INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, July 4, 2024

INSIGHT - JUNE 2024

 




ATHMAJIV

A POEM BY
ATHMAJIV
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


GOD ALIVE


Carrying someone
struggling for life
the ambulance speeds past
Others move aside
making way for it.
The elderly man cycling
in front
slowly alights
and standing on the roadside
offers prayer
raising his eyes to the sky.
Well, if someone asks
Tell that gods are still alive.

வாழும்_கடவுள்

உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்
யாரோ ஒருவரை
சுமந்து கொண்டு விரைகிறது
அந்த அவசர ஊர்தி
ஒதுங்கி வழிவிடுகிறார்கள்
எனக்கு முன்னால்
சைக்கிளில் சென்று கொண்டிருந்த
வயதான அந்த முதியவர்
மெல்ல இறங்கி
இரண்டு கைகளையும் கூப்பி
வணங்குகிறார்
வானத்தை நோக்கி...
சாலையின் ஓரத்தில் நின்றபடி.
யாரேனும் கேட்டால் சொல்லுங்கள்
கடவுளர்கள் இன்னும் சாகவில்லை.

ஆத்மாஜீவ்



Wednesday, July 3, 2024

MULLAI AMUTHAN

 THREE POEMS BY

MULLAI AMUTHAN


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

(1)

I went to see the house
where dwelt mother
who is no more
Deserted it was.
Younger sister in the adjacent house
asking “You do like ‘Vaththal Kuzhambu
with Mural fish – Am I right?”
offered me both.
The next day she brought
mutton and many more.
The scent of Mother’s kitchenette
proved all pervading.
Father’s fishing nets tied at the corner
and the varieties of birds
running everywhere in the open courtyard
brought all the way
even today
thousands of tales
pouring them all inside my heart
as always.
இல்லாமலாகிப் போன
அம்மா இருந்த வீடு சென்றிருந்தேன்.
வெறிச்சுப்போயிருந்தது.
பக்கத்துவீட்டிலிருந்த
தங்கை வத்தல்குழம்புடன்,
முரல்மீனும் பிடிக்குமே
என
தந்தாள்.
மறுநாள்
ஆட்டிறைச்சிக் கறி என
கொண்டுவந்தாள்.
வீடு நிறைந்திருந்தது
அம்மாவின் சமையலறை வாசம்.
கோடியில் கட்டியிருந்த அப்பாவின்
மீபிடி வலைகளும்,
முற்றத்தில் ஓடித்திரிந்த பறவியினங்களும்
இன்றும்
ஆயிரம் கதைகளைக் கொண்டுவந்து
மனதுள் கொட்டியது..
முல்லைஅமுதன்

(2)


Why being angry against God
and leave without having ‘Darshan’.
True
They are ‘Prasadham’ for thee
When the boons for my prayer are not granted
Things God demanded and received
proved aplenty
That’s why I go away without waiting.
I fell in love…
Spoke of my beloved….
He took her away
I spoke about my friend-turned-betrayer.
I told about the people
My nation
My village
I spoke of all and more
Instead
Denying Life itself
Offering excuses as solace…
Tell God…
If the prayers of all these years
are sincere
Ask him to give back everything…
Let’s become Gods and see
From now on
let boons and darshans
be given by hands our own.

கடவுளிடம் கோபப்பட்டு
ஏன்
தரிசனம் பெறாமல் செல்கிறாய்.
உண்மைதான்.
உனக்கு அவை பிரசாதம்.
எனது பிரார்த்தனைக்கான
வரங்கள் தரப்படாத நிலையில்,
கடவுளே கேட்டுப்பெற்றவைகளே
அனேகமாகப்பட்டன.
அது தான் காத்திருக்காமல் செல்கிறேன்.
காதலித்தேன்..
காதலி பற்றிச் சொன்னேன்.
அவனே அருகிருத்திக்கொண்டான்..
துரோகியாகிப் போன
நண்பனைப் பற்றி எடுத்துரைத்தேன்.
மக்களைப் பற்றிச் சொன்னேன்.
எனது நாடு...
எனது கிராமம்..
என்றெல்லாம் சொன்னேன்..
மாறாக,
வாழ்க்கையையே நிராகரித்துவிட்டு,
சமாதானம் சொல்கிறது.
கடவுளிடம் சொல்..
இத்தனை வருடங்களின் பிராத்தனைகள்
உண்மையெனில்,
யாவற்றையும் மீளக் கையளித்துவிடச்சொல்...
கடவுளராக நாம் இருந்து பார்ப்போம்..
வரங்களும்,
தரிசனங்களும்
நம்மிடமிருந்தே இனி கொடுக்கப்படட்டும்...
முல்லை அமுதன்.

(3)


I was growing tall
Like a tree, said they
If a portion of the leg is cut
The height would be perfect,
They suggested.
Removing the hands
and replacing them with new ones
my height could be balanced,
said they and went away.
“Get me those flowers bloomed so high
Won’t thee”
Asked my younger sister.
“You have grown like a Kokkathadi
Getting a bride for you would be difficult indeed”,
remarked my elder sister.
In the end
‘What if the head be severed…’
They decided.
Just like father.
Mother consoled herself.
When he hung on the electric post
Mother alone cried….
Remembering father…

*Kokkathadi : Iron-crook Pole




PALANI BHARATHI

 FIVE POEMS BY

PALANI BHARATHI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)






(1)
I SAW THE MUSIC…..
Ilayaraja’s age has crossed eighty spring seasons.
He is now an octogenarian
But his Music is ever of the age of
falling in love again and again;
Of the age of dreaming everything
under the sun and rain;
Of offering everyone blessing benign
'What for we need a sceptre
to rule over this world
Suffice to have just a flute'
_ So he has proved.
The kingdom in Music that he has established
is the most beautiful and most peaceful
in the entire world.
There an enlightened soul keeps singing
“Your religion or my religion
To which belongs He, the Omniscient?”
There one and all are children;
Everyone is God pristine.
“He is a Messenger of God
sent to earth for unearthing
all Tamil strains
in this soil, hidden
deep down_”
Observed veteran writer Jayakanthan.
Is he a seer or a divine messenger
or the very God?
But, to none he responded.
“I have come with a begging bowl
My Lord… Oh, My Lord …”
With these words
He keeps moving forward
going past one and all.
...........................................................................................
கண்டேன் இசையை....
இளையராஜாவின் வயது , எண்பது வசந்தங்களைக் கடந்திருக்கிறது.
அவருக்குத்தான் வயது எண்பத்தொன்று. அவரது இசைக்கு...
எப்போதும் காதலிக்கிற வயசு.
எல்லாவற்றையும்
கனவு காண்கிற வயசு.
எல்லாரையும் ஆசீர்வதிக்கிற வயசு.
இந்த உலகத்தை ஆள்வதற்குச் செங்கோல் தேவையில்லை; ஒரு புல்லாங்குழல் போதும் என்று நிரூபித்தவர் அவர்.
இசையில் அவர் அமைத்திருக்கிற ராஜாங்கம்தான் உலகிலேயே அழகானது. அமைதியானது.
அங்கே "உன் மதமா என் மதமா
ஆண்டவன் எந்த மதம்?"
என்று ஒரு சித்தன் பாடிக்கொண்டிருக்கிறான்.
எல்லாரும் குழந்தைகளாக இருக்கிறார்கள்.
எல்லாரும் கடவுள்களாக இருக்கிறார்கள்.
"இந்த மண்ணில் மறைந்துகிடக்கும் பண்களை எல்லாம் நமக்குக் கண்டெடுத்துக் கொடுப்பதற்காக பூமிக்கு அனுப்பப்பட்ட தேவதூதன்தான் இளையராஜா" என்றார் ஜெயகாந்தன்.
அவர் ஞானியா, தேவதூதனா, கடவுளா?
ஆனால் யாருக்கும் அவர்
பதில் சொல்லவே இல்லை...
"பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே"
என்று எல்லோரையும் கடந்து போய்க்கொண்டே இருக்கிறார்.

(2)
............................................................
*திரைப்படப்பாடல்களில் மோசமான இசையினால், காட்சியமைப்பினால் காணாமல் போகும் கவித்துவமான பாடல்கள் உண்டு.
மோசமான இசையையும், காட்சியமைப்பையும் மீறி தன்னை நிலைநாட்டிக் கொள் ளும் பாடல்கள் உண்டு.
சில சமயம் சாதாரண பாடல் வரிகளும் அபாரமான இசை காரணமாக அசாதாரண மாகிவிடுவதுமுண்டு.
படத்தில் இடம்பெறும் காட்சிக்கு ஏற்றவாறு எழுதப்பட வேண்டும் என்பது திரைப்படப் பாடலுக்கான அடிப்படைத் தேவை. ஆனால், அதோடு நின்றுவிடாமல் வாழ்வு குறித்த எல்லோருக்குமான சில விஷயங்களை நினைவுகூரும், நினைவுபடுத்தும் பாடல்களே பலகாலம் பலதரப்பட்டவர்களாலும் திரும்பத்திரும்பக் கேட்டு ரசிக்கப்படுகின்றன.
பிதாமகன் படத்தில் (படம் பார்க்கவில்லை. வன்முறைக் காட்சிகள், சோகக் காட்சிகளையெல்லாம் பார்க்க முடியவில்லை என்பதால். நிறைய சமயங் களில் பூனையாகக் கண்ணை மூடிக்கொண்டிருந் தால் உலகம் இருண்டி ருப்பதைக் காணக் கிடைக் காத ஒரு பொய் நிம்மதியில் காலங் கடத்தல் கைகூடுகிறது ) இடம்பெறும் இளங் காத்து வீசுதே பாடல் அதற்கான காட்சி யமைப்போடு, கதையமைப் போடு இயல்பாகப் பொருந்தியிருக்கும் அதேசமயம், இளையராஜா வின் அபாரமான இசை யில் இடம்பெற்றிருந் தாலும் எல்லா வற்றையும் மீறி தன்னை தனியாக நிலைநிறுத்திக் கொள்ளும் கவிதை யாகவும் நிறைவான வாசிப்பனுபவத்தைத் தருவது.
இந்தக் கவித்துவமான வரிகளை என்னால் இயன்றவரை மொழிபெயர்த்திருக்கிறேன்.

Male: Soft tender breeze blows
Speaks like music that flows….
In bamboo unbent
Ragas curve and run
And clouds waking up listen

Female: In hard-rocky heart
Peacock spreads its plumes
Drizzle drops sprinkle…..
Lawns extend passage ahead
Rainbow holds umbrella above the head….

Male: Hearing the bell sound
Heart’s door opens
With beats hitherto unheard
The body floats in the air…..

Male: Soft tender breeze blows…
Speaks like Music that flows….

Female: In bamboo unbent
Ragas curve and run
And clouds waking up listen

Female: With strands of thin threads woven
into breathtaking colourful garments
Everything intricately interwoven
kinship well aligned….

Male: You, the soil that gives all
All and more without fail
Only a few have heart, alas
And there the world lasts

Male: Yesterday went by all alone
with no mate….
To accompany if there be someone
it would prove consummate……
Female: Nothing in this world remains alone
There is togetherness inherent
Just as raga in flute
and blossom being fragrant…….
Male: Soft tender breeze blows
Speaks like music that flows….

Female: In bamboo unbent
Ragas curve and run
And clouds waking up listen

Male: Ho, how come there is sky within
Day after day provides a riddle unseen
Ho, who at all knows the secret
Who at all has caused this wonder perfect

Female: Isn’t it the hand that sows seeds
which plucks flowers daily indeed
Taking the thread to twine them and _
Ho who has made them into a garland

Male: Swing, in the aerial roots of banyan tree
Parrots all would go up and down,
carefree;
Softly chant tales myriad
In wings that flutter and fold
As the mountain-river
flowing from atop
that heard not lullaby ever;
yet go seeking mother’s lap ……..
Soft tender breeze blows…
Speaks like Music that flows….

Female: In hard-rocky heart
Peacock spreads its plumes
Drizzle drops sprinkle…..
Lawns extend passage ahead

Male: Rainbow holds umbrella above the head….
Lawns extend passage ahead
Rainbow holds umbrella above the head….

Female: In bamboo unbent
Ragas curve and run
And clouds waking up listen....

Male: Hearing the bell sound
Heart’s door opens
With beats hitherto unheard
The body floats in the air…..


ஆண் : இளங்காத்து வீசுதே…
இசை போல பேசுதே…
வளையாத மூங்கிலில்…
ராகம் வளைஞ்சு ஓடுதே…
மேகம் முழிச்சு கேக்குதே…
பெண் : கரும்பாறை மனசுல…
மயில் தோகை விரிக்குதே…
மழைச்சாரல் தெரிக்குதே…
புல்வெளி பாதை விரிக்குதே…
வானவில் குடையும் புடிக்குதே…
ஆண் : மணியின் ஓசை கேட்டு…
மனக்கதவு திறக்குதே…
புதிய தாளம் போட்டு…
உடல் காற்றில் மிதக்குதே…
ஆண் : இளங்காத்து வீசுதே…
இசை போல பேசுதே…
பெண் : வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே…
மேகம் முழிச்சு கேக்குதே…
பெண் : பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும்…
நெஞ்சை அள்ளும் வண்ணத்துணி போல…
ஒன்னுக்கொன்னு தான் இணைஞ்சி இருக்கு…
உறவு எல்லாம் அமைஞ்சி இருக்கு…
ஆண் : அள்ளி அள்ளித் தந்து உறவாடும்…
அன்னமடி இந்த நிலம் போல…
சிலருக்குத்தான் மனசு இருக்கு…
உலகம் அதில் நிலைச்சு இருக்கு…
ஆண் : நேத்து தனிமையில போச்சு…
யாரும் துணை இல்ல…
யாரோ வழித்துணைக்கு வந்தால்…
ஏதும் இணை இல்லை…
பெண் : உலகத்தில் எதுவும்…
தனிச்சு இல்லையே…
குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல…
ஆண் : இளங்காத்து வீசுதே…
இசை போல பேசுதே…
பெண் : வளையாத மூங்கிலில்…
ராகம் வளைஞ்சு ஓடுதே…
மேகம் முழிச்சு கேக்குதே…
பெண் : கரும்பாறை மனசுல…
மயில் தோகை விரிக்குதே…
மழைச்சாரல் தெரிக்குதே…
புல்வெளி பாதை விரிக்குதே…
ஆண் : வானவில் குடையும் புடிக்குதே…
புல்வெளி பாதை விரிக்குதே…
வானவில் குடையும் புடிக்குதே…
ஆண் : மணியின் ஓசை கேட்டு…
மனக்கதவு திறக்குதே…
பெண் : புதிய தாளம் போட்டு…
உடல் காற்றில் மிதக்குதே…
ஆண் : ஓ… மனசுல என்ன ஆகாயம்…
தினம்தினம் அது புதிர் போடும்…
ரகசியத்தை யாரு அறிஞ்சா…
அதிசயத்தை யாரு புரிஞ்சா…
பெண் : விதை விதைக்கிற கைதானே…
மலர் பறிக்குது தினம்தோறும்…
மலர் தொடுக்க நாரை எடுத்து…
யார் தொடுத்தா மாலையாச்சு…
ஆண் : ஆலம் விழுதிலே ஊஞ்சல்…
ஆடும் கிளி எல்லாம்…
மூடும் சிறகிலே மெல்ல பேசும் கதை எல்லாம்…
தாலாட்டு கேட்டிடாமலே…
தாயின் மடியைத்தேடி ஓடும் மலைநதி போல…
பெண் : கரும்பாறை மனசுல…
மயில் தோகை விரிக்குதே…
மழைச்சாரல் தெரிக்குதே…
புல்வெளி பாதை விரிக்குதே…
ஆண் : வானவில் குடையும் புடிக்குதே…
புல்வெளி பாதை விரிக்குதே…
வானவில் குடையும் புடிக்குதே…
ஆண் : மணியின் ஓசை கேட்டு…
மனக்கதவு திறக்குதே…
பெண் : புதிய தாளம் போட்டு…
உடல் காற்றில் மிதக்குதே…

(3)

Upon the bed

Lay embedded

Your shadow.


The blanket bore
Your palm-lines all over.

Envoys of our bodies
that couldn’t entwine and
Our breaths that shook hands.

Scratches on my shoulders
caused by those glass-bangles
that you came not wearing .

When at midnight
bitten by the ant
that crept on the cot

I felt
the pain
of consummation
that didn’t happen

despite bringing thee here
and being together
My dear…
...........................................................................................
பிகு: கூடாமல்போன கூடலின் வலி - இங்கே கூடல், கூடாமல் போதல் என்பதில் இடம்பெறும் கூடல் என்ற சொல்லுக்கு இருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்களை அதேயளவாய் ஆங்கிலத்தில் கொண்டுவர முயன்றேன் முடியவில்லை - லதா ராமகிருஷ்ணன்.
...................................................................................................
படிந்துகிடந்தது
மெத்தையில்
உன் நிழல்

போர்வையில்
உன் ரேகைகள்

கலந்துகொள்ள முடியாத
நம் உடல்களின் பிரதிநிதிகள்

கைக்குலுக்கிக்கொண்ட
நமது மூச்சுகள்

தோள்களைக் கீறின
நீ அணிந்துவராத
கண்ணாடிவளையல்கள்

நள்ளிரவில்
கட்டிலில் ஊர்ந்த எறும்பு
கடித்தபோது உணர்ந்தேன்

உன்னைக்
கூட்டிவந்து
கூடாமல்போன அந்தக்
கூடலின் வலியை



(4)

Fiercer than the tiger’s roar
is its eyes’ brilliant glare.

The primitive man
treated it like a cat
chasing it and playing with it.

Behind his sturdy muscular shoulders
the rain forest
stood hiding itself.

Someone was conversing with him
with a Coca-cola bottle
and a burger
Till the time the forest go
plunging into the dark
bit by bit
and becoming extinct.

Palani Bharathi

புலியின் உறுமலைவிடவும்
உக்கிரம்
ஒளிரும் அதன் கண்கள்
ஆதிவாசி

அதைப்
பூனையைப்போல
விரட்டி விளையாடினான்

புடைத்துத் திரண்ட
அவனது தோள்களுக்குப் பின்னால்
ஒளிந்திருந்தது
மழைக்காடு

அவனிடம் ஒருவன்
பேசிக்கொண்டிருந்தான்
ஒரு கொக்கக்கோலா பாட்டிலோடும்
ஒரு பர்கரோடும்
காடு
கொஞ்சம் கொஞ்சமாக
இருளில் மறையும்வரை

#பழநிபாரதி


(5)

That Apple Tree
grew along with thee
In the wilderness
it was in a dream
That day
coldest of the winter season
It loved the most
As if it awaited its advent.
Ripe-striped pale red
sticking to your eyes
So intimately
You were partaking in its
Sweetness.
About those Apples
with stickers pasted on them
and being taken to the market
about the fax-mix spread on their skin
about the distorted alignment
concealed in the
well-organized commercial racks
about that bloody red tinge
you might have talked.
Today as it calls you in a different sway
with the scent of Apple rolling in your breath
You come running in dismay.
Dreams
being neatly arranged
in the baskets.
Palani Bharathi
அந்த ஆப்பிள்மரம்
உன் பால்யத்தோடு வளர்ந்தது
வெட்டவெளியில்
அது ஒரு கனவிலிருந்தது.

பனிப்பருவத்தின்
மிகக் குளிர்ந்த அந்த நாளை
அதற்காகக் காத்திருந்ததுபோல
அப்படி நேசித்தது.

கனிந்த வரியோடிய இளஞ்சிவப்பு
உன் விழிகளில் ஒட்டிக்கொள்ள
அவ்வளவு அந்தரங்கமாக
அதன் இனிமையில்
நீ பங்குகொண்டிருந்தாய்.

ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு
சந்தைக்குப் போகும்
ஆப்பிள்கள் பற்றி
அவற்றின் மேனியில் படர்ந்திருக்கும்
மெழுகுக்கரைசல் பற்றி
சீரான வணிகஅடுக்கில்
மறைந்திருக்கும் சீர்குலைவு பற்றி
அந்த ரத்தச் சிவப்புப் பற்றி
நீங்கள் பேசியிருக்கக் கூடும்.

இன்று வேறொரு அசைவில்
அது உன்னை அழைக்க
மூச்சில் ஆப்பிள் மணம் உருள
நீ பதற்றத்தோடு ஓடோடி வருகிறாய்.

கனவுகள்
கூடைகளில்
அடுக்கிவைக்கப்பட்டுக்கொண்டிருந்தன.


INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024