INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, February 12, 2021

MA.KALIDAS

 TWO POEMS BY

MA.KALIDAS

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

(1)

Collecting the memories of holidays
in those tiny pits
The dices return to their original place.
The sensual pleasure of those forbidden digits
from 7 to 11 overflows
drowning the shores.
The worm called Time moves on
avoiding the fruits that having no way of ripening
turning hot and withering
Silence yearns to drop down once again
from the cracks of the room
coated with the rolling sounds.
Lonely Sundays with bag full of lessons
are awaiting the arrival of the child
bored with game unending.
As playing is one mammoth multiplication sign
the squares are drawn again
In the empty hand that eagerly expects the approval
for slipping down that very first Ace number One
just one more time
drops of moral sanitizer being sprayed.

சிறுகுழிகளில் விடுமுறை கால
நினைவுகளைச் சேமித்தபடி
பழைய இடத்திற்குத் திரும்புகின்றன
தாயக்கட்டைகள்.
விலக்கப்பட்ட 7 முதல் 11 வரையிலான எண்களின் சிற்றின்பம்
கரைபுரண்டு ஓடுகிறது.
பழுக்க வழியின்றி வெம்பத் தொடங்கும் காய்களைத் தவிர்த்து நகர்கிறது காலப்புழு.
உருளும் சப்தங்களால் பூசப்பட்ட அறையின் வெடிப்புகளிலிருந்து
மீளவும் உதிர ஏங்குகிறது மௌனம்.
தொடர் விளையாட்டால்
அலுப்புற்ற குழந்தையின் வரவுக்காகப்
பை நிறைய பாடங்களோடும் காத்திருக்கின்றன தனித்த ஞாயிறுகள்.
விளையாடுவது மாபெரும் பெருக்கல்குறியென
கட்டம் கட்டப்படுகிறது மறுபடியும்.
இன்னும் ஒரேயொரு முறை
அந்த முதல் தாயத்தை நழுவவிட அனுமதியை எதிர்நோக்கும்
வெறுங்கையில் தெளிக்கப்படுகிறது ஒழுக்கக் கிருமிநாசினி.


(2)

Wondering what to do with the key found
He stands there blinking.
Wherever you see
Locked doors only
are seen.
With key he strives to open the space
on all four sides;
takes pride imagining
that he has indeed opened something
Taking it to be the almirah key
instead of torn clothes
He wears the one kept neatly folded.
Pouring oil in bare hand
He probes the cosmos for rusted lock.
Whether the one found was original
or duplicate key
wonders he turning it this side and that side.
As like his own
He ties it in the waist-cord.
Wonder what crossed his mind _
In the well of night
dropping the key into the Ayyanar temple Hundi
without a backward glance vanishes.

ma.kalidass

கண்டெடுத்த சாவியை
என்ன செய்வதெனத் தெரியாமல் திணறுகிறான்.
எங்கு பார்த்தாலும்
பூட்டப்பட்ட கதவுகளே தென்படுகிறது.
சாவியைக் கொண்டு, நாலாபுறமும்
வெளியைத் திறக்க முயல்கிறான்.
எதையோ திறந்துவிட்டதாகவும்
பெருமை கொள்கிறான்.
பீரோ சாவியாகக் கருதி
கிழிசல் ஆடைக்குப் பதில்
மடித்து வைக்கப்பட்டதை அணிகிறான்.
வெறுங்கையில் எண்ணெய் ஊற்றி
வெட்டவெளியில்
துருப்பிடித்த பூட்டைத் துழாவுகிறான்.
கண்டெடுத்தது
மாற்றுச்சாவியா அசலா எனத்
திருப்பித் திருப்பிப் பார்க்கிறான்.
தன் சொந்த சாவியைப் போல
இடுப்புக் கயிற்றில்
இறுகத் தொங்கவிடுகிறான்.
என்ன நினைத்தானோ
நடுச்சாமத்தில் அய்யனார் கோவில் உண்டியலில் சாவியைப் போட்டவன்
திரும்பிப் பார்க்காமல் மறைகிறான்.
- மா.காளிதாஸ்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024