaves of creepers entwined covering the land
Male Female
The form of stagnant water, the trail of river ending
the circles formed and dissolved of each droplet falling
cannot be strung.
The moisture of branch wets the feet
of the squirrel pecking and pulling the withered leaf
and drip
the saw dust sprayed on the window-bars
wax in deft mould
Only when seeing the pale face in the looking glass
I feel like smiling
Snow-filled rims are indeed scarce
K.S. Ambigavarshini
பட்டாம்பூச்சிகள் தன் நிழல்களைத் தேடும் காலமிது...
மூத்து விழுந்திருக்கும் தென்னையோலையில் இறந்து நகரமுடியாத பூரானின் கீற்றுகள்
ஒவ்வொரு கிறீச்சிடலுக்கும்
மழைபெய்து முடியாத தொடர்ச்சி
நிலத்தை மூடிப் பின்னியிருக்கும் கொடியிலைகளிலிருந்து எம்பிப் பறந்துத் தேடுகிற மயிலின் சிறகுகள்
ஆண்/ பெண்
தேங்கிய நீரின் வடிவம் ஆறு முடியும் தடம்
ஒவ்வொரு துளியும் விழுந்து கலைகிற
வட்டங்கள் கோர்க்கமுடியாதவை
இற்றுப்போன இலையைக் கொத்தியிழுக்கும் அணிலின் பாதங்களை நனைத்து வழிகிறது கிளையீரம்
சன்னல் கம்பிகளில் தூவப்பட்டிருக்கும் மரத்தூள்கள் அச்சுப் பிசகாத மெழுகு
வெளிர் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கிறபோதுதான் புன்னகைக்கத் தோன்றுகிறது
பனியப்பிய விளிம்புகள் மிகமிகக் குறைவு

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE