INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, March 7, 2024

RIYAS QURANA

 TWO POEMS BY

RIYAS QURANA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

1. SCHRODINGER’S MUSLIM


Experts were invited to examine
why we didn’t resort to rioting
In front of the Television set we are sitting anxiously
A girl with her face covered with Habaya is shown
Mosques are shown
Our eyes are agitatedly downcast
The experts begin elaborating
Starting as fundamentalists
We soon are branded terrorists
What would be the feeling of being Muslim?
It is facing Life and Death simultaneously.
How is it that whatever religion enters our land
turns into racism
_ we keep wondering
Being in front of the small screen
Corona entering our nation
is drawn towards none but us
who are a mere ten percent
and hugs us
Even our corpses are dangerous they say
We are pondering over the prospect of
munching and swallowing human bodies
when asked to pay even for death
what is the way out for us
The specialists unsatisfied are still
Debating
Bodies to be burnt
We still have with us
Soon we would be saving our skins
Slicing each other and swallowing
It would also satiate our hunger – Yes?
Till the end the experts didn’t elaborate
Why we didn’t retaliate.
Riyas Qurana
SCHRODINGER'S MUSLIM
00000000000000000000
ஏன் கலவரம் செய்யவில்லை என்பதை
ஆராய நிபுணர்கள் அழைக்கப்பட்டனர்
தொலைக்காட்சியின் முன்
பரபரப்போடு அமர்ந்திருக்கிறோம்
முகத்தை மூடிய ஹாபாயா போட்ட
ஒரு பெண் காட்டப்படுகிறார்,
பள்ளிவாயல்கள் காட்டப்படுகின்றன
பதட்டத்தோடு எங்கள் கண்கள்
குனிந்திருக்கின்றன.
நிபுணர்கள் விபரிக்கத் தொடங்குகின்றனர்
அடிப்படை வாதிகள் எனத்தொடங்கி
பயங்கரவாதிகளாகிறோம்
முஸ்லிமாக இருப்பதென்றால்
என்னவென்று உணர்வீர்கள்
வாழ்வையும் சாவையும்
ஒரே நேரத்தில் சந்திப்பதாகும்
அது எப்படி, நாட்டுக்குள் எது நுழைந்தாலும்
இனவாதியாக மதம் மாறிவிடுகிறது என
தொலைக்காட்சித் திரையின் முன்பிருந்து
யோசித்துக்கொண்டிருக்கிறோம்
நாட்டுக்குள் நுழைந்த கொரோனா
காதல்கொண்டு 10 வீதமுள்ள
எங்களைத்தான் கட்டிப்பிடிக்கிறது
எங்கள் இறந்த உடல்களும்
ஆபத்தானவை என்கிறார்கள்
உடல்களைத் தின்று விழுங்குவது பற்றி
ஆலோசனை செய்கிறோம்
மரணத்திற்கும் பணம் செலுத்த வேண்டுமென்று
கோரினால் வேறு வழியென்ன
திருப்தியடையாத நிபுணர்கள்
இன்னும் விவாதித்துக்கொண்டிருக்கின்றனர்
எரிப்பதற்கு தேவையான உடல்கள்
இன்னும் எங்களிடமிருக்கின்றன
விரைவில், எங்கள் உடல்களை
ஒருவர் மாறி ஒருவர் வெட்டித் தின்று
காப்பாற்றிக்கொள்வோம்
எங்கள் பசியையும் அது போக்குமல்லவா
கடைசிவரை அந்த நிபுணர்கள்
நாங்கள் ஏன் கலவரம் செய்யவில்லை என்பதை
விபரிக்கவே இல்லை.
.............................................................................................................................
TRANSLAOTR'S NOTE:
*SCHRODINGER’S MUSLIM
In simple terms, Schrödinger said that if you place a cat and something that could kill the cat (a radioactive atom) in a box and sealed it, you would not know if the cat were dead or alive until you opened the box, so that until the box was opened, the cat was both "dead and alive".
ஷ்ரோடிங்கரின் கருத்தாக்கம், அது எதன் பொருட்டு உருவானது (க்வாண்ட்டம் தியரி), அதில் உள்ள குறைபாடுகள் என்ன, அதன் தாக்கம் என்ன என்று நிறைய விஷயங்கள் / விவரங்கள் அகல்விரிவாகப் பேச இருக்கின்றன. ஆனால், அது இந்தக் கவிதையில் ஒரு குறீயீடாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் அளவில் அதன் எளிமையான விளக்கம் இதுதான்: ஒரு பூனையையும் பூனையைக் கொல்லக்கூடிய ஒன்றையும் (கதிரியக்க அணு) ஒரு பெட்டியில் வைத்து அடைத்தால், பெட்டி யைத் திறக்கும் வரை பூனை இறந்துவிட்டதா அல்லது உயிருடன் இருக்கிறதா என்று நமக்குத் தெரியாது, அதனால் பெட்டி திறக்கப்படும்வரை பூனை ஒரே சமயத்தில் ’இறந்தும் உயிருடனும் இருந்தது’
…………………………………………………………………………………………………………
**TRANSLATOR'S NOTE (மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:
பொதுவாக சமகால அரசியலைப் பேசும் கவிதைகளை மொழிபெயர்க்கும்போது நிறைய விஷயங்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையிருக் கிறது. பரஸ்பரப் புரிதல், நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கு பதிலாக இன்னுமின்னும் விரோத உணர்வை வளர்க்கும் நோக்கில் எழுதப்பட்டவை, எந்தவொரு மதத்தையும், மத நம்பிக்கையையும் மதிப்பழிப்பதாகப் பேசுபவை முதலிய வற்றைத் தவிர்ப்பது நல்லது என்று நினைக்கிறேன். மதம் குறித்த, ஒரு குறிப்பிட்ட மதம் குறித்த கவிஞரின் பார்வையும், மொழிபெயர்ப்பாளரின் பார்வையும் மாறுபட்டு இருக்கவும் வாய்ப்புண்டு. அது சார்ந்த முரண் மொழிபெயர்ப்பில் இடம் பெறவும் வாய்ப்புண்டு. மேலும், ஒரு கவிதைக்கான வாசகப்பிரதிகள் ஒன்றுக்கு மேற்பட் டிருக்க வழியுண்டு. கவிஞர் சொல்ல நினைத் ததற்கு எதிர்ப்போக்கில் கவிதை புரிபட, புரியவைக்கப்பட, பொருள்பெயர்க்கப்பட வழியுண்டு.
எந்த மதத்தவராக இருந்தாலும் வெகுமக்கள் பொதுவாக நல்லிணக்கத்தோடு வாழவே விரும்புகிறார்கள். அப்படி யில்லை என்று பீதியைக் கிளப்பும், அதற்கான சூழலை உருவாக்கி ஆதாயம் தேடுவோர் எல்லாத் தரப்புகளிலும் இருக்கிறார்கள். இலக்கிய வாதிகள் மத்தியிலும்கூட. பேசிப்பேசிப்பேசியே ஒரு பாதுகாப்பின்மையை மனதள விலும் அதன் வழி சமூகச்சூழலிலும் உருவாக்க அவர வர் மதங்களிலேயே கூட அதிகம் பேர் இருக்கிறார்கள்.
இதனாலெல்லாம் பாதுகாப்பின்மையை உணரும் , தான் விரும்பும் அமைதியை, இணக்கச் சூழலை இழக்க நேரும் அவலத்தை உணரும் சமூகப் பிரக்ஞையுள்ள மனிதரின் குரலாக ஒலிக்கும் இக்கவிதையை மொழிபெயர்க்க வேண்டியது அவசியம் என்று தோன்றியது. என்னால் முடிந்த அளவு சரியாக மொழிபெயர்த்திருக்கிறேன் என்று நம்புகிறேன். சில திருத்தங்கள் தேவைப்படலாம்.






(2)


When I touch you
You turn into jungle
I live in jungle
When you touch me
I become pond
You bathe in pond
Taking the pond with us
We place it in the jungle
Beasts leave the jungle
The pond turns dry
Fish leap on the ground
Writhe and die
In a narrow passage
Entwining our hands
We both travel separately.
En route
None we could meet.

நான் தொடும்போது
நீ வனமாகிறாய்
நான் வனத்தில் வசிக்கிறேன்
நீ தொடும்போது
நான் குளமாகிறேன்
நீ குளத்தில் குளிக்கிறாய்
குளத்தை எடுத்துச் சென்று
வனத்தில் வைக்கிறோம்
வனத்திலிருந்து
விலங்குகள் வெளியேறுகின்றன
குளம் வற்றுகிறது
மீன்கள் தரையில் துள்ளிவிழுந்து
துடித்து இறக்கின்றன
ஒற்றையடிப்பாதை ஒன்றில்
கைகோர்த்தபடி,
தனித்தனியே இருவரும் பயணிக்கிறோம்
வழியில் எவரையும் சந்திக்க முடியவில்லை.
றியாஸ் குரானா

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024