INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, February 12, 2021

SANKARI SIVAGANESAN

 A POEM BY

SANKARI SIVAGANESAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

Bringing rain from somewhere
a bird unknown was watering my
tree-plants.
I rose to get some grains
to appease the hunger of the bird
that quenched my plants’ appetite.
It tried to fly
and sprayed a small rain on the balcony.
My heart getting drenched began scribbling something.
“What are you writing mother?”
Asking my daughter approached me.
‘Rain-Poem’ said I.
Safeguarding herself against getting soaked in rain
she was holding an umbrella.
Still
She was getting wet
by the raindrops scattered.
Burying her face in the rainy wind
enjoying thunder lightning and other things
saying ‘suffice’ moved away
My son who stayed away from the rain
huddled in the verandah of Poesy
observed
“There is the aroma of native soil
In the very first line, mother’
It was only then
the rain began
gaining momentum within.
சங்கரி சிவகணேசன்
எங்கிருந்தோ மழையை
வாங்கி வந்து
என் தொட்டிச் செடிகளுக்கு
நீரூற்றிக் கொண்டிருந்தது
பெயரறியாப் பறவையொன்று..
என் செடிக்கு பசியாற்றிய
பறவையின் பசிக்கு
நெல்மணிகள் எடுக்க
எத்தனித்தேன் - அது
பறக்க எத்தனித்து
குட்டி மழையொன்றை
தூறிச் சென்றது பல்கனியில்...
நனைந்து கொண்டிருந்த
என் மனது ஏதோவொன்றைக்
கிறுக்கத் தொடங்கியது..
'என்னம்மா எழுதுறீங்க'
என்று கேட்டுக் கொண்டே
அருகில் வந்தாள் மகள்
'மழைக் கவிதை'
என்றேன்...
குடையோடு நின்றிருந்தாள்
நனையாதிருக்க..
ஆனாலும்
தெறித்த துளிகளில்
நனைந்து கொண்டுதானிருந்தாள்..
மழைக் காற்றில் முகம் புதைத்து
இடி.. மின்னலென
சுகித்தவள் போதுமென
நகர்ந்துவிட்டாள்...
நனையாமலே
கவிதையின் தாழ்வாரத்துள்
ஒதுங்கியிருந்த மகன்
'முதல் வரியிலே
மண்வாசனை வருகிறதும்மா'
என்றான்..
அப்போது தான் என்னுள்
மழை வலுக்கத்
தொடங்கியது..
சங்கரி சிவகணேசன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024