INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, March 7, 2024

PANDIAN KAZHAARAM DULALINGAN

 TWO POEMS BY

A POEM BY
PANDIAN KAZHAARAM DULALINGAN

Translated into English by Latha Ramakrishnan (*First Draft)


The Sunflower that buries in the evening
within itself
the Sun up above
that smears the hot yellow sun
and the silvery cool sun
in quick succession
upon the land by evening
and closes its petals
smashed all too soft and
with Tamarind added
the Lass of the Marutham terrain
applying on her face
to remove the trace of Black
For stalling its melt and Mercurial flow
and arresting it in one focal point
God gets inside meditation and offers
a boon
That which is asked
is for the primordial boon to be given
again
and again.

மஞ்சள் நிறச் சுடும் வெயிலையும்
வெண் நிறக் குளிர் வெயிலையும்
மாற்றி மாற்றி
நிலத்தின் மேல் பூசும்
வான் சூரியனை
மாலையில் தனக்குள் புதைத்து
இதழ்களை மூடும் சூரியகாந்தி
கூழாக அரைந்து
உடன் மஞ்சள் கலந்து
முகக் கருமை போகப் பூசிக் கொள்ளும்
மருத நிலக்காரியை
தினமும்
வெவ்வேறாகக் காட்டும் கண்ணாடி
பாதரசமாய் உருகி ஓடும் மனதை
ஒரு புள்ளியில் குவிக்க
தெய்வம் தியானத்திற்குள் நுழைந்து
ஒரு வரம் தருவதாகக் கூறுகிறது
கேட்கப்படுவதோ
ஆதி முதல் அதே வரம் மீண்டும் வேண்டுமென
- பாண்டியன் கழாரம் துலாலிங்கன்
.......................................................
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:
......................................................................
உருவமும் உள்ளடக்கமும் சேர்ந்ததே கவிதை. உருவமும் உள்ளடக்கமும் சேர்ந்தே ஒரு கவிதையை அருமையான கவிதையாக்குகிறது; அப்படியில்லாம லாக்குகிறது.
கவிதையை மொழிவிளையாட்டு என்று சொல்வார்கள்.
கவிதையில் நிறுத்தற்குறிகள் புரிதலை ஓரளவு எளி தாக்குகின்றன. ஒரேயடியாக எளிதாக்குகின்றன என்று சொல்லிவிட முடியாது.
நிறுத்தற்குறிகளற்ற கவிதைகள் புரிதலைக் கடினமாக்கி னாலும், கவிதையின் பல பிரதிகளுக்கான சாத்தியப் பாடுக ளையும் முன்வைக்கின்றன.
மொழிபெயர்ப்பாளர் வாசகராக ஒரு கவிதையை விரும்பித் தேர்ந்து மொழிபெயர்க்க முனையும்போது கவிதையில் இடம்பெறும் நிறுத்தற்குறிகள் அவருடைய பணியை ஓரளவு (ஓரளவே) சுலபமாக்குகின்றன எனலாம்.
அதிலும்கூட, மூலமொழி, இலக்குமொழி இரண்டிற்கு மிடையேயான இலக்கணரீதி யான மொழியியல் கட்டமைப்பு சார் வேறுபாடுகள் சரியான பொருள் பெயர்ப்பிலிருந்தும் மொழிபெயர்ப்பிலிருந்தும் மொழிபெயர்ப்பாளரைத் தள்ளிவைக்கும்.
ஆனல், நிறுத்தற்குறிகளற்ற கவிதை ஒரு வாசகராக ஓரளவு தெளிவாகப் புரிந்தாலும் புரிந்ததை அதேயள வாய் மொழிபெயர்ப்பது மிகக் கடினமான காரியமாகவே இருக்கும்.
சில கவிதைகள் நிறுத்தற்குறிகளற்றிருந்தாலும் படிக்கும்போது நமக்கு அங்கங்கே மறைந்துள்ள முற்றுப் புள்ளி, ஆச்சரியக்குறி, கமா, ஹைஃபென் போன்றவை காணக்கிடைத்துவிடும்!
ஆனால், நிறுத்தற்குறிகளற்ற சில கவிதைகள் உண்மை யாகவே எங்கே ஆரம்பித்து எங்கே முடிகிறது என்பதே முழுவதும் தெளிவாகாதபடி அடர்பனிமூட்டத்தில் அமைந்திருக்கும்.
கவிஞர் இதை ஆற்றொழுக்காகவும் கட்டமைத்திருக் கலாம். மொழிப்பரி சோதனையா கவும் உருவாக்கியிருக்கலாம்.
இங்கே நான் மொழிபெயர்த்திருக்கும் கவிதை தோழர் பாண்டியன் காழரம் துலா லிங்கன் எழுதியுள்ளது. இந்தக் கவிதையில் சொற்கள் ஒரு நீள்தொடர்ச்சியாக, ஒரு வட்டச்சுழற்சியாகக் கட்டமைந்திருக்கிறது.
ஒருமுறை படிக்கும்போது மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கவிதையைப் பொருள் கொள்ள முடிகிறது.
இன்னொருமுறை படிக்கும்போது கவிதை மொத்தமும் ஒரே நீள் வாக்கியமாக அமைந்தி ருப்பதாய் அதற்கேற்ப பொருள்கொள்ள முடிகிறது.
கிடைத்த அர்த்தக்கூறுகளில் ஒன்றைப் பற்றிக் கொண்டு மொழிபெயர்க்க முயன்றிருக் கிறேன்.
இரண்டு மூன்று முறை திருத்தவேண்டிவரலாம்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE