INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, June 22, 2026

AAKAASA MOORTHY

 A POEM BY

AAKAASA MOORTHY

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)



Taking by the hands all those who had built walls inside walls
He pulled them out
Are all these miracles
Can we eat them to our heart’s content
Asked they laughing
Hey, you madcap
Go see the doctor at once
Then he alone
Continued looking, without blinking
Can there be this boon of a dusk again
Curly hair, clouds mating
Two pearl-oysters with wide-opened mouths
Oyster giving birth
The water-colour painting
Curved and jammed
Being radiant as the rainbow
It is going to wane…
The dark-cloudy twilight hour’s
all-engulfing luminance
Going Going – Gone
Ho – how so insane ; how so insane

ஆகாச மூர்த்தி
சுவருக்குள் சுவர் கட்டி இருந்தவர்களை எல்லாம் கையைப் பிடித்து வெளியே இழுத்து வந்தான்
இதெல்லாம் அதிசயமா
இதெல்லாம் அள்ளிச் சாப்பிட முடியுமா என்றார்கள்
சிரித்தார்கள்
பைத்தியம்
போய் வைத்தியம் பார்
பிறகு அவன் மட்டும்
கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்
இப்படியொரு அந்தி இனி கிடைக்குமா
சுருட்டைத் தலைமுடி மேகத்தின் புணர்வு
இரண்டு வாய்திறந்த கடல் சிப்பிகள்
சிப்பியின் பிரசவம்
வளைந்து பிதுங்கி
வானவில்லாய் பட்டொளி வீசும் நீர்வண்ண ஓவியம்
மறையப் போகிறது
மறைகின்றது
மறைந்தே விட்டது
அந்தக் கருமேக அந்தியின் உலகாண்ட வெளிச்சம்
பைத்தியம் பைத்தியம்

ANWER BUHARI

 TWO POEMS BY

ANWER BUHARI

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

(1)

Tree I am
There is tree inside my stomach
In the hands of wind that knows not reading
A book I have become
Upon my body a woman metamorphosing into flower
buds and blooms
With men turning into fruits and hanging
prawns and shrimps videograph the procession of snails.
The eggs laid by butterflies in the nest of crow
turning into apples and flying
Not having the heart to chase away the crabs
that sell wall-clocks
I who sprout again and again is a Tree.

நான் மரம்.
எனது வயிற்றுக்குள் கடல் இருக்கிறது.....
வாசிக்கத் தெரியாத காற்றின் கையில்
புத்தகமானேன்.
எனது மேனியில் பூவாகி அரும்புகிறாள் மாது.
ஆண்கள் பழமாகித் தொங்க, நத்தைகளின் ஊர்வலத்தை இறால்கள் ஒளிப்பதிவு செய்கின்றன.
காக்கையின் கூட்டில் வண்ணத்துப்பூச்சிகள் இட்ட முட்டைகள்
ஆப்பிளாகிப் பறக்க,
சுவர்க்கடிகாரம் விற்கும் நண்டுகளை துரத்திவிட மனமின்றி
மீண்டும் மீண்டும் துளிர்க்கும் நான் மரம்.

_______________அன்வர் புஹாரி


(2)

Green Sky
Snow-pouring Sun
Sea that stands erect
Winged Fishes
Tree-climbing Fisherman
The Moon-fruit caught in his dream
_ He who aligned all one above the other
Maya threw a stone at the dream of He
Who arranged it all one above the other
Maya is an enchantress
She knows the magic of Transmigration
A Jungle of Imagination He is
Those who visit the timberland
Do come in after casting off
your common sense



ANANDHAN RAJAPUTHRAN

TWO POEMS BY
ANANDHAN RAJAPUTHRAN
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
1.THE SAME WHIP
The juggler on one side
The priest on the other
In the scream of the whip
there is Lightning
Hunger in one
Rain in another.
Nothing hurts
none.
Listening to Appeals and Prayers
simultaneously
there remains Karuppasaami
standing between
the Circus Tent
and Temple Mandap.

"ஒரே சாட்டை"
வித்தைக்காரன்
ஒருபக்கம்
பூசாரி
மற்றொருபக்கம்
சாட்டையின் அலறலில்
மின்னல் தெரிகிறது.
ஒன்றில் பசி,
மற்றொன்றில் மழை.
யாரையும்
காயப்படுத்தவில்லை
எதுவும்.
ஒரே நேரத்தில்
வேண்டுதலையும்
பிரார்த்தனையையும்
கேட்டுக்கொண்டிருக்கிறார்
கருப்பசாமி.
சர்க்கஸ் கூடாரத்திற்கும்
கோயில் மண்டபத்திற்கும்
நடுவே நின்றபடி.
அனந்தன் ராஜபுத்ரன்


2.THE SILENCE OF VIOLIN
On one side
Words as veritable rope
drag me along.
At that time
Music is but
the silent violin
hanging on the wall.
On the other side
when Music gets into me
as river perennial
Words as footwear
left on the shore
lie there
with no use whatsoever

"மௌன வயலின்"
ஒரு பக்கம்
வார்த்தைகள்
என் உள்ளத்தை
கயிறுபோல் இழுத்துச் செல்கின்றன.
அப்போது
இசை என்பது
சுவரில் தொங்கும்
மௌன வயலின்.
மற்றொரு பக்கம்
இசை
என் உடலுக்குள்
நதியாய் இறங்கும் போது,
வார்த்தைகள்
கரையில் கழற்றிவிட்ட
செருப்புகள் போல
அவசியமின்றி கிடக்கின்றன.
அனந்தன் ராஜபுத்ரன்

PON ILAVENIL B

A POEM BY
PON ILAVENIL B
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
WORD THAT CAN’T BE READ




The bus that carries along
Memories
goes on moving ahead
The deadly quiet of the ground
that holds the
word that defies reading
fills the heart.
Angst swaying and gripping
wanders in the air
Memories that turned affection
as the fragrance of happiness unmatched
and made you relish and savour
So relieving you of hunger
are flying in front
as the portrait of bus.
It is in the light
that has got lost into the distance
afar
the residual visuals and journeys
hereafter

வாசிக்க முடியாத சொல்
_________
நினைவுகளைக்
கொண்டு செல்லும் பேருந்து
முந்திச் செல்கிறது
யாராலும் வாசிக்க முடியாத
சொல்லை ஏந்தி நிற்கும்
மைதானத்தின் அமைதி
உள்ளத்தில் படர்கிறது
அசைந்து பற்றிக் கொண்ட
துயர் காற்றில் அலைகிறது
ஆனந்தத்திற்கு பிரியத்தை
வாசனையாக நுகரவிட்டு
பசி ஆற்றி திசைகளுக்குள்
மறைந்து போன நினைவுகள்
பேருந்துச் சித்திரமாக
முன்னே பறக்கிறது
தூரத்திற்குள் தொலைந்து
மஞ்சளாகிப்போன
வெளிச்சத்தில் தான் மிச்ச
காட்சிகளும் பயணங்களும்
பொன் இளவேனில்

MAHI ADHIRAN

A POEM BY
MAHI ADHIRAN
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


PICASSO’S RESONANCE BEYOND TIME
We forgot showing to the looking glass
as authentic
the flowers sans fragrance blooming in the graveyard of
words discarded -
We forgot that.
Together we drew the painting
Where a cluster of clouds sitting on a sword.
To whom we gave it
We forgot that.
Also the flame of a dream
frozen in the eyes inside closed lids of
the Here and Now
flooding
we hid it too somehow.
Taking me to be a poisonous spider
with its fibres exhausted
You created a hole in the shadow of our booze-bottles.
In that I hid myself with your memories.
Naked wayfarers with their identity lost
wade through us, going past
Splashing all the way
flesh and lard infinite sans tone and shade
oozing out of the nerves of Time
The unbearable softness of Truth
sheds off weightless feathers
in this poem’s bedroom.

பிகாசோவின் ஒலிக்கு காலமில்லை
.......................................................................................
புறக்கணிக்கப்பட்ட சொற்களின் சுடுகாட்டில்
பூத்திருக்கும் வாசமற்ற மலரை உண்மையென
ஆடியிடம் காட்டியதை மறந்துபோனோம்.
ஒரு வாளின் மீது பஞ்சுப்பொதி அமர்ந்திருக்கும்
ஓவியத்தை சேர்ந்தே வரைந்தோம். அதை
யாரிடம் அளித்தோம் என்பதை மறந்தோம்.
நிகழ்காலத்தின் இமைகள் மூடிய விழிகளில்
உறையும் ஒரு கனவுப் பிழம்பு பிரவாகம்
கொண்டதையும் மறைத்துக் கொண்டோம்
நூல் தீர்ந்துபோன விசச் சிலந்தி நானென
நினைத்து ஒரு வளையை வனைந்தாய்
நமது மதுப்புட்டிகளின் நிழலில். அதில்
உனது நினைவுகளுடன் பதுங்கிக் கொண்டேன்.
அடையாளத்தைத் தொலைத்த நிர்வாண
யாத்ரீகள் கடக்கின்றனர் நமக்கிடையில்
காலத்தின் நரம்புகளில் வழியும் வண்ணமற்ற
நிணத்தை வழியெங்கும் தெளித்தவாறு.
உண்மையின் தாங்கவொண்ணா மென்மை
பாரமற்ற சிறகுகளை உதிர்க்கிறது
இந்தக் கவிதையின் படுக்கையறையில்
Mahi Adhiran

THIRUGNANASAMPANTHAN LALITHAKOPAN (LALITHA)

A POEM BY
THIRUGNANASAMPANTHAN LALITHAKOPAN
(LALITHA)
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)



Even after sweeping and cleaning
all lover the skin of the bare patio
sand-particles all over….
The particles of the vast expanse of seashore
where legless bodies wandered
in endless searching
In the radiance of thousand torches aflame
that set fire to the sun
there still glows
the God of Bodhi Tree.
Upon the wings of the
lone bird
flying in angst
there cling still
droplets infinite of the deluge -
as the pain of an eon….

பெருக்கி
ஒதுக்கி கழித்த
பின்னும் நிர்வாண
திண்ணையின்
மேனியெங்கும்
இன்னும்
மணல் துகள்கள் .....
காலற்ற
முண்டங்களால்
உழுது திரிந்த
கடற்கரை பெருவெளியின்
துகள்கள் .....
ஒரு சூரியனை
தகனித்த ஆயிரம்
பந்தங்களின் ஒளியில்
இன்னும் சுடர் விடுகிறது
போதிமரத்து தெய்வம் ....
அந்தரித்து திரியும்
ஒற்றை பறவையின்
இறக்கையில்
இன்னும் ஒட்டியபடி
ஊழிப்பெருமழையின்
தீரா சொட்டுக்கள்
ஒரு யுகத்தின் வலியென....

-லலித்தா-

NESAMITRAN

A POEM BY
NESAMITRAN

Rendered in English by Latha Ramakrishnan (First Draft )

In truth I am not able to fill your container
to the full
With my love having stunted growth
did I touch thee
Your love as a shirt loaned
is the mercy meant for a special day
It is those small joys given amidst
sorrows intense
that keep us away from treating God
with hate absolute.
It is like a She who has not the heart
to do away with the plant
that flowers not, offers no fruit
allowing it to remain for the shade it offers
I am still there in your world
As the sugar given at the time of birth
As the salt offered at the time of burial
The colour of my Love remains the same
ever
The regret that I should have loved thee
still more fittingly
ails me always
Is there a day when the sun
has touched in all
the ocean whole?!

நேச மித்ரன்
உண்மையில் என்னால்
உன் பாத்திரத்தை முழுதும் நிரப்ப
முடியவில்லை
என் அன்பின் வளராத பாகத்தால்
உன்னைத் தீண்டினேன்
இரவல் கொடுக்கப்பட்ட
சட்டையை போன்ற உன் அன்பு
ஒரு விசேஷ நாளுக்கான
கருணை
பெரிய துன்பங்களுக்கு
நடுவே வழங்கப்படும்
சிறிய மகிழ்ச்சிகள்தான்
கடவுளை முற்றும் வெறுக்காமல்
வைத்திருக்கின்றன
சரியாய் காய்க்காத தாவரத்தை
நிழலுக்கென விட்டு வைத்திருக்கும்
வெட்டப் பிரியமில்லாத ஒருத்தியைப் போல்தான்
உன்னுலகில் நான் மிச்சமிருக்கிறேன்
பிறந்ததும் தரும்
சக்கரையைப் போல
புதைக்கும் போது இடும்
உப்பைப் போல
என் அன்பு ஒரே நிறத்தில்தான் இருக்கிறது
எப்போதும்
உன்னை
இன்னும் சரியாய் காதலித்திருக்க
வேண்டும் நான்
என்ற குறை எப்போதும் உண்டு
சூரியன் பரிபூரணமாய் கடலைத் தொட்ட நாளுண்டா என்ன ?!

A H M NAWAS

A POEM BY AHM NAWAS
A POEM BY
A H M NAWAS
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
THE LIBRARY OF BONES

Inside the body
There is a library
None has opened it
But it remains opened always.
Its books are not made of paper
They are made of bones.
Each bone bears an era
A Wound
A Laughter
A Name
An amnesia
I look at my hands
They appear as pages
With words increasingly illegible
But with meanings that can be felt.
Nerves are the trails of that library
Blood is but the cam reading that
runs through it.
At times
I feel fatigue in my shoulders
That is not the burden of age
That is the weight of Times
read
The body
doesn’t remember memories
It becomes the very memories
Each experience freezes
as a bone
Each loss
stands as an interim space.
Each instance of waiting
Unfolds as a long page
I hear a voice inside me
But
It is not words
But the sound of pages unread.
On a day I wonder
If my entire body were to be a library
What would happen?
Am I a reader in that?
Or a Book?
Or a History borne without
Reading it ever
During night
The body grows quiet
at that time
the library would be wide awake.
The bones speak softly
But their language remains incomprehensible
It is the sacred scripture
of all the days of my being.
I don’t try to stop it
For
when it urns still
Not just me
but memories too would
come to a standstill.

எலும்புகளின் நூலகம்! -
ஏ.எச்.எம். நவாஷ் (ஈழக்கவி) -
உடலுக்குள்
ஒரு நூலகம் இருக்கிறது.
அதை
யாரும் திறக்கவில்லை.
ஆனால்
அது எப்போதும் திறந்திருக்கிறது.
அதன் புத்தகங்கள்
காகிதத்தால் ஆனவை அல்ல.
எலும்புகளால் ஆனவை.
ஒவ்வொரு எலும்பும்
ஒரு காலத்தைச் சுமக்கிறது.
ஒரு காயம்.
ஒரு சிரிப்பு.
ஒரு பெயர்.
ஒரு மறதி.
நான்
என் கைகளைப் பார்க்கிறேன்.
அவை
பக்கங்களைப் போலத் தோன்றுகின்றன.
படிக்க முடியாத எழுத்துகளுடன்.
ஆனால்
உணரக்கூடிய அர்த்தத்துடன்.
நரம்புகள்
அந்த நூலகத்தின் வழித்தடங்கள்.
இரத்தம்
அதில் ஓடும் அமைதியான வாசிப்பு.
சில நேரங்களில்
நான் என் தோள்களில் சோர்வு உணர்கிறேன்.
அது
வயதின் சுமை அல்ல.
அது
படிக்கப்பட்ட காலங்களின் எடை.
உடல்
நினைவுகளை நினைவில் வைத்திருக்கவில்லை.
அது
நினைவுகளாகவே மாறுகிறது.
ஒவ்வொரு அனுபவமும்
ஒரு எலும்பாக உறைகிறது.
ஒவ்வொரு இழப்பும்
ஒரு இடைவெளியாக நிற்கிறது.
ஒவ்வொரு காத்திருப்பும்
ஒரு நீண்ட பக்கமாக விரிகிறது.
நான்
என்னுள் குரல் கேட்கிறேன்.
ஆனால்
அது வார்த்தைகள் அல்ல.
அது
படிக்கப்படாத பக்கங்களின் சத்தம்.
நான்
ஒரு நாள் நினைக்கிறேன்.
என் உடல் முழுவதும்
ஒரு நூலகமாக இருந்தால்
என்ன நடக்கும்?
அதில்
நான் வாசகனா?
அல்லது
ஒரு புத்தகமா?
அல்லது
படிக்கப்படாமல்
சுமக்கப்படும் ஒரு வரலாறா?
இரவு நேரத்தில்
உடல் அமைதியாகிறது.
அப்போது
நூலகம் விழித்திருக்கும்.
எலும்புகள்
மெல்ல பேசுகின்றன.
ஆனால்
அந்த மொழி
எனக்குப் புரியாது.
அது
நான் வாழ்ந்த
அனைத்து நாள்களின்
மறை மொழி.
நான்
அதை நிறுத்த முயலவில்லை.
ஏனெனில்
அது நிற்கும் போது
நான் மட்டுமல்ல
நினைவுகளும் நிற்கும்.



INSIGHT MARCH 2021

MULLAI AMUTHAN

  A POEM BY MULLAI AMUTHAN Rendered in English by Latha Ramakrishnan(*First Draft) We have cast away the nest with venom unleashed. Yet the ...