A POEM BY
KALATHATCHAN
Wherefrom she had learnt
From whom
Even she didn’t know
The whistle she gives out thus _
Cupping the index finger and the thumb
and folding the tip of the tongue
closing her right eye _
Oh! that would be blissfully sweet.
The whistle that flies
in cinema theatres
In friends’ weddings
and when someone stumbles and falls
in the street too
is a two-second symphony
After a long time
After a long spell of fears
After a long spell of ailments
After a long spell of sobs
After a long spell of sighs
After shaking hands with him
for the last time
Right there inside the court premises
she gave out her all too long
enchanting whistle.
காலதச்சன் கவிதை
ஒரு ஊரில்
விசிலடிக்கும் தேவதை
பிறந்தாள்
எங்கு கற்றாள்
யாரிடம் கற்றாள் என
அவளுக்கும் தெரியவில்லை
அப்படி தித்திக்கும்
ஆள்காட்டி விரலையும்
கட்டைவிரலையும் குவித்து
நுனி நா மடித்து
வலக்கண்ணை மூடி
அவள் அடிக்கும் விசில்
தியேட்டர் அரங்குகளிலும்
சிநேகிதிகளின் திருமணங்களிலும்
தெருவில் யாரேனும்
தடுக்கி விழுகையிலும்
பறக்கும்
அந்த விசில்
இரு நொடி சங்கீதம்
நீண்ட காலத்திற்குப் பிறகு
நீண்ட பயங்களுக்குப் பிறகு
நீண்ட உபாதைகளுக்குப் பிறகு
நீண்ட விசும்பல்களுக்குப் பிறகு
நீண்ட பெருமூச்சுகளுக்குப் பிறகு
அவனுடன் இறுதியாக
கைக்குலுக்கிய பிறகு
அந்த கோர்ட் வளாகத்திலேயே வைத்தடித்தாள்
தன்
அற்புத விசிலை .
-காலதச்சன்-
No comments:
Post a Comment