INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, April 21, 2024

RAMESH PREDAN

 A POEM BY

RAMESH PREDAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

1. LIGHT AND DARK



The little girl beginning to lose her baby- teeth
goes all over the nooks and crannies of the mansion
holding a candle
searching for something.
Going in front of her
“What are you searching for, my girl?”
I ask.
‘Don’t search for the dark in the night
with the help of the lamp-light’
_ said my Mother.
Not heeding to her words
from that day onwards
I keep searching each night
But am not able to spot it till date
Says the girl.
In the dim candle-light
The disappointment seen in
The face of that little girl
The European painter
Had sketched in the Major Canto
I who stand outside
of the painting drawn in that
mansion wall
of that city
of that continent
of that Time
and at the same time
inside,
alternately -
Alas, how did I get in?
At the bottom corner of the Painting
along with the painter’s signature
the year was given.
With the current year
the little girl is hundred and fifty-six years old.
The candle she holds
keeps melting and the light turns indistinct.
And little by little I plunge into obscurity.

இருளும் ஒளியும்
பால் பற்கள் விழத்தொடங்கிய சிறுமி
எரியும் மெழுகுவர்த்தியை
ஏந்தியபடி
மாளிகையின் சந்து பொந்துகளில் எதையோ தேடுகிறாள்
அவளை வழிமறித்து
என்ன தேடுகிறாய் எனக் கேட்கிறேன்.
விளக்கொளிகொண்டு இரவில் இருட்டைத் தேடிப்பார்க்காதே என்றாள்
அம்மா
சொல்பேச்சு கேட்காமல் அன்றிலிருந்து ஒவ்வோர் இரவிலும் தேடுகிறேன்
பார்வையில் தட்டுப்படவில்லை எனச் சொல்கிறாள்
கைவிளக்கு வெளிச்சத்தில்
பிஞ்சு முகத்தில் வழியும் ஏமாற்றத்தை
ஐரோப்பிய ஓவியன்
பெரும் படலத்தில் தீட்டியிருக்கிறான்.
அந்தக் காலத்திற்கு
அந்தக் கண்டத்திற்கு
அந்த நகரத்தின் மாளிகை சுவரில்
தரிக்கப்பட்டிருக்கும் அந்த ஓவியத்திற்கு வெளியே
அதே கணம் உள்ளே
மாறிமாறி நிற்கும் நான்
அங்கே எப்படிச் சென்றேன்?
ஓவியத்தின் கீழ்மூலையில்
ஓவியனின் கையொப்பத்துடன் ஆண்டு குறிக்கப்பட்டிருக்கிறது
நடப்பாண்டோடு அச்சிறுமிக்கு நூற்றியைம்பத்தாறு வயது
அவள் பிடித்திருக்கும் மெழுகுவர்த்தி
உருகித் தீர்ந்து ஒளி குன்றுகிறது
நான் படிப்படியாக இருட்டுக்குள் மூழ்குகிறேன்.

2. CONGESTION


Caught between two centuries
unable to move even two steps
ahead or backward
in the four-lane junction
I stand choking
When I get caught in the traffic jam
At the junction of the roads commencing from the horizon
surfacing in the four directions where they come face to face
and converge at the central point
and feel suffocated
With Art Philosophy Politics and all
change into something else
Getting out of this jam-packed place
carrying the god who remains as ancient as ever
making way for moving ahead
dashing against none
proves out of question.
That I am someone ancient
my religious identity bear testimony
At all times
conceiving god’s countenance
as my own
I live on till I cease to remain.
Between the two centuries
though everything mine had changed
the basic tenets of Religion remains the same.
Why am I waking you up from deep sleep
and making you sit in front
and tell this?
In atheistic life hurdles none.
God shoulders you – so you believe.
Nothing can pierce into your
body’s antiquity
Tell me a tale
to put me to sleep.
In that
releasing me caught stuck in
Time’s motion
To and fro
Plant me in the vacuum anon
Release me from the religion where you recline
and turn me godless.
Just the way the seed not digested in the belly of the
bird that poops
fall on the ground and sprout
let me sans navel surface
in the empty space.
Ramesh Predan

○ போக்குவரத்து நெரிசல்
இரண்டு நூற்றாண்டுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டு
முன்னும் பின்னும்
இரண்டு அடிகள் நகரமுடியாமல்
நெடுஞ்சாலைகளின் நான்குமுனைச் சந்திப்பில்
மூச்சுத் திணறுகிறேன்
தொடுவானில் தொடங்கும் சாலைகள்
ஒன்றையொன்று எதிர்கொள்ளும்
நான்கு திசைகளில் வெளிப்பட்டு
நடுப்புள்ளியில் குவியும்
போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறும்போது
கலை மெய்யியல் அரசியல் எல்லாம் வேறாக மாறிய நிலையில்
தொன்மை மாறாத
கடவுளைச் சுமந்துகொண்டு
யார்மீதும் இடிக்காமல் வழியுண்டாக்கி
நெரிசல் மிகுந்த இடத்திலிருந்து
வெளியேற இயலவில்லை
நான் பழமையானவன் என்பதை
மத அடையாளமே அறுதியிடுகிறது
எல்லாக் காலத்திலும் நான்
எனக்கான கடவுளின் முகத்தையே
என் முகமாகக்கொண்டு
வாழ்ந்து முடிக்கிறேன்
இரண்டு நூற்றாண்டுகளுக்கிடையே
எனக்கான எல்லாம் மாறியபோதும்
மதத்தின் அடிப்படை கட்டுமானம் மாறவில்லை
இந்த நடுயிரவில் அயர்ந்துத் தூங்கும் உன்னை எழுப்பி எதிரே அமர்த்தி
இதை ஏன் சொல்லவேண்டும்?
ஆத்திக வாழ்வில் இடுக்கண் இல்லை
கடவுள் உன்னைச் சுமப்பதாக நம்புகிறாய்
உனது உடம்பின் தொன்மைக்குள்
எதுவும் ஊடுருவ முடியாது
என்னைத் தூங்கவைக்க
ஒரு கதை சொல்
அதில் காலத்தின்
முன் பின் இயக்கத்தில்
சிக்கி நசுங்கும் என்னை விடுவித்து
வெட்டவெளியில் நிலைநிறுத்து
நீ தங்கி இளைப்பாறும் மதத்திலிருந்து
என்னை வெளியேற்றி
கடவுளற்றவனாக்கு
எச்சமிடும் பறவையின் வயிற்றில்
செரிக்காத விதை
மண்ணில் விழுந்து முளைத்தல்போலே
வெட்டவெளியில் நான்
தொப்பூழில்லாமல் எழவேண்டும்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE