INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, April 2, 2025

RAJAJI RAJAGOPALAN (MANARKAADAR)

 A POEM BY

RAJAJI RAJAGOPALAN

(MANARKAADAR)

Rendered in English by Latha Ramakrishnan (*First Draft)
It there be one so great
to make us prostrate at his feet
If there be one
ever remembering the help received
with gratitude
If there be one
returning without fail the loan
If there be one
with no contradiction with his woman
If there be one
keeping up his word
If there be one
choosing as his life-companion
a woman forsaken
The fact that I live in his time
is truly Boon Sublime.

காலைத் தொட்டு வணங்கும் அளவுக்கு
ஒருவர் இருப்பாரென்றால்
நன்றி மறவா நெஞ்சுடன்
ஒருவர் இருப்பாரென்றால்
கொடுத்த பணத்தைத் திருப்பித்தந்த
ஒருவர் இருப்பாரென்றால்
மனைவியோடு ஒருபோதும் முரண்படாத
ஒருவர் இருப்பாரென்றால்
சொன்ன வாக்கைக் காப்பாற்றிய
ஒருவர் இருப்பாரென்றால்
இன்னொருவர் கைவிட்ட பெண்ணைக் கட்டிய
ஒருவர் இருப்பாரென்றால்
அவர் காலத்தில் வாழ்வதும்
நான் பெற்ற வரமே.
ராஜாஜி ராஜகோபாலன் (மணற்காடர்)All reactions:

JEYADEVAN

 TWO POEMS BY

JEYADEVAN


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)




Let me buy the Sea thought I
and bargained with God.
Your money would get you just the dewdrop
said He, the Lord.
Let me buy the forest thought I
and asked the jungle-goddess to tell the price.
Even a butterfly is more than what you deserve
The Goddess observed.
I asked the sky to give me the rainbow
“You would take apart the hues somehow.
Sorry I can’t -
refused the sky above.
I asked the wind to give me Music
for wholesale lease.
‘That I have entered into your flute
is blessing indeed. Ask not for more
said the Air.
I asked the Lord of Death
to give me thousand years
as gift.
“Here, have it” -
He readily gave it.
Keeping for me hundred years
To who among you
I am to give the rest?
கடல்தனை வாங்கலாம் என்று கடவுளிடம்
பேரம் பேசினேன்
“பனித்துளிக்குதான் பத்தும் உன் பணம்” என்றான் கடவுள்
காட்டை வாங்கலாம் என்று வனதேவதையிடம்
விலை கேட்டேன்
“பட்டாம்பூச்சியே
உனக்கு அதிகம்” என்றது
தேவதை.
வானவில்லைக் கேட்டேன் வானத்திடம்
“வர்ணங்களைப் பிரித்து விடுவாய்..
முடியாது” என்றது வானம்
காற்றிடம் மொத்தக் குத்தகைக்கு
வேண்டினேன் இசையை...
“உன் புல்லாங்குழலில் நுழைந்ததே நான் கொடுத்த வரம் ...போ” என்றது
மரணதேவனிடம் கேட்டேன் ஆயிரம் ஆண்டுகள்
நன்கொடையாக
“இதோ” என்று எடுத்துக் கொடுத்து விட்டான்
ஆயிரம் ஆண்டுகளை
எனக்கு
நூறு ஆண்டுகள் போக மீதியை
உங்களில் யாருக்குத் தருவது?
ஜெயதேவன்

(2)

In a cup of Tea there remains a Tea-Plantation
In a strand of feather lies the song of the bird
wind-written
Make a hole in a mustard seed and listen
The earth’s breath would come out through its skin.
There remains still in a chair
The warmth of the one who sat there just then
It is but his own person
Pursuing us who return home after burying the dead
the graveyard does come running for some distance
During the third leg of night of grandma’s final journey
A child is born in the house opposite
It is but that grandma no doubt.
Sneezing once we take in fresh air
A piece of sky enters inside
In the next sneeze it makes its exit
Even after a wagon gone past
It keeps running for a while
in our heart for a while.
In a small disk remains
the voice of the Neo- bard
whom you have been longing to see
all along.
In the kiss given by us
who claim acclaim proclaim
That our love exists in our tiny letter
her fragrance everywhere
That’s why we place the kiss
well inside the lips.
ஒரு கோப்பைத் தேநீரில் இருக்கிறது ஒரு தேயிலைக் காடு .
ஒரு சிறகில் இருக்கிறது பறவையின் மீது காற்று எழுதிய பாடல்
ஒரு கடுகைத் துளைத்துப் பாருங்கள்
பூமியின் மூச்சு வெளிவரும் தொலியின் வழியே
ஒரு நாற்காலியில் இன்னும் இருக்கிறது
சற்றுமுன் அமர்ந்து விட்டு போனவன் சூடு
அந்த சூடுதான் அவன்
செத்துப் போனவனை புதைத்து விட்டு வீடு வரும்
நம் பின்னால் ஓடி வரத்தான் செய்கிறது சுடுகாடு கொஞ்சம் தூரம்
பக்கத்து வீட்டுப் பாட்டி இறந்த மூன்றாம் ஜாமத்தில்
எதிர் வீட்டில் பிறக்கிறது ஒரு குட்டிப் பாப்பா
அந்தப் பாட்டிதான் அது
தும்மல் ஒன்று விட்டுப் புதுக்காற்றை வாங்குகிறோம்
ஒரு துண்டு வானம் உள்ளே செல்கிறது
அடுத்த தும்மலில் வந்து விடுகிறது வெளியே
ஒரு வாகனம் கடந்து போய்விட்டாலும்
சற்று நேரம் ஓடுகிறது நம் மனசுக்குள்
சின்ன குறுவட்டுவில் இருக்கிறார்
நீங்கள் பலநாளாய் தவமிருந்து பார்க்க நினைத்திருக்கும்
நவீன பாணன் குரல்
ஒரு துண்டுக் கடிதத்தில் நம் காதல் இருப்பதாக சிலாகிக்கும் நாம்
இடும் முத்தம் முழுதும் அப்பி இருக்கிறது அவள் வாசம்
அதனால் தானே முத்தத்தை மட்டும் உதட்டுக்கு
உள்ளே வைக்கிறோம்

INSIGHT MARCH 2021

RAJAJI RAJAGOPALAN (MANARKAADAR)

  A POEM BY RAJAJI RAJAGOPALAN (MANARKAADAR) Rendered in English by Latha Ramakrishnan (*First Draft) It there be one so great to make us pr...