INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, March 7, 2024

AJAYAN BALA BASKARAN

A POEM BY

AJAYAN BALA BASKARAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

EX-BELOVED’S HUBBY


Yesterday I was waiting in Pondy Bazaar
to see the husband of my ex-lover
I know not how he looks like
Would go this way at this time
In a bike – that’s all the clue
In which shade he would be wearing his shirt
crop or helmet
Does he wear spectacles, wristwatch
Scooty or ducati
I know nothing at all
But, ex-beloved’s husband would come this way only
If he comes to know of my standing here
what would he think
- I can only blink.
This is how I have seen my ex-beloved’s mother
or sister brother
father, even grandparents
and lived on.
On those occasions
my heart would experience joy in abundance
of having played the hero
inside the lines of a novel or short story.
Friends, you at least might write a tale
captioned
At Pondy bazaar searching for ex-beloved’s ‘better-half ‘
When you do write
Just add a line without fail
About that long rainy day
When the two strolled along
under the same umbrella
all the way

பழைய காதலியின் கணவன்
நேற்று பாண்டி பஜாரில் காத்திருந்தேன்
பழைய காதலியின் கணவனை பார்க்க
அவன் கறுப்பா சிவப்பா
எதுவும் தெரியாது
இந்த பக்கமாக் இத்தனை மணிக்கு
அவன் பைக்கில் போவான்
அவ்வளவுதான் குறிப்பு
அவன் எந்த நிறத்தில் சட்டையணிந்திருப்பன்
கிராப்பா ஹெல்மட்டா
கண்ணாடி,கைகடிகாரம் உண்டா
ஸ்கூட்டியா டுகாட்டியா
எதுவுமே தெரியாது
ஆனால் பழைய காதலியின்
கணவன் இந்தவழியாகத்தான் வருவான்
அப்படி வருபவனுக்கு
இப்படி நான் நிற்பது தெரிந்தால்;
என்ன நினைப்பான்
அதுவும் தெரியாது
பழைய காதலியின் அம்மாவை
அல்லது சகோதரியை சகோதரனை
அப்பாவை தாத்தாவை பாட்டியைக்கூட
இப்படித்தான் பார்த்து வாந்திருக்கிறேன்
அச்சமயங்கலில் ஒரு நாவல்
அல்லது சிறுகதையின் ‘
வரிகளூக்குள் நாயகனாக நடித்த
மகிழ்ச்சி பொங்கும்
நண்பர்களே நீங்களாவது
பாண்டிபஜாரில் பழைய காதலியின் கணவனைத் தேடி
எனும் தலைப்பில் ஒருகதை எழுதலாம்
அப்படி எழுதும் போது
ஒரே வரி மட்டும் சேர்த்து எழுதிவிடுங்கள்
ஒரு மாலையில் ஒரே குடையில்
இருவரும் நடந்து சென்ற அந்த
நீண்ட மழை நாளை
...
அஜயன்பாலா . பாஸ்
-- ஒரு beta male கவிதை

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024