A POEM BY
KAVIGNAR MAJEETH
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
DAUGHTER DEAR
This is a time of happenings mysterious; bizarre
Wolves foxes with sharp nails all too long
Vultures circling all laong
Street dogs
Ravens
Pigs parading period this is
My daughter
Nothing is known all hidden
Time this is Daughter dear
Believe not anybody
You and your mother
in nights of this time.
Please shine being doubly aware and alive.
This is a great Time
I am bed-ridden
You are well aware of that
I have lost hope on all my limbs
My dear daughter
But, on account of that
Let you not
Languish in anguish unbearable.
It is me who has come off my mother’s bosom
anew
and got into stone-caves some believe
That also I alone observe
From the songs unwritten
surrounding me either new or ancient
I relish their ragas
And trashes.
For the sake of befriending and unfriending in the foul Facebook
Falling at anybody’s feet - alas
I have become a living corpse
with my mouth verily sealed off
My Daughter….!
I live in abject fear of those
who sing our praise
and of those who stealthily block our progress
but pretend to be helpful to us
in distress
My Daughter
I live fully comprehending the reasons
that I would die soon
My Daughter
Don’t you feel sad.
There will be happiness for you
You would enjoy life more than I could
I have no Will of my own
Dear Daughter!
I plead with Time….
Pray for me with all your heart
Don’t you lose heart
Allow mother to tidy your disheveled hair
And adorn them.
Your mother is more than enough
We have no kith and kin
I too am awaiting the day of departure
It may be today
Or tomorrow
Or my life would make its exit
With your eyes missing it.
My Daughter – Death demands
Sacrificial offering.
This is a body to turn rotten
If the tomb is closed
The cry of my extinction alone
Would be wandering in the air
My daughter dear
In the destiny of your mother and yourself
A great aloneness would shroud you both.
Don’t be afraid.
The very same thing would enfold you
As cessation of obliteration.
You would be loaded with the burden of joy.
Under the shadow of Time
Paradise would pull you in.
Pray wholeheartedly with hope undiminished.
If possible chant
My eyes
Alas, still remain closed.
Therefore
The burden of life would multiply
What can I do
Seclusion born of the detest of kith and kin
Nerves and veins
Would not go hand in hand with wisdom
They are no more of course
Daughter Dear
My body would rot and decay
It came with the commands of Almighty
Worship Life
Quietly and quite rightly.
Some might have treated me indifferently
Planning it meticulously taking your own time
your life can continue anywhere ordained.
Your mother dear has the wish and hope for it
But, for that
No need to go on dreaming infinitely
Nurturing the killer instinct
Wasting away the precious hours
Daughter dear
My heart is overflowing with sorrow.
I am in no condition to pour it all out.
My body is battered with pains and ailments
But I won’t reveal any of it
Even at the time of death
It might hold me close
Through its ‘blood’ oozing hole….
My brain would indeed sprout
My daughter dear….?
Don’t you stand perplexed don’t you feel choked
My body would rot and decay in the soil
The pen that still remains between my thumb and index finger
Quivers…
I am not able to write much
Daughter Dear..
Declare not this as poetry
Deem them to be jottings in a diary
and read them accordingly.
...........................................................................................
// அமரர் கவிஞர் மஜீத் எழுதிய இக்கவிதையின் கடைசி இரண்டு வரிகள் இவை ‘
இதை கவிதையாக பிரகடனப்படுத்த வேண்டாம்.
இதை " டையரிக் குறிப்பாக்கி" வாசித்துக் கொள்.
ஆனால், கவிதையாகவே பாவித்து மொழிபெயர்த்திருக்கிறேன். சில வரிகள் தெளிவாக வில்லை. இருந்தும் தெளிவான வரிகள் மொழிபெயர்க்கவேண்டும் என்ற மன உந்துதலைத் தந்தன. முடிந்தவரை மொழிபெயர்த்திருக்கிறேன். இன்னும் செம்மைப்படுத்த முடியும். செய்வேன் – லதா ராமகிருஷ்ணன்
...........................................................................................
இது மாயா ஜாலங்கள் நிலவும் காலம்
ஓநாய்களும்
நரிகளும் - மிக நீண்ட நகங்களுடனும்
சுற்றும் கழுகுகளும்
விசர் நாய்களும்
அண்டன் காகங்களும்
பன்றிகளும் நிலவும் காலமிது மகள்.
ஏகமெல்லாம்
அறிமுகமற்ற மர்மமான காலமிது மகள்
நீங்கள் யாரையும் நம்பவும் வேண்டாம்.
உம்மாவும் நீங்களும்,
இரவுகளில். இவ்,!!!
ஜீவனுடன் மின்னுங்கள்- நன்றி
புகழ்மிக்க மகத்தான காலமிது.
நான் படுத்த பாயுடன் கிடக்கிறேன்,
அதுவும் தெரியும் உங்களுக்கு
உடலிலுள்ள உறுப்புகளில் சிறிதும்
நம்பிக்கையுமில்லை, மகள்!
அதற்காக நீங்கள் இருவரும் அலைந்து துடிக்க வேண்டாம்.
நானே
எனது தாயின் மார்பகங்களிலிருந்து
புதிதாய் கற்குகைகளுக்குள்
புகுந்து விட்டதாய் சிலர் நம்புகிறார்கள்
அதையும் நானே கவனிக்கிறேன்.
எம்மை சுற்றி புதிதாகவோ
பழைமையாகவோ
எழுதப்படாத பாடல்களிலிருந்து
அதன் ராகங்களையும்
அசிங்கங்களையும் ரசிக்கிறேன்.
அட்டுப்பிடித்த முக நூலிலிருந்து பிரிக்கவும்......?
சேர்க்கவும்......?
யாருடைய காலில் விழுந்தும்,
உயிர் வாழவும்,
வாய்க்கட்டுப் போட்ட ஜடமாகி விட்டேன்.
மகள்...!
நமது
முதுகு சொறிபவர்களையும்
முட்டுக்கட்டை போட்டு
தடவுவோர் மீதும் மிகுந்த பயத்துடன் வாழ்கிறேன், மகள்.
செத்துப்போவேன் என அலம்பித்திரியும்,
எல்லாக் காரணங்களையும்,
புரிந்து கொண்டு வாழ்கிறேன், மகள்.
நீ கலங்க வேண்டாம்.
ஒரு மகிழ்ச்சிகளுண்டு.
என்னை விட, மகிழ்ச்சிகளில்
துவள்வாய் மகள்.
என்னில்
சொந்தமான உயில் எதுவும் கிடையாது
மகள்...!
கெஞ்சிக் கேட்கிறேன், காலங்களில்...
மூழ்கி எனக்காக பிராத்தி.
மனம் நொந்து விடாதே...
கலைந்து கிடக்கும்
தலைமுடிகளை செப்பனிட்டு
உம்மாவிடம் அலங்கரிக்க விடு.
உனது, உம்மாவே போதுமானவள்.
நமக்கென்று எந்தவிதமான சொந்தங்களுமில்லை.
நானும், இன்றோ....!
நாளையோ.....!
அல்லது, உங்களின் கண்களுக்கு புலப்படாதும்,
எனது உயிர் பிரியக் கூடும்.
மகள், மரணம் பலி கொள்ளும்.
இது புழுத்துப் போகும் உடல்.
புதை குழியை மூடிவிட்டால்
என் பற்றிய அழிவின் கூச்சல் மட்டுமே
காற்றில் அலைந்து திரியும் மகள்.
உனதும், உம்மாவினதும்,
வாழ்வுக்கான நீதியில்
உங்களை உயர் தனிமை சூளும்
பயப்படாதே...
அதுவே அழியாமையாகவும் கூடும்
சந்தோஷச் சுமைகள் ஏறும்.
கால நிழலில் சுவர்க்கம்,
உங்களை அழைத்துச் செல்லும்.
நம்பிக்கையோடு தொழுது கொள்ளுங்கள்.
முடியுமானால் ஓதியும் கொள்ளுங்கள்.
எனது கண்கள்
இன்னும் திறபடவில்லையே...!
ஆகவே,
வாழ்க்கை சுமைகள் கூடும்
என்னால் என்ன செய்ய முடியும்.
உறவுகள் வெறுத்த தனிமை
நாடி நரம்புகள்,
விவேகத்திலிருந்து பிளவுபடும்,
அழிந்தும் விட்டன...!!
மகள்,
என்னுடல் புழுத்து விடும்.
அது இறை கட்டளைகளோடுதான் வந்தது.
வாழ்வை வழிபடு
அமைதியாகவும், சரியானதாகவும்,
என்னை சிலர்,
அலர்ச்சியப்படுத்தியிருக்கவும் கூடும்.
அதற்காக
மிக நிதானமாயும் திட்டமிட்டும்
பிரமானமான எங்கேயும்,
உங்கள் வாழ்வு தொடரலாம்.
அது பற்றிய ஆர்வமும் நம்பிக்கையும்
உனது அன்புத் தாயிடம் உண்டு.
அதற்காக
உயிர் காவும் கனவு காணவும் முடிவிலியுடன்,
நேரத்தை நீடிக்க வேண்டாம்.
மகள்
மனது முழுக்க துயருன்று- அதை கூறும் நிலையில் நானில்லை.
உடல் முழுக்க பாதிப்புண்டு.
உடல் முழுக்க வலிகள் உண்டு
நான்...
காட்டிக் கொள்ள மாட்டேன்
உயிர் பிரியும் நேரகாலத்தில் கூட
அது தழவிக் கொள்ளக் கூடும்.
தன்.
"குருதி" வழியும் துவாரத்தினூடே...
என் "மூளை" முளைத்துக் கொள்ளும்
மகள்...?
நீ திக்குமுக்காக திண்டாட வேண்டாம்.
எனது உடல் மண்ணுடன் புழுத்து விடும்.
இனி எனது சுட்டி விரலுக்கும்
பெருவிரலுக்குமிடையே இருக்கும் எனது பேனா துடிக்கிறது....???
அதிகமெழுத- முடியவில்லை.
மகள்....
இதை கவிதையாக பிரகடனப்படுத்த வேண்டாம்.
இதை " டையரிக் குறிப்பாக்கி" வாசித்துக் கொள்.