A POEM BY
ABDUL JAMEEL
there emanates stink unbearable
churning the intestines.
Sickeningly giving out
salty odour
piling up into mountainous heap
and waiting for the sun _
clothes yet to be washed.
The feet unable to bear
sticky and chill to the core
the patio of the time-worn house.
in the midst of all these
going outside empty-handed to play
returning with the rain
lilting and leaping like a rabbit
in white pristine
Little Haya.
Dragging her and sending her out
I slam the door shut.
But the rain that Haya has left behind
remains inside the house.
ஹயா விட்டுச் சென்ற மழை
____________________
மலக் கிடங்கு நிரம்பி
சகிக்க முடியாதவாறு
குடல் பிடுங்க வீச்சமடிக்கிறது
கர்மம் பிடித்து புளிச்சு மணக்கிறது
மலையென குவிந்து
வெயிலுக்காக காத்துக் கிடக்கும்
இன்னும் துவைக்கா ஆடைகள்
கால் வைக்க முடியாதபடி
பிசுபிசுத்து குளிர்கிறது
பழம் காலத்து வீட்டுத் திண்ணை
இத்தனைக்கு மத்தியிலும்
வெறும் கையோடு
வெளியில் விளையாடச் சென்றவள்
மறுபடியும் வீட்டுக்குள் மழையோடு வந்து
வெள்ளை முயல் குட்டியென
துள்ளிக் குதித்து சிரிக்கிறாள் ஹயா
உடன் அவளை வெளியில் அனுப்பி விட்டு
கதவை இழுத்து சாத்துகிறேன்
ஆனால் வீட்டுக்குள்ளே தங்கி விட்டது
ஹயா விட்டுச் சென்ற மழை.
அப்துல் ஜமீல்
No comments:
Post a Comment