INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, April 29, 2022

INSIGHT APRIL 2022

 




ABDUL HAQ LAREENA

 TWO POEMS BY

ABDUL HAQ LAREENA


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

(1)

That became a bamboo forest
Expectations of rain belied
Despite burning umpteen number of times
and sprouting again
It remained the same.
Word was everything
Dreams about Life
it had strung in words
well-knit.
Awareness of the mysteries of
the wastelands within
turned into not by Hope.
The breeze had brought along
Word pleasantly cool
It was ever unleashed.
Always on the move
The desire to have it exclusively one’s own
in chains
is rather unfair
Fastening the legs of Dos and DON’Ts
to wind
is rather unkind
Fully aware of the possibility of
burning and turning into ash
sprouting as Bamboo forest
yet again
the heart sang along the course of wind.
Wind wafts in Music
Music merges with wind.
Abdul Haq Lareena

ஒரு மூங்கிற் காடாயிற்று
மழை பற்றிய எதிர்பார்ப்புகள் பொய்த்து
இதற்கு முன்பும் பலமுறை
எரிந்தெரிந்து துளிர்த்திருந்தும்
அது அதுவாகவே கிளைத்திருந்தது
சொல்லே எல்லாமாயிருந்தது
வாழ்தல் பற்றிய கனவுகளை
வெற்றுச் சொற்களுக்குள் மட்டுமே
கோத்துக் கோத்துக் கட்டியிருந்தது
அதற்குள்ளான சூன்யப் பிரதேசங்களின்
மர்மங்கள் குறித்த விழிப்புணர்வை
நம்பிக்கை காவுகொண்டிருந்தது.
குளிர்ந்த சொல்லைச் சுமந்து வந்திருந்தது
காற்று
அது கட்டற்றது, ஓரிடம் நில்லாதது
தனக்கேயானதாய்க் கொள்ளும் வேட்கை
நியாயமற்றதுதான்
நிபந்தனைகளின் கால்களைக் காற்றுக்குப் பொருத்துதல்
நியாயமே அற்றதுதான்.
எரிந்துகருகும் எல்லாச் சாத்தியப்பாடுகளையும்
அறிந்திருக்கும் நிலையிலும்
ஒரு மூங்கிற் காடாகவே
மறுபடியும் துளிர்த்து காற்றுவெளியிடை இசைபாடிற்று
மனசு.
இசையில் மிதக்கிறது காற்று
காற்றில் கலக்கிறது இசை.

(2)
QUINTESSENCE

As two lines have I written
the sorrow unbearable
It became a highway
Now it is along that same road
You are travelling
The secret of the trees in thick clusters
flourishing with plenty of flowers
along the entire stretch between two ends
so far as you regard those who come along
as co-travellers _
the wind wouldn’t have disclosed to you
as yet
I hope.

சூட்சுமம்
=========
கடக்க முடியாத துயரை
இரு வரிகளாய் எழுதினேன்
ஒரு நெடுஞ்சாலையாய் மாறிற்று
இப்போது நீங்கள்
அதில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள்
உடன் வருபவர்களைச் சகபயணிகளாய்
ஏற்று நீங்கள் மதிக்குந்தோறும்
இரு அந்தங்கள் நெடுகிலும்
பூக்கள் சுமந்து அடர்மரங்கள் தழைக்கும் ரகசியத்தை
காற்று உங்களுக்கு இன்னும் சொல்லியிருக்காது
என்று நம்புகின்றேன்.
ABDUL HAQ LAREENA

IYYAPPA MADHAVAN

 TWO POEMS BY

IYAPPA MADHAVAN

Translated into English by Latha Ramakrishnan (*First Draft)

(1)


At night while retiring for the day
I get into a meditative state
like the Buddha
At dawn
its composure collapses
In the salty air of the city
body and mind
turn rotten
In scenes seen during day
pathos of sorrows all the way
A puppy is hit by the bus
and is on the throes of death
Leaves crash down from the trees
in thick clusters.
There goes crossing the road
a visually impaired man
tapping the ground with his White cane.
Someone sobs uncontrollably for something
Someone has ceased to be
all too suddenly;
A mother has killed her children
slashing their necks
In the solitary night nothing else is seen
except different shapes and shades of quietude
when Buddha entwines his hand in the night
I voluntarily lose my ‘I’
Then, upon Enlightenment
my pillows lie.

Iyyappa Madhavan

இரவு உறங்கும் வேளை புத்தனைப் போல தியானத்திற்கு செல்கிறேன்
விடியலில் அதன் சமநிலை குலைகிறது
நரகத்தின் உப்புக்காற்றில்
உடலும் மனமும் சீர்கெடுகிறது
பகலில் தென்படும் காட்சிகளில்
சோகங்கள் மேலெழுகின்றன
ஒரு நாய்க்குட்டி பேருந்தில் அடிபட்டு உயிர்விடப் போகிறது
மரங்களிலிருந்து இலைகள் கூட்டம் கூட்டமாய் வீழ்கின்றன
கண் தெரியாதவன் குட்டியைத் தட்டித் தட்டிச் சாலைக் கடக்கிறான்
யாரோ எதுக்காகவோ கதறி அழுகிறார்கள்
ஒருவன் அகால மரணமடைந்திருக்கிறான்
ஒரு தாய் தன் குழந்தைகளை கழுத்தை அறுத்துக் கொன்றிருக்கிறாள்
தனித்திருக்கும் இரவில் அமைதியின் உருவங்கள் தவிர வேறேதும் தெரியவில்லை
புத்தன் இரவுகளில் கைகோக்கும் பொழுது
என்னை நானே தொலைத்துக்கொள்கிறேன்
அப்போது ஞானத்தின் மீது என் தலையணை.


(2)
As a droplet of rain slipping off the hand
your fingers try to find release from my clasp
I hold it fast as the flower held by the plant
The succor and solace you have offered
as shades under the scorching heat
I fondly recall
You are like the rain
in the barren desert terrain
With the hot sand cooling
I felt your mercy in my feet
In your heart as clusters of cloud
in White pristine
you have collected and stored my songs of loneliness.
In those lines
My childhood might be brimming
As a withered leaf leaving the tree and running away
I would be pursuing you always.
The anguishes trickling at the corner
of your eyes
I would stroke with my soft finger
The way I circle you as air _
You remain unaware…….


கையை விட்டு நழுவும் ஒரு மழைத்துளியை போல உன் விரல்கள் என் பிடியிலிருந்து நழுவப் பார்க்கின்றன
ஒரு செடி தாங்கும் மலரைப் போல இறுகப் பற்றிக் கொள்கிறேன்
கொடிய வெயிலின் கீழ் படரும் நிழல்களைப் போல நீ தந்த ஆறுதல்களை நினைத்துக் கொள்கிறேன்
பாலைவனத்தில் திடீரென பெய்யும் மழையைப் போன்றவள் நீ
சுடுமணல் குளிர்ந்து
பாதங்களில் உன் இரக்கத்தை உணர்ந்தேன்
வெண்மை பொதிந்த மேகம் போன்ற உன் மனதில்
என் தனிமைப் பாடல்களை சேகரித்து வைத்திருக்கிறாய்
அதன் வரிகளில் என் குழந்தைமை
நிறைந்திருக்க கூடும்
மரம் விட்டு ஓடும் ஒரு சருகை போல ஓடும் உன் பின்னால் நானும் வந்து கொண்டிருப்பேன்
உன் விழியோரம் கசியும் வேதனைகளை
என் மெல்லிய விரல்களால் ஒத்தி எடுப்பேன்
காற்றைப் போன்று உன்னை சுற்றிக் கொண்டிருப்பதை நீ அறிந்திருக்கவில்லை.














MULLAI AMUTHAN

 A POEM BY 

MULLAI AMUTHAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

Holding the hand of Hope I walk along
These lot and those lot
Saying this and that
about Him
go on
From the very start my affection
for him
grew into Hope
He never invited me with hands outstretched
Nor have I ever approached him
Yet
the roots of Hope
have spread deeper
He wouldn’t have searched for me
but I have.
Far yet near
he was to me forever
so dear
Being so close to my heart
this I realize now at last.
I am not for
severing the roots of Hope
before or after
If you want,
tell me what you want to say
Just say
and go away
My window remains open
awaiting his arrival
Roots are still
so deep-rooted
You who spreads the poisonous gas and goes away - alas
Just get lost, I say
Hope is erected so deep down
beyond the reach of poison.


நம்பிக்கையை
தான் கைப்பிடித்து
நடக்கிறேன்.
அவர் பற்றி
இவர்களும் அவர்களும்
நடத்தும் பட்டிமன்றம் முடியவே இல்லை..
தொடக்கத்தில்
இருந்தே அவர் மீதான
அன்பு
நம்பிக்கையாக வளர்ந்தது..
அவர் கை நீட்டி அழைத்ததில்லை...
நானும் அவரிடம் நெருங்கியதில்லை.
ஆனாலும்
நம்பிக்கை வேர்கள்
ஆழமாய் ஊடுருவி இருக்கிறது.
என்னை அவ்ர் தேடியிருக்க வாய்ப்பில்லை..
ஆனால்
அவரை தேடியிருக்கிறேன்..
நெருங்கமுடியாதவர் எனினும்..
என்னுள் நெருங்கியே இருந்திருக்கிறார்
என்பதை
இப்போது உணர்கிறேன்..
நம்பிக்கை வேர்களை அறுந்தெறிந்துவிட
தயாராக இல்லை...
வேண்டுமென்றால் உன் சேதியை
சொல்லிவிட்டு
சொல்லிவிட்டுப் போய்விடு..
அவரின் வருகை பார்த்து..
சன்னல் திறந்திருக்கிறது.
வேர்கள் இன்னும் இன்னும்
ஆழ்மாகவே வேர் விட்டு நிற்கிறது...
நச்சுப்புகையை வீசிவிட்டுப்போகும் -
நீ
நினைத்துக்கொன்டிருக்கிறாய்..
போடா போ..
நஞ்சு புகமுடியாத ஆழத்தில்
நம்பிக்கை கட்டி எழுப்பட்டுள்ளது.

முல்லைஅமுதன் 

ATHMAJIV

 A POEM BY

ATHMAJIV

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

THE FRUITS OF A TREE

She who drew a bird
Not drawing wings
drew a huge tree
Wingless bird and myself
were merely looking around
bemused
It was indeed a gigantic tree
The racing pulse of the bird
unable to fly
echoed in my heart
She finished drawing a variety of fruits
in the same tree
The bird and myself
watched it
wonderstruck
Looking at me watching it all
spellbound
clicking her tongue and winking
she smiled.
Sketching a lovely nest
for the bird to rest
she offered it wings.
The bird she drew
flew
circling a lone tree
in which the fruits of the entire jungle
dangled.

ஒரு வனத்தின் பழங்கள்
பறவை ஒன்றை வரைந்தவள்
சிறகுகளை வரையாமல்
பெரிய மரமொன்றை வரைந்தாள்
சிறகுகளற்ற பறவையும் நானும்
வெறுமனே வேடிக்கைப் பார்த்தோம்
மிகப் பெரிய மரம்தான் அது
பறக்க இயலாத பறவையின் துடிப்பு
என் இதயத்தில் எதிரொலித்தது
பலவிதமான பழவகைகளை
வரைந்து முடித்தாள் அவள்
ஒரே மரத்தில்
அதிசயமாகப் பார்த்தோம்
நானும் பறவையும்
வியந்து பார்த்த என்னை
உச்” கொட்டி கண்களை சிமிட்டி
புன்னகைத்தாள்
பறவை தங்குவதற்கொரு
அழகான கூட்டை வரைந்து விட்டு
பறவைக்கு சிறகுகளைத் தந்தாள்
ஒரு வனத்தின் பழங்கள்
காய்த்து தொங்கிய
ஒற்றை மரத்தை சுற்றிப் பறந்தது
அவள் வரைந்த பறவை

ஆத்மாஜீவ்

KANNAN VISWAGANDHI

 TWO POEMS BY

KANNAN VISWAGANDHI

Translated into English by Latha Ramakrishnan (*First Draft)


1. PROMOTION

Snake and Ladder Game
Whenever I am to climb on the ladder
snake biting
once again
from Square Number One
Though fulfilling the ten
you ask for the eleven
ever a new one …
Haven’t you released the White Paper?
Though toiling for the whole week
‘What were you doing at the week end ?’
With just four
can you finish the work of ten
in ten days?
How to hope for reaching the shore
having all novices by your side?
The faces of neighbours
overtakes you to savour
the dinner
Hard work
Hardly yield fruits
If Politics is a must
Why not it has no place
In our Training schedule?
You spend like hell.
Every year your treacherous silence
turns me terribly sick
I know not the nasty trick
of being in the good book….
Let me be so
so – so……

பதவி உயர்வு
பரமபத விளையாட்டு
ஏணியில் கால்வைக்கும்
போதெல்லாம்
பாம்புகடித்து
மீண்டும் முதலிருந்து
பத்தும் முடித்தாலும்
பதினொன்றாய்
புதிதாய் ஒன்று
எப்போதும் கேட்கிறீர்கள்:
வெள்ளை அறிக்கை
வெளியிட வில்லையா?
வாரம் முழுவதும்
பணி செய்யினும்
வார இறுதியில்
என்ன செய்தாய்?
நால்வரை வைத்து
பத்து பேர் வேலையை
பத்து நாட்களில்
முடியுமா?
கத்துக்குட்டிகளை வைத்து
எப்படி கரைசேர
முடியும் எப்போதும்?
பக்கத்து முகங்களே
பந்தியில் முந்துகிறது
உண்மையான உழைப்பு
ஒன்றுக்கும் உதவாது
அரசியல் அவசியமெனில்
ஏனில்லை
நமது பயிற்சித்திட்டத்தில்?
வாரியிறைக்கிறீர்
வள்ளலெனப் பெயரெடுக்க
ஒவ்வொரு ஆண்டும்
தங்களின்
கள்ள மௌனம் தான்
கலவரப்படுத்துகிறது
பிழைக்கத் தெரியவில்லை
இருந்து விட்டுப் போகிறேன்
இப்படியே.

(2) MY PET
Grateful for being fed
It would die for our sake, it seems
Due to a crack in the rectangular container
It shifted
to a small vessel
for a few days
On another day
I picked it up writhing on the floor
And put it in the water
Right before my eyes
Through the fin
Its life departed
At once it soared high
a tiny bird
and as one
ripe in life
blessing me
“Long live thee”.

வளர்ப்புப் பிராணி
உணவுண்ட நன்றிக்கு
தன்னுயிர் தருமாம்
செவ்வக விரிசலில்
இடம் மாறியது
சிறுபாத்திரத்திற்கு
சிலநாள்
பிறிதொரு நாளில்
தரையில் தவித்ததை
தண்ணீரில் விட்டேன்
கண்முன்னே
செதில்வழியே
உயிர் பிரிந்தது
விருட்டென்று
சிறுபறவையாய்
வாழ்ந்து பழுத்த
வயசாளியாய்
வாழ்த்திச் சென்றது
‘நல்லா இருங்க'

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024