A POEM BY
MALINI MALA
The moment they realize that you arrive
Many turn restive
The heart quivers and the body grows sweaty
As scratching a line across the heart
with the violin string
the heart experiences the pleasure of a gentle-ache
and acquiesce.
Everything else vanishes from the heart at once.
Suffice to have all these symptoms
to realize
that you have captured me with
cancerous intensity.
Still
However malignant you are
You spread inside one and all as
a chronicle ailment
Which none here desire
to get cured of and be free.
Condemnations galore
Curses many more
come your way
Yet redeeming life
you remain a magical boon
that Time can’t steal;
at the same time a wound unseen
that Time can’t heal.
You too seem to be wary of being in leash
Who, Upon being tied with a bit of rope
or in the circle of ring
breaks off the shackles
and leaves
resemble God.
God is a Faith
God is solace
God is an inner stir
God is the core-point of
the very life.
God is
a little imagination alright.
If accessed
Devotion to God
turns to not.
As long as we on our part
keeping it at a distance
and holding it close to the heart
You and God are one in essence
Malini Mala
இங்ஙனம் காதலுக்கு...
..................................................
.
நீ வருகின்றாய் என்று உணரும் போதே
பதட்டமாகி விடுகிறது பலருக்கு.
உளம் நடுங்கி உடல் வியர்க்கிறது.
வயலினின் நரம்பெடுத்து
இதயத்தின் நடுவே கோடிழுத்தாற் போல்
மென்வலி இன்பத்தில்
இசைகிறது மனம்.
மற்றனைத்தும் மனதிலிருந்து
மாயமாகின்றன.
இத்தனை அறிகுறிகளும்
போதுமாக இருக்கின்றன
புற்றுநோயின் தீவிரத்துடன்
நீ பற்றிக்கொண்டாய் என்பதுணர.
இருந்தும்,
புவியில் எவரும்
தீர்த்துக் கொள்ள விரும்பா
நோயெனப் படர்கிறாய்.
அதிகமாய் திட்டுகளும்,
அதனிலும் அதிக சாபங்களும்
பெற்றுக்கொண்ட போதும்,
உயிரை உய்விக்கும்
காலத்தால் அழியா மாயம் நீ.
காலம் ஆற்றவொண்ணா காயமும் நீ.
கட்டுகள் உனக்கும்
பிடிப்பதில்லைப் போலிருக்கின்றது.
துண்டுக் கயிற்றிலோ,
கணையாழி வளையத்திலோ
கட்டிப் போடுகையில்,
திமிறிக்கொண்டு வெளியேறி விடும்
உனக்கு,
கடவுளின் சாயல்.
கடவுள் என்பது நம்பிக்கை,
கடவுள் என்பது ஆறுதல்,
கடவுள் என்பது அகக்கிளர்ச்சி,
கடவுள் என்பது உயிர் இயக்கத்தின் கருப்புள்ளி,
கடவுள் என்பது இறுதித் தீர்வு,
கடவுள் என்பது கொஞ்சம் கற்பனையும்.
கையில் கிடைத்து விட்டால்
பக்தி அறுந்து போகிறது கடவுளிடம்.
சற்றுத் தூரமாய் வைத்து
மனதில் காவும் வரை
நீயும் கடவுளும் ஒன்று.
.
No comments:
Post a Comment