A POEM BY
SULAIHA BEGUM
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
SOME DAY YOU WOULD REALIZE IT, I SAY
Underneath the tree
my roots planted deep down
are in shape unique, you can’t see….
The gospels that I have brought
are god’s blessings
leaf after leaf
On life’s rostrum
what I have seen learnt and taught
are of myriad forms
Leaves, their tales
I hold fast
close to my heart
your blank eyes know nothing
your bleak ears listen not anything
The silence of pain root-borne
The great grand earth knows
When the sandy space of Time
Voices out
You might realize its meaning
Nothing more to tell
Fare thee well.
Sulaiha Begam
•
பின்னொரு நாளில் அறிவாய்...
வெற்று இலைகளின் சலசலப்பென்று
என் மா விருட்சத்தின் இருப்பை
நீ அடையாளம் செய்கிறாய்.
மரத்தடியில் இந்த பூமிக்குள் ஆழ ஊன்றிய
என் வேர் வடிவம் வேறு விதம்.
நான் கொண்டு வந்த நற்செய்தி
இலை இலையாய் ஒரு இறையருள்.
வாழ்வின் மேடையில் கண்டு வந்த,
கற்பித்த ஆசிரியம் கோடி வகை.
மார்போடு அணைத்திருக்கிறேன் இலைகளை,
அதன் கதைகளை.
உன் வெற்றுக் கண்கள்
அறியாது எதையும்.
உன் வெற்றுக் காதுகள்
கேளாது எவற்றையும்.
வேர்கள் சுமந்த வலியின் மௌனத்தை
மா பூமி அறியும்.
காலத்தின் மணற்பரப்பு பேசும்போது
நீ அறியக் கூடும் அதன் அர்த்தம் தனை..
வேறொன்றும் இல்லை இப்போதைக்கு..
வரட்டுமா?
கெக்கிராவ ஸுலைஹா
No comments:
Post a Comment