INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, March 7, 2024

SEENU RAMASAMY

TWO POEMS BY

SEENU RAMASAMY

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



(1)
THE VISION OF DAUGHTER DEAREST

Door closed
forever glowing lamp radiant
_ the sanctum sanctorum.
In the quiet space of the bronze-tongues of bells
the Yaazhis descend
and lie rolling to one side.
Small elephants
Sway a little.
Mother with her exclusive power
opens the doors of the sanctum sanctorum
without waking up her little daughter
sleeping there
without completing the portrait.
Through the divine vision of the depiction
I pay my devout reverence
to Mother God Ammai’s munificence.

(*Dedicated to sister Bavatharini)

ஓவிய மகள்
.............
தூண்டா மணி விளக்கு சுடர்கிற
மூடிய கோயிலின்
கர்ப்பக்கிரகம்,
வெண்கல மணி நாவுகளின்
மௌன வெளியில்
யாழிகள் இறங்கி
புரண்டு படுக்கின்றன.
சிறிய யானைகள்
அசைந்து கொடுக்கின்றன
தாய் தன் விசேஷ சக்தியால்
மூலஸ்தானத்தின் கதவுகளை திறக்கிறாள்
ஓவியத்தை நிறைவு செய்யாமல் பாதியில் உறங்கிய இளைய மகளை
அம்மை எழுப்பவில்லை,
ஓவிய தரிசனத்தின் வழியே
அம்மையின் கருணை அருளுக்கு நான் கை கூப்பினேன்.
சீனு ராமசாமி

( தங்கை பவதாரிணிக்கு )


2. HIS BODY

He bought two wheels to the legs
As it sped past along the way
she heard not what he intended to say.
He bought her a helmet
With head weighing heavy
She went on
Ignoring his eyes lovelorn
She asked for her heart an engine
and he did buy one
Excited at flying all too fast
She went round and round
with her eyes failing to see him
standing on the ground.
He gave her the key of a new house
and she forgot to unlock the cabin-cage door
wherein she has confined him evermore.
He the man drawn towards a metallic lass
and buys her all that she asks for
a heart that is lovelorn he has
and hands made of bones
Flesh and blood and nerves
sweat-secreting skin
and legs to kneel. Alas…..
............
அவன் உடல்
கால்களுக்கு இருசக்கரங்கள் வாங்கித் தந்தான்
விரைந்த வேகத்தில் அவன் சொல்ல வந்தது கேட்கவில்லை அவளுக்கு
தலைக்கு கவசம் வாங்கி தந்தான்
பிரியத்தின் கண்களை கனத்த தலையால்
பார்க்காது போனாள்.
இதயத்திற்கு இஞ்சின் கேட்டாள்
வாங்கி தந்தான்
அதிக இயக்கத்தில் பறக்கும் வியப்பில்
மண்ணில் நிற்கும் அவனை அவள் கண்களுக்கு தெரியவில்லை,
ஒரு புதிய இல்லத்தின் சாவியை தந்தான்
அவனை பூட்டிய அறை கூண்டை திறக்க மறந்தாள்.
உலோகப் பெண்ணோடு
சிநேகித்து
கேட்டதெல்லாம் வாங்கி தரும்
அவனுக்கு அன்பில் மயங்கும் இதயமும் எலும்பால் ஆன கைகளும்
ரத்தமும் சதையும் நரம்பும்
வியர்வை சுரக்கும் உடலும்
மண்டியிடக் கால்களும் இருந்தன..
சீனு ராமசாமி.


 

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024