A POEM BY
K.MOHANARANGAN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
NAME BEING NONBEING
no wonder indeed.
The real name in the records
Another to be used by the household members
Known as just the Initials in
work spot.
Friends mostly use codeword
none other can decipher.
For all these references
In tune with the tone and tenor of the voices
that call
there remain
memories exclusive in heart’s racks!
When you start calling a person
in a name unknown to any
so uniquely
a world for
just the two of you
with its secrets integral
comes to be.
When midway
for some reason
one of the two goes away
their world’s sheer aloneness
with none to address
turns the remaining one
go crazy anon
and wander with name gone oblivion.
க. மோகனரங்கன்
•
பெயரழிதல்
_______________
ஒருவருக்கு
ஒன்றிற்கு மேலும் பெயர்களிருப்பது
அவ்வளவு ஒன்றும் அதிசயமில்லை!
ஆவணங்களில் அசலான ஒன்று,
வீட்டிலுள்ளவர்கள் அழைக்க வேறொன்று,
வேலையிடத்தில் அறியப்படுவதோ
வெறும் தலைப்பெழுத்துகளாக மாத்திரமே !
நண்பர்கள் பாவிப்பதோ
பெரும்பாலும் குழுஉக்குறி
வேறெவருக்கும் புரியாது .
இத்தனை விளிகளுக்கும்
அழைத்திடும் குரல்களின் தொனிக்குத் தக ,
மனத்தின் அடுக்குகளில்
தனி நினைவுகள் உண்டு !
பிறர் யாருமறியாத பெயரில் ,
பிரத்யேகமாக ஒருவரை
நீங்கள் அழைக்கத் தொடங்கும்போது ,
உங்களிருவருக்கு மட்டுமே ஆனதொரு
உலகம் அதன் இரகசியங்களோடு பிறக்கிறது !
இடையில் ஏதோ காரணம்பற்றி
ஒருவர் விலகும்போது
எஞ்சிய மற்றவரை ,
அவ்வுலகின்
அழைப்பாரற்ற தனிமை
பித்தாக்கிப்
பெயர் மறந்தலையச் செய்கிறது.
No comments:
Post a Comment