INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, April 5, 2025

INSIGHT - JANUARY - - MARCH 2025 PARTICIPATING POET

  INSIGHT - JANUARY - - MARCH 2025 PARTICIPATING POET 



INSIGHT - JANUARY - MARCH 2025 - PARTICIPATING POETS

 INSIGHT - JANUARY - MARCH 2025 - PARTICIPATING POETS



INSIGHT - MARCH 2025

 


PALANI BHARATHI

 INCREDIBLE ILAYARAJA

A POEM BY

PALANI BHARATHI


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


The name that reigns supreme over us
Rotating the Sun and the Moon as Music discs.

It is his Realm of Music
That is the most beautiful in the world,
so peaceful; so harmonious
There....

“Your religion or mine -
To which belongs God Divine
A Siddha keeps singing

‘Does the breeze caress us
only after knowing our caste?
Does the rain pour down
only after ascertaining which nation?
_So there sings a young man.

All remain children there
All remain the Omniscient there
The one sent to this Earth
to unearth the musical strains
hidden in this soil
and gift us the whole
is Ilayaraja, the Messenger of God
said Jayakantha - writer renowned.

Is he a seer
Or God’s messenger
or the very God for sure?

Responding to none
“I have come with the begging bowl – O My Lord
I have come with the begging bowl - O My Lord
So singing he keeps going past
One and All.

இளையராஜா...
சூரியனையும் சந்திரனையும் இசைத்தட்டுகளாகச் சுழலவிட்டு
இரவும் பகலும் நம்மை ஆட்கொண்டிருக்கும் பெயர்.

இசையில் அவர் அமைத்திருக்கிற ராஜாங்கம்தான் உலகத்திலேயே அழகானது; அமைதியானது.
அங்கே...

"உன் மதமா என் மதமா
ஆண்டவன் எந்த மதம்"
என்று ஒரு சித்தன் பாடிக்கொண்டிருக்கிறான்.

"ஜாதி என்ன கேட்டுவிட்டு
தென்றல் நம்மைத் தொடுமா ?"
தேசம் எது பார்த்துவிட்டு
மண்ணில் மழை வருமா?"
என்று ஓர் இளைஞன்
பாடிக்கொண்டிருக்கிறான்

எல்லாரும் குழந்தைகளாக இருக்கிறார்கள்...
எல்லாரும் கடவுள்களாக இருக்கிறார்கள்....

இந்த மண்ணில் மறைந்துகிடக்கும் பண்களை எல்லாம் நமக்குக் கண்டெடுத்துக் கொடுப்பதற்காக பூமிக்கு அனுப்பப்பட்ட தேவதூதன் இளையராஜா என்றார் ஜெயகாந்தன்.

அவர் ஞானியா?
தேவதூதனா?
கடவுளா?

யாருக்கும் பதில் சொல்லாமல்
"பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே" என்று பாடிக்கொண்டே அவர் எல்லோரையும் கடந்துபோய்க்கொண்டிருக்கிறார்.

பழனிபாரதி

 



ATHMAJIV

 TWO POEMS BY

ATHMAJIV
Translated into English by Latha Ramakrishnan(*first Draft)

1.THE SKY OF THE AMUSED ONLOOKER
It is from the wind that
I apprehended it.
Words were flying
on their own
statues being sculpted
not after contemplating a lot
The heart of he who watches on amused
make the birds sing – That’s all
words penned kneading the darkness
let White birds to fly in the wind.
No big secret
That Life and Death are not two
I accessed from the wind.
It is only because of the fact
that flying words go sowing the seeds
That I think not anything anytime indeed.
After all what more
Life has in store
than amusement galore.
காற்றிலிருந்துதான் அதை நான்
கைப்பற்றினேன்.
பறந்து கொண்டிருந்தன சொற்கள்
தன்னிச்சையாக.
சிந்தனை செய்தெல்லாம்
செதுக்கிக் கொண்டிருப்பதில்லை
சிலைகளை.
வேடிக்கைப் பார்க்கிறவனின் வானம்
பறவைகளை இசைக்கச் செய்கிறது
அவ்வளவுதான்.
இருளைப் பிசைந்து எழுதும் சொற்கள்
வெண்நிறப் புறாக்களை பறக்கச் செய்கிறது
காற்றில்.
பெரிய ரகசியமெல்லாம் ஒன்றுமில்லை.
மரணமும் வாழ்வும் இரண்டல்ல என்பதை
காற்றிலிருந்துதான் கைப்பற்றினேன்.
பறக்கும் சொற்கள் விதைத்துச் செல்கிறது
என்பதால்தான் நான் எப்போதும்
சிந்தனையே செய்வதில்லை.
வேடிக்கைக்குமேல் என்ன இருக்கிறது
வாழ்க்கையில்.
ஆத்மாஜீவ்

2. LIGHT DROWNED IN DARKNESS
Caused by none
Ceased by none
As being all too close
Not seen and realized at all
As the eyes of the living organism
stuck inside the cave
remain closed
Light plunged deep inside darkness
Beyond the lies of the heart
that revels declaring
the rustles of leaves struggling
in the fountain of surging quiet
to be that
There wanders invisible
the marvel that is Soul
As I, as a Whole.


IYARKKAI

A POEM BY

IYARKKAI

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

THE ANSWERING LOOK....

At the hour of the birds returning to their nest
I saw you
You remained static
The birds were going with no diversion
Not knowing what to do with this Soul
and brooding
it was then a strand of feather
came floating from above
You can go now.

பதில் பார்வை
*****************
- இயற்கை

பறவைகள் கூடு திரும்பும் நேரத்தில்
நான் உன்னைப் பார்த்தேன் உன்னிடம் எந்த அசைவும் இல்லை
பறவைகள் திசை மாறாமல் சென்று கொண்டிருந்தன
இந்த வாடிய ஆன்மாவை என்ன செய்வதென
தெரியாதிருந்த போது தான்
மேலிருந்து ஓர் இறகு மிதந்து வந்து கொண்டிருந்தது
இனி நீ போகலாம்.

RAMESH PREDAN

A POEM BY
RAMESH PREDAN
(Rendered in English by Latha Ramakrishnan[*First Draft]
SHE WHO LIVES IN THE TALE
At the border of the village
plant a tree and rear it in your name
From the seed
take notes of your story
step by step
Its life-span could touch a thousand years
You wouldn’t be alive till that time
Yet
give it in the hands of generations
succeeding thee
and so nurture it.
At the end of the tree
You would be alive breathing
and read the thousand year tale of thee
and then cease to be.
Give the name of the sea
that lies East of thee
to the newborn.
As she grows on
the fish would multiply on and on.
Along the course of the sea
daughter’s life would remain flowing
without turning dry
She the Infinite would live on
In the tale of the sea
He who knows how to tell a tale
Why fear Death
As living in the tale
When even the God dies not
He who had created the story
Would never perish in Time
Write the tale of how you had copulated with me,
chronologically.
In the endless intercourse
in our town and everywhere else
in all species with no exception
I will be born, reborn and so go on
O! Human
Turn me, this woman, immortal
by a tale.
Ramesh Predan
○ கதையில் வாழ்பவள்
ஊர் எல்லையில்
உனது பெயரில்
ஒரு மரத்தை வளர்த்தெடு
விதையிலிருந்து உனது கதையைப்
படிப்படியாகக் குறிப்பெடுத்துக்கொள்
அதன் வாழ்வுக் காலம்
ஆயிரம் ஆண்டுகளைத் தொடக்கூடியது
அதுவரை நீ இருக்கமாட்டாய்
இருப்பினும்
உன்னைத் தொடரும் தலைமுறைக்கு
மரத்தை மாற்றி மாற்றி கையளித்து வளர்த்தெடு
மரத்தின் முடிவில் நீ
உயிரோடு இருந்து
உன்னைப் பற்றிய ஆயிரமாண்டு கதையைப் படித்துவிட்டுச் சாவாய்
உனக்குக் கிழக்கேயிருக்கும்
கடலின் பெயரை
பிறந்தக் குழந்தைக்குச் சூட்டு
அவள் வளர வளர மீன் வளம்
பெருகிக்கொண்டே போகும்
கடலின் போக்கில் மகளின் உயிர்
வற்றாமலிருக்கும்
முடிவில்லாதவள் கடலைப் பற்றிய கதையில் வாழ்வாள்
கதை சொல்லத் தெரிந்தவன்
மரணத்தைக் கண்டு அஞ்சுவதேன்?
கதையில் வாழ்வதால்
கடவுளுக்கே மரணமில்லாதபோது
அந்தக் கதையைப் படைத்தவன்
காலத்தில் அழிவதில்லை
நீ என்னைப் புணர்ந்தக் கதையை
வரிசைப்படி எழுது
ஊரிலுள்ள உலகிலுள்ள
எல்லா உயிரிலுமுள்ள
முடிவில்லாக் கலவியில்
உயிர்த் தரித்துப்
பிறந்துகொண்டே இருப்பேன்
மானிடனே
ஒரு கதையால் என்னை
இறப்பில்லாதவளாக்கு.

G.ANANDHA PRABHU

A POEM BY
G.ANANDHA PRABHU

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

Father should somehow wade through this night
His face reveals the weariness of too long
a run
With no wish to rise again
the hands remain withered
In the chest rising and falling
There sits invisible one’s final hour
On the other end of this long night
there stands with its cruel smile
Medicine’s deadline.
From somewhere has come into the room
a black-hued Butterfly.
My hope keeps seeping through
the corner of those eyes
whether they would open again
proving a million- dollar question.
Upon receiving the SMS
that all arrangements have been made
The brain starts calculating the expenses thereon
shocking the heart utmost
So as to save us from the sorrow
waiting outside the closed door
At the instant when I decided never to open it
The Butterfly flew through the window
afar
I turned not
Nor saw my Father anymore.

(*மூல கவிதையில் ‘நான் திரும்பி அப்பாவைப் பார்க்கவே யில்லை’ என்ற இறுதிவரி தரும் தூலமான திரும்பிப்பார்த்த லையும், இனி திரும்பவும் பார்க்கவே முடியாத நிலையையும் (கவிஞர் இந்த இரு திரும்புதலையும்தான் திரும்ப என்ற ஒரு வார்த்தையில் குறிப்புணர்த்தியிருப்பார். அப்படியில்லை யென்றாலும் என் வாசகப்பிரதி இந்த இரண்டு திரும்பிப் பார்த்தலையும் தான் அர்த்தங்கொள்கிறது என்னும்போது மொழிபெயர்ப்பிலும் அதைக் கொண்டுவரவே விழைந்தேன். அதைக்கொண்டுவர முயன்றிருக்கிறேன். அதனாலேயே இறுதிவரிகளின் மொழிபெயர்ப்பு கொஞ்சம் விளக்கவுரை போலும் அமைந்திருக்கக்கூடும்.

இந்த இரவை
அப்பா கடந்தாக வேண்டும்.
நீண்ட ஓட்டத்தின்
களைப்பு முகத்தில் தெரிகிறது.
மீண்டெழ விருப்பமற்றதாய்
கரங்கள் துவண்டிருக்கின்றன.
மேலுங்கீழுமாய் ஏறியிறங்கும்
மார்பில் அரூபமாய் அமர்ந்திருக்கிறது
அந்திமம்.
இந்த நீள்இரவின் மறுமுனையில்
மருத்துவத்தின் காலக்கெடு
குரூரப்புன்னகையோடு நிற்கிறது.
எங்கிருந்தோ அறைக்குள் நுழைந்திருக்கிறது
கருநிற பட்டாம்பூச்சி ஒன்று.
இனி திறக்குமா எனத்தெரியாத
அந்தக்கண்களின் ஓரத்திலிருந்து
என் நம்பிக்கை கசிந்து கொண்டே இருக்கிறது.
ஏற்பாடுகள் தயார் என்று
குறுஞ்செய்தி வருகிற நொடியில்
செலவினங்களை கணக்கிடும் மூளையைக்
கண்டு அதிர்ச்சியுறுகிறது மனம்.
சாத்தப்பட்ட கதவிற்கு வெளியே
நிற்கும் துயரத்தின் பொருட்டு
கதவைத் திறக்கவே கூடாதென
நினைத்த நொடியில்
சாளரத்தின் வழியே வெளியேறிப்
பறந்தது அந்த பட்டாம்பூச்சி.
நான் திரும்பி அப்பாவை
பார்க்கவே இல்லை.
கௌ_ஆனந்தபிரபு
s

INSIGHT MARCH 2021

INSIGHT - JANUARY - - MARCH 2025 PARTICIPATING POET

  INSIGHT - JANUARY - - MARCH 2025 PARTICIPATING POET