A POEM BY
KATHIR BHARATHI
and touched the left ear beneath the head
Approving they took me into their fold.
From that day onwards
I got accustomed to this manner of touching things
roundabout
To say precisely
Circling, going roundabout
and beating around the bush
have become a way of life with me.
Who at all is there in this world
Who has not felt albeit in a roundabout manner
Laughter
Teardrops
Love
Lust
Birth
Death
Woman
Man
Maybe this roundabout movement is
the very strategy of life.
It is He who had once touched the ear
circling the mountain
they refer to as
enjoyed everything to the hilt and
leaves like a king.
வளைத்துத் தொடுதல்
..............................
சிறுவயதில் கைவளைத்து
தலைக்குக் கீழுள்ள
இடது காதைத் தொட்டேன்
'சரி' எனச் சேர்த்துக்கொண்டார்கள்.
அன்று முதல்
வளைத்து வளைத்துத் தொடுவது
பழகிவிட்டது.
சரியாகச் சொல்வதானால்
சுற்றி வளைப்பதும்
வளைத்துத் தொடுவதும்
வாடிக்கையாகிவிட்டது.
சிரிப்பை
கண்ணீர்த் துளியை
காதலை
காமத்தை
பிறப்பை
இறப்பை
பெண்ணை
ஆணை
சுற்றி வளைத்துத் தொடாதோர்
யாருண்டு உலகில்.
எதையும்
வளைத்துத் தொடுவதே
வாழ்வதன் சூட்சுமம் ஆயிற்றுபோல.
ஒரு முறை
தலைக்குப் பதிலாக
மலையைச் சுற்றிவளைத்து
காதைத் தொட்டவனைத்தான்
'ஆண்டு அனுபவச்சி
ராசாவாட்டம் போறான்'
என்கிறார்கள்.
No comments:
Post a Comment