INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, February 12, 2021

SHARMILA VINOTHINI THIRUNAVUKARASU

 A POEM BY

SHARMILA VINOTHINI THIRUNAVUKARASU

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


Behind all smiles so radiant
a dense darkness sleeps reposing
Behind all attires all glittering
a piece of rag full of holes lies all shrunken
Behind all words that are spat
a tongue of great quietude is blabbering so loudly
As
Words not yet uttered gratifyingly
Tales not reached the Time-Line and
gone beyond
Sketches erased umpteen number of times
and drawn
The broken painting brushes
lying in their midst
The thrown away painting-mix
in myriad permutations and combinations
There keep trickling
Voices very many!!
Sharmila Vinothini Thirunavukarasu
பிரகாசிக்கும் எல்லாப்
புன்னகையின் பின்னும்
அடர் இருள் ஒன்று ஆசுவாசமாய் உறங்கிக் கொண்டிருக்கிறது,
பளிச்சிடும் எல்லா ஆடைகளின் பின்னும்
பொத்தல்களைச் சுமந்த கந்தலொன்று கசங்கிப் போய் கிடக்கிறது,
தெறித்து விழும் எல்லா வார்த்தைகளின் பின்னும்
பேரமைதின் நாவொன்று
உரக்க உரக்க உளறிக்கொண்டிருக்கிறது,
இன்னும்
நிறைவாய்ச் சொல்லப்படாத சொற்களும்
காலக் கோட்டை எட்டித் தட்டியிராத கதைகளும்
அழித்து அழித்துக் கீறப்பட்ட
சித்திரங்களும்
அவற்றின் இடையில் உடைந்துபோன
தூரிகைகளும்
தூக்கி எறியப்பட்ட வண்ணக் கலவைகளும்
நிறைந்து போனதாய்
கசிந்து கொண்டிருக்கிறது
பல குரல்கள் !!

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024