THREE POEMS BY
MOUNA RUMI
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
In each stop
and continues to travel.
Why is she leaving herself there
She knows not.
Also, after leaving herself there
what should be done
remains unknown.
With the hope that her destination
would indeed arrive
She makes herself alight
in each stop.
***
ஒவ்வொரு நிறுத்தத்திலும் அவள்
தன்னை இறக்கி விட்டுவிட்டு
தொடர்ந்து பயணித்தாள்
ஏன் தன்னை இங்கே விடுகிறேன் என
அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை
தன்னை விட்ட பிறகு என்ன செய்ய வேண்டும்
எனவும்
அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை
தனக்கான நிறுத்தமும் வந்துவிடும்
என்ற நம்பிக்கையில்
அவள் ஒவ்வொரு நிறுத்தத்திலும்
தன்னை இறக்கி விடுகிறாள்
*** ***
(2)
Late by a minute
She had missed the bus.
Even after that
Buses did arrive.
But She
In one minute
had gone past a Life.
ஒரு நிமிட தாமதத்தால்
தனது பேருந்தை தவறவிட்டிருந்தாள்
அதன் பின்னரும்
பேருந்துகள் வந்தன
ஆனால்
அவளோ
ஒரு நிமிடத்தில்
ஒரு வாழ்வை கடந்துவிட்டாள்.
(3)
Unchanged uncontaminated
not decreasing in volume, density
never decaying
_ so should retain a Love
How?
If we have wings as fan
Silence as language
Freedom as a cabin
with window
preserving a Love
would be quite easy somehow.
.
மாறாமலும் போகாமலும்
கலக்காமலும்
கெட்டுப்போகாமலும்
காலாவதியாகாமலும் குறையாமலும்
ஒரு நேசத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும்
சிறகுகளை விசிறியாகவும்
மவுனத்தை மொழியாகவும்
சுதந்திரத்தை ஒரு சன்னல்
வைத்த அறையாகவும்
கொண்டால்
ஒரு நேசத்தை
தக்கவைத்துக்கொள்வது
மற்றபடி ஒன்றும்
அவ்வளவு கடினமில்லை.
No comments:
Post a Comment