TWO POEMS BY
MARIMUTHU KALIDAS
Translated
into English by Latha Ramakrishnan(*First Draft)
This night filled with void
keeps elongating like the tongue of Satan
It is on one such night
the silvers of Judas
might be strolling outside.
It is on one such night
poisonous seeds might have sprouted
in the heart of Brutus.
It is on one such night
a mentally deranged girl
might have been hunted down by
deadly hounds.
It is on one such night
An old shrunken woman
might have fallen asleep
clasping the wet cloth around her hip.
வெறுமை நிறைந்த
இந்த இரவு சாத்தானின்
நாக்கென நீண்டு கொண்டேயிருக்கிறது...
இப்படியான ஒரு
இரவில்தான்
யூதாசின் வெள்ளிகள்
வெளியே நடமாடக் கூடும்...
இப்படியான
இரவில்தான்
புரூட்டஸின்
மனதில்
விசவிதைகள் அரும்பியிருக்க
கூடும்...
இப்படியான
ஒரு இரவில்தான்
மனநிலை சரியில்லாத
பெண்ணொருத்தி
வெறிநாய்களால்
வேட்டையாடப்பட்டிருகக் கூடும்...
இப்படியான ஒரு இரவில்தான்
காய்ந்த சருகான
மூதாட்டி ஈரத்துணியை
இடுப்போடு சேர்த்து
கட்டியவாறே
உறங்கியிருக்கக் கூடும்...
With none to care,
as Party flag swirling in the wind
the Night lies, torn.
It was in the ‘Lathi’ of the policeman
for lying on the platform
the first tear came to be.
With nothing there for the burning stomach
while drinking water from the roadside tap
the second tear peeped out.
Disturbed from sleep
in the rain poured roaring and dense
past midnight
while searching for some spot to lie huddled
another tear too was added.
Henceforth never will it be possible
to stitch the tear of the dead night
and turn it into a blanket for my
trembling sleep.
All that I pray for now
is to have
a peaceful sleep
atleast tomorrow night
like the puppy upstairs.
கவனிக்க ஆளின்றி,
காற்றினில் பறக்கும்
கட்சிக் கொடியாய்
கிழிந்து கிடக்கிறது
இரவு...
ப்ளாட்பார்மில் படுத்ததற்காய்
போதைக் காவலரின்
லத்தியில்தான்
முதல் கிழிசல்
முளைத்துக் கொண்டது...
எரியும் உதரத்திற்கு
ஏதுமின்றிப் போக
குழாயடி நீரை
குடிக்கத் தொடங்குகையில்
இரண்டாவது கிழிசல்
எட்டிப் பார்த்தது...
பின்னிரவைத் தாண்டுகையில்
சடசடவென
பெய்த மழையில்
உறக்கம் கலைந்து
ஒதுங்க இடம்
தேடிய போது
இன்னொரு கிழிசலும்
இணைந்து கொண்டது...
இனி ஒருபோதும் முடியாது
இறந்த இரவின்
கிழிசலைத் தைத்து
நடுங்கும் என் உறக்கத்திற்கு போர்வையாக்கிட...
என் இப்போதைய
வேண்டுதலெல்லாம்
நாளைய இரவாவது
மாடிவீட்டு
நாய்க்குட்டியைப் போல்
எனக்கும் ஓர்
நல்லுறக்கம்
வாய்த்துவிட வேண்டுமென்பதே...
No comments:
Post a Comment