INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, January 26, 2021

VELANAIYUR RAJINTHAN

 A POEM BY

VELANAIYUR RAJINTHAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

THE BIRTH OF THE POOR BOY
As usual
all Dawns!
But this dusk alone
has wings all too vibrant!
On both sides of the street
People flooding!
The great grand city radiant
In hues magical!
The sky reverberating with
Fireworks of colours myriad!
The midnight square
would be enlivened to the core!
As motorized deluge
the wheeled wagons!
Multi-storeyed structures
sparkling all over!
The ultra-modern attires
Making a grand march!
The cathedral is glowing radiantly
brimming with parishioners.
Yes indeed, all these are for
the arrival of the Son of God!
All pray to the Son of God
with hands outstretched!
And, the Son of God pray to all
with hand outstretched
Some candles in the hands!

ஏழைப்பாலன்
_____________
வழமையானதே
எல்லாப் புலர்வுகளும்!
இவ்வந்திக்கு மட்டும்
ஆரவாரச் சிறகிருக்கிறது!
தெருவின் இருமருங்கும்
மக்கள் பெருவெள்ளம்!
வர்ணஜாலம் கொண்ட
மின்னொளி மாநகரம்!
வானதிரும் பல வண்ண
வாணவேடிக்கைகள்!
புத்தெழுச்சி பூண்டிருக்கும்
நள்ளிரவின் நடுச்சந்தி!
இயந்திரப் பிரவாகமாக
ஊர்கின்ற சக்கர ஊர்திகள்!
கோலாகலத் தோற்றத்தில்
அடுக்குமாடிக் கட்டடங்கள்!
நவீன நாகரிக உடைகளின்
ஆடம்பர அணிவகுப்பு!
தேவாலயம் ஒளிர்கிறது
மண்டபம் நிறை பக்தர்கள்!
ஆம், இவை அத்தனையும்
தேவபாலன் பிறப்பிற்கானதே!
எல்லோரும் தேவபாலனிடம்
கையேந்தி இறஞ்சுகின்றார்கள்!
எல்லோரிடமும் ஓர் ஏழைப்பாலன்
கையேந்தி இறஞ்சுகின்றான்
சில மெழுகுவர்த்திகள் கைகளில்!
- வேலணையூர் ரஜிந்தன்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024