INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE
Monday, April 22, 2024
ARUVI
A POEM BY
ARUVI
Translated into English by Latha Ramakrish nan(*First Draft)
The ghost holds me captive
It would stand in my way
even when I fight against it
it refuses to leave
Keeping the life-breath
it had sent off its body, it seems
And it has to merge in me, the creator;
That is the dictate of God
It insists stubbornly….
As ant released
The body enters into the house
Soon as it entered
the ghost sits in a corner!
And it drags me too
Pulling both my hands
the body laughs, talks,
listens to song
The caress of music
the ghost doesn’t hear it .
Says
it refuses to have itself fixed to my ear
“Come with me!” - it drags me calling out!
I am not able to move
A body standing next
pulls me hard
The way it pulled
I fell on the bed beside the ghost
The shirt torn and wounds all over
pain creeps as the millipede…
If I attempt to peel it off
pain curls and coils….
The heart writhing in pain
looks for snail’s moisture in vain
The ghost
wraps itself in a black coverlet.
…
•
தனித்து அலையும் பேய்...
------------------------------------------------------
மாலைக் கருக்கலில்தான்
அந்தப் பேய் பிடித்துக் கொள்கிறது...
வரும் வழியில் நிற்கும்
சண்டை போட்டாலும் போக மறுக்கிறது...
கேட்டால்
உயிரை வைத்துக் கொண்டு
உடலை மட்டும் அனுப்பிவிட்டதாம்
படைப்புத் தெய்வம்
என்னோடுதான் சேர வேண்டுமாம்...
இறைவன் உத்திரவாம்
அடம் பிடிக்கிறது...
விடுபட்ட எறும்பாய்
வீட்டுக்குள் நுழைகிறது உடல்...
நுழைந்ததும் நுழையாததுமாய்
மூலையில் உட்கார்ந்துகொள்கிறது
பேய்!
என்னையும் இருகை பிடித்து இழுக்கிறது...
உடலோ சிரிக்கிறது, பேசுகிறது
பாட்டு கேட்கிறது
இசையின் வருடல் பேய்க்கு கேட்பதில்லையாம்...
என் காதோடு
தன்னைப் பொருத்தவும் மறுக்கிறது
வா என்னோடு! வேகமாய் இழுக்கிறது!
நகர முடியவில்லை என்னால்
அருகில் நிற்கும் மற்றொரு உடல்
இழுத்துப் பிடிக்கிறது...
இழுத்த இழுப்பில்
பேயோடு சேர்ந்து படுக்கையில் விழுந்தேன்
சட்டை கிழிந்து உடலெங்கும் புண்கள்
வலி ரயில் பூச்சி போல ஊர்கிறது...
கழட்டி எறியலாம் என்றால்
வலியோ சுருண்டு கொள்கிறது...
நத்தையின் ஈரத்தை வலியுடன் எதிர்பார்க்கிறது மனது...
பேயோ
கருப்பு போர்வையில் மூடிக்கொண்டது
அருவி
THARMINI
A POEM BY
THARMINI
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
Why keep knocking on the door of a house
where none lives?
Tugging and pushing aside the screen
of matted leaves
Thoroughly fatigued you turned.
In each house there lived people – You had known.
In roads barren the sun’s heat strolls on.
Coconut trees standing like old ones
awaiting death anon.
Mango trees having fingers extending
empty hands towards the sky.
Palm-trees providing umbrella-shade
whenever you return to this land.
In the cracked wall of the well
the Banyan tree brings to life the soil.
In hands that played with the sand
In legs that stamped on barren ground
isolation creeps on.
When coming across faces known
the distance of Time in migration
seen.
ஊர் திரும்புதல்
--------------------------
ஆட்களில்லாத தெருக்களில்
நின்று
யாரோடு கதைக்கிறாய்?
யாருமில்லாத வீடொன்றின் கதவை
ஏன் தட்டிக் கொண்டிருக்கிறாய்?
கயிறு இழுத்துக் கட்டப்பட்ட படலைகளை
உலுப்பித்தள்ளி களைத்துப் போனாய்.
ஒவ்வொரு வீட்டிலும் மனிதர்கள் வாழ்ந்தனரே.
வெறித்த வீதிகளில் வெயில் நடமாடுகிறது.
சாகக் காத்திருக்கும் முதியவர்களைப்போல
தென்னைகள்.
வெறுங்கைகளை விண்ணோக்கி நீட்டும்
விரல்களுடன் மாமரங்கள்.
எப்போது திரும்பி வந்தாலும் ஒரு குடை நிழல் தரும்
பனைகள்.
வெடித்துப்போன கிணற்றுச் சுவரில்
ஆலமரம் காணியை உயிர்ப்பிக்கிறது.
மணல் அளைந்த கைகளிலும்
வெறுந்தரை மிதித்துத் திரிந்த கால்களிலும்
அந்நியம் ஊர்கிறது.
அறிந்தவர் தெரிந்தவரைக் காணும்போது
புலம்பெயர்ந்த காலத்தின் நீளம் தெரிகிறது.
-தர்மினி-
•
LARK BASKARAN
A POEM BY
LARK BASKARAN
Translated into English by Latha Ramakrishnan
In Java script
Google and Clan-Deity
As the mentor of Science
Computers right in front you
A firm pre-planning thwarting
the utterance of lies.
Though saving those searched for in Web Browsers
With whom lies the originals
The findings of Illuminatis
To work in Cyber Crime
Applying in Google.
In computer no software needs
any update
it constructs itself suitably
the map it designs including.
Till the time virus wages an attack
We can be ourselves.
The shutdown button missing
In the computer having ChromeOS starting with Data card
Set to motion with just a feather touch
Keeping you glued to the seat for ever
Miraculous indeed the computing pleasure
Facebook And WhatsApp now remain
In U-Turn
Lawsuits and inquests everywhere
For Google’s closure.
If there be any world war
It would commence from this they declare.
None there now
to safeguard Kulasaami somehow.
கூகுள் குலசாமி
---------------------------------
மாடர்ன் யுகத்தில்
ஜாவாவின் ஸ்கிரிப்டில்
கூகுளும் குலசாமியும்
அறிவியலின் ஆசானாய்
கண் முன்னே கணினிகள்
பொய் பேச முடியா முன்னேற்பாடு
வெப் பிரவுசர்களில் தேடியதை
கூகுள் டிரைவில் சேமித்தும்
அசல்கள் யாரிடத்தில்
இல்லுமினாட்டிகளின் கண்டுபிடிப்பு
சைபர் க்ரைமில் வேலை செய்ய
கூகுளில் விண்ணப்பம்
கணினியில் எந்த சாப்ட்வேருக்கும் அப்டேட் தேவையில்லை.
தானாகவே அமைத்துக் கொள்ளும்
மேப்பும் இதில் அடக்கம்
வைரஸ் தாக்கும் வரை
நாம் நாமாகவே இருக்கலாம்
டேட்டா கார்டில் தொடங்கிய குரோம். ஒ.எஸ். உள்ள கணினியில்
ஷட் டவுன் பட்டன் இருக்காததும்
தொட்டவுடன் இயங்கத் தொடங்கி காலமெல்லாம் அமர வைக்கும் அதிசயம் கவலையற்ற கம்ப்யூட்டிங்க் சுகம்
வாழ்க்கை பிரவுஸிங்கில்
அடகு வைக்க
சம்பளமில்லா வேலைகள் தினம்
பேஸ்புக்கும் வாட்ஸப்பும் யூ டேனில் நிற்கிறது
கூகுளை மூட உலகமெங்கும் விசாரணைகள்
உலகப் போர் உண்டென்றால் இதிலிருந்து தொடங்குமாம்
குலசாமியை காப்பாத்த யாருமில்லை இனி.
-லார்க் பாஸ்கரன்-
All reactions:
2Abdul Sathar and Ratnasabapathy Mahendran MullaiamuthanSHAHIBKIRAN THAKKAI
A POEM BY
SHAHIBKIRAN THAKKAI
Moment for grasping
Torment for accessing
Therefore
Life is a miracle all over.
Foes for defeating
Kin for sharing
Therefore
Enmity is forever.
Philosophy is a plain
Confusion mountain-crest
This
eulogizes the peaks.
Wisdom is a space
that can’t be shared
Intensity a simple virus
Creation an inexhaustible oblivion.
My books
Burnt light
Beauty-personified
Your looks pristine
This can be anything
But the speed of Light
is
a state.
Unlike thee.
I reiterate.
.
Shahibkiran Thakkai
•
ஒளி
°°°°°°°
உணவு சுவைக்காக
உடை ரசனைக்காக
இப்படி
காதல் ஒரு ரகசியம்.
தருணம் கைக்கொள்ள
தவிப்பு கண்டடைய
எனவே
வாழ்வு ஒரு அதிசயம்.
எதிரி வெற்றி கொள்ள
உறவு பங்கிட்டுக் கொள்ள
அதனால்
பகை ஒரு நிரந்தரம்.
தத்துவம் ஒரு சமவெளி
குழப்பம் மலையுச்சி
இது
சிகரங்களை மெச்சுகிறது.
ஞானம் பகிரமுடியாத வெளி
தீவிரம் எளிய தொற்று
படைப்பு
தீர்ந்துவிடாத வெற்று.
என் புத்தகங்கள்
எரிந்த ஒளி
அழகு
உன் முகம் அவ்வளவு.
இது எப்படி வேண்டுமானாலும்
இருக்கலாம்
ஆனால்
ஒளியின் வேகம்
ஒரு
நிலை.
உன்னைப் போலில்லை.
- சாகிப்கிரான்
PUNITHA JOTHI
A POEM BY
PUNITHA JOTHI
that we keep wandering
with loads of burden
being unaware of what they are
and carrying them allover
wandering everywhere.
That there is honey in those flowers
that have bloomed with
branches spread
and body stretched
_ the tiny ants alone
know.
The flickering flame of oil-lamp
swaying to and fro in the breeze
keeps conveying something
in my eyes.
Punitha Jothi
•
எதனையும்
எடுத்துச்செல்லமுடியாத
வாழ்வில் தான்
அத்தனை சுமைகளையும்
சுமையென அறியாமல்
சுமந்துகொண்டு
அலைகிறோம்
கிளைவிரித்து
உடல் நீட்டி மலர்ந்திருக்கும்
மலர்களில்
தேன் இருப்பதை
சிற்றெறும்புகள் மட்டுமே
அறிந்திருக்கின்றன
காற்றில்
அசைந்து,அசைந்து
ஆடும் தீபம்
என் கண்களில்
ஏதோவொன்றை
சொல்லிக்கொண்டே
இருக்கிறது.
செ.புனிதஜோதி
Subscribe to:
Posts (Atom)
INSIGHT MARCH 2021
PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT
INSIGHT PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024