INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, February 13, 2021

INSIGHT - FEBRUARY 2021

 POETS IN THIS ISSUE

 (FEB, 2021)


1. THARMINI

2. THADSAYANEE PREMINI

3. SHANMUGAM SUBRAMANIAM

4.JAYADEVAN

5.VATHILAIPRABHA

6.ABDUL JAMEEL

7.VASANTHADHEEPAN

8.SANKARI SIVAGANESAN

9.RAJAJI RAJAGOPALAN(2)

10.S.J.BABIYAN

11.BOOMA ESWARA MOORTHY

12.SRIDHAR BHARATHI

13.AASU SUBRAMANIAN

14.SINDUJA NAMASHY

15.IYYAPPA MADHAVAN

16.YUGAYUGAN(RENGARAJAN VEERASAMI)

17.RIYAZ QURANA

18.NUNDHA KUMAARUN RAAJAA

10. A.K.MUJARATH

20.MA.KALIDAS

21. SHARMILA VINOTHINI THIRUNAVUKARASU

 

Friday, February 12, 2021

THARMINI

 A POEM BY

THARMINI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

As if they had stared at each other
by chance
In a short while
they smiled unnaturally.
as deep in thought their hands rubbed against each other
they felt one another.
The water for two mugs of Tea
had boiled upon the table
between them
the ordinary Tea steaming
Now
the deal was made quietly
For drinking without bitter taste
Let each of them deposit
the sugar they require.
In the cups
images of birds
hopping hither and thither
and reeling in the rims….

தற்செயலாகத் தான் முறைத்துப் பார்த்தது போல
சற்று நேரத்தில்
செயற்கையாகப் புன்னகைத்தனர்
என்னவோ யோசினையில்
கைகள் முட்டி விட்டதாக
தொட்டுக்கொண்டனர்
இரு குவளைகளுக்கான நீர் கொதித்துவிட்டது
மேசையில்
அவர்களுக்கு நடுவில்
வெறுந்தேநீர் ஆவிவிட்டபடி
இப்போது
அமைதியாக நிறைவேறியது ஒப்பந்தம்
கசப்பின்றி அருந்த
அவரவருக்கான சீனியை அவரவர் போடட்டும்
கோப்பைகளில் பறவைகளது படங்கள்
அங்குமிங்கும் தத்தித் தாவி
விளிம்புகளில் தடுமாறி…
தர்மினி

THADSAYANEE PREMINI

 A POEM BY

THADSAYANEE PREMINI

Translated into English by Latha Ramakrish nan(*First Draft)


THE CURSE

Drifting off the crowd
a lone dove wanders all alone.
Do you know
the distinct moisture of the eyes
wounds who
As the vision of the entire sorrow
that we had exchanged when we parted
it goes around hopping
Those days we were overjoyed
pursue as dreams…..
Time enslaved by fate always …..!
Eyes that had swallowed flames
probing eyes
burn the pigeon-pair!
A solitary curse is
swinging in the tree-branch.

சாபம்
கூட்டத்திலிருந்து பிரிந்து
தனியே அலைகிறது ஒற்றைப்புறா…!
கண்களின் கூரிய ஈரம்
யாரைக் காயப்படுத்துகிறது என அறிவாயா…?
நீயும் நானும் பிரிந்த போது பரிமாறிக் கொண்ட
மொத்தத் துயரின் பிம்பமாய்
அது தத்தித் தத்தி அலைந்து கொண்டிருக்கிறது!
குதூகலித்த காலங்கள்
கனவுகளாய்த் தொடர்கின்றன…!
விதியிலிருந்து விடுபடத் தெரியாத காலம்…!
தீக்கொழுந்துகளை விழுங்கிய கண்கள்…!
குறுகுறுவென்ற பார்வை
இணைப் புறாக்களைச் சுட்டெரிக்கிறது!
தனித்த சாபம் ஒன்று
மரக்கிளையில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது…!
Thadsayanee Premini

SHANMUGAM SUBRAMANIAM

 A POEM BY

SHANMUGAM SUBRAMANIAM

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


Two chairs remain seated by none
Wonder which to occupy
I am a little confused.
Both belong to me.
Same kind, same cost
Around them a dishevelled room
On the floor a half-opened book
On seeing that, in the author’s appearance
eyes would roll and scare
The sharpness of moustache twisted upward
with a finesse
Head sans hat
Despite reading some pages many a time
His words appeared easily comprehended
once or twice
Though I feel that some change has indeed
Taken place in my everyday routine
can’t pinpoint it.
He is telling tales to his grandson
Without taking my eyes off him
and his book
I went near his grandson
and sat beside.
Shanmugam Subramaniam

இரு நாற்காலிகள்
யாரும் அமராமல் இருக்கின்றன
எதில் அமர்வது சற்று குழப்பமாகவே உள்ளது
இரண்டும் எனக்குச் சொந்தமானதுதான்
ஒரே மாதிரியானது ஒரே விலையும்கூட
சுற்றிலும் ஒழுங்குபடுத்தப்படாத அறை
தரையில் பாதிவிரிந்த நிலையில் புத்தகமொன்று
அதைப் பார்க்கும்போது எழுதியவரின் தோற்றவுருவில்
உருண்டு வெருட்டும் கண்கள்
மேல்நோக்கி லாவகமாக முறுக்கிய மீசையின் கூர்மை
தொப்பியை அணிந்திரா சிரம்
பலமுறை சில பக்கங்களை வாசித்தும்
அவர் சொல்வது ஒரிரு தடவை விளங்கியது போலிருந்தது
என் அன்றாட நடப்பில் மாறுதல்
ஈடேறியிருப்பதாகப்பதாக எண்ணினாலும்
இன்னதென்று சுட்டிக்காட்ட முடியாது
அவர் தன் பேரனுக்கு கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்
அவரையும் அந்தப் புத்தகத்தையும்
எந்நேரமும் பர்ப்பதை மட்டும் நிறுத்தாமல்
அவரது பேரனுக்கு அருகில் சென்று
நான் அமர்ந்து கொண்டேன்.
- எஸ்.சண்முகம் -


JEYADEVAN

 A POEM BY
JEYADEVAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
Though a whole sack of paddy heaped
the wagtail sparrow pecks at just a few grains
and relishing, just goes away
The scarecrow keeps looking at it fixedly
as if it would take away the entire field.
The sparrows that collect and save straw
do not store grains.
Birds believe humans
It is humans who believe not birds.
ஜெயதேவன்
ஒரு மூட்டை நெல்லைக் கொட்டி வைத்தாலும்
ஒரு சில தானியங்களைத்தான்
கொத்தித் தின்று விட்டுச் செல்கிறது
அந்த வாலாட்டிக் குருவி.
மொத்த வயலையும் தூக்கிக் கொண்டு
போய் விடுமோ என்று உற்றுப் பார்த்துக் கொண்டே இருக்கிறது
சோளக் கொல்லை பொம்மை.
வைக்கோலை சேமிக்கும் குருவிகள்
தானியம் சேமிப்பது இல்லை.
பறவைகள் மனிதனை நம்புகின்றன
மனிதன்தான் பறவைகளை நம்புவது
இல்லை.
****

VAHTILAIPRABHA

 A POEM BY

VAHTILAIPRABHA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

Running all over the village
a river with dead fish
For the fish dying
and for floating
the river alone is the cause and reason.
Like mother hen it had
safeguarded the entire region
Real majestic like the elephant
swinging its mammoth earlobes.
The river that ran with swelling belly
like python that had swallowed a deer
knows everything
it is Vairavan who played in the
massive expanse of sand
building castles
is driving the sand-lorry now.
It was Shanmugam who used to deftly catch
the Koravai fish in rock-clefts
who had painted the river
with the wastes of his factory.
The river is aware of everything.
The river that used to roar like a great deluge
and flow so boisterously
Is now lying there as a snake
turning old, emaciated and weak
The river made the ever running man
sit and repose.
He who was resting there
is now running always.
Not just ignoring the river _
but also the fact
that none allows their children
to go anywhere that side
Is also civilization
taught by the river.

ஊரெங்கும் ஓடிக்கொண்டிருந்தது
மீன்கள் செத்த நதியொன்று
மீன்கள் செத்ததற்கும்
மீன்கள் மிதப்பதற்கும் நதிதான் காரணம்.
பெட்டைக்கோழிபோல
ஊரை அடைகாத்த நதியது.
மடல் விரித்தாடும் யானைபோன்ற
கம்பீரமான நதியது.
மானை விழுங்கிய மலைப்பாம்புபோல
வயிறு பெருத்தோடிய நதிக்கு
எல்லாம் தெரியும்.
பெருமணற்பரப்பில்
வீடுகட்டி விளையாடிய வைரவன் தான்
மணல் லாரி ஓட்டுகிறான்.
பாறையிடுக்குக் கொறவை மீன்களை
வாவகமாகப் பிடித்த சண்முகம்
தன் தொழிற்சாலைக் கழிவுகளால்
நதிக்கு வர்ணம் பூசியவன்.
எல்லாம் நதிக்குத் தெரியும்.
பெருவெள்ளமென ஆர்ப்பரித்து
ஆரவாரம் செய்த நதியிப்போது
வயது முதிர்ந்து மெலிந்து தளர்ந்து
படமெடுக்க முடியாமல் சுருண்டு கிடக்கும்
பாம்புபோலக் கிடக்கிறது.
ஓடிக்கொண்டிருப்பவனை
உட்காரவைத்தது நதி.
உட்கார்ந்தவன் இப்போது
ஓடிக்கொண்டிருக்கிறான்.
நதியைப் புறக்கணிக்கச் செய்வது மட்டுமல்ல
இப்போது பிள்ளைகளை
அந்தப் பக்கம் செல்ல
யாரும் அனுமதிப்பதேயில்லை என்பதும்
நதி கற்றுத்தந்த நாகரிகம்தான்.

வதிலைபிரபா
(சமீபத்திய கவிதைத்தொகுப்பு ‘மரம் சுமக்கும் யானைகளின் பிளிறல்)

ABDUL JAMEEL

 A POEM BY

ABDUL JAMEEL

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

THROUGH THE WINDOW
Windows wide-opened
the room wants.
Each time it is banged shut
It does feel suffocated.
Let not anybody abhor windows
In order to love the wind.
It is through the windows thrown open
that we marvel at the sight of this golden world.
For someone who can’t walk since birth
windows are legs in truth!
The exquisite beauty of a cabin
lies in its tiny windows.
Rooms without windows
none wishes for.
How many of us have thrown open
our heart’s window
so thoroughly pristine….?

ஜன்னலின் வழியே
_______________
ஜன்னல்கள் அகலத்
திறந்து கிடப்பதனையே
அனேகமாக விரும்புகிறது அறை
அது இழுத்துச் சாத்தப்படும்
ஒவ்வொரு முறையும்
அதற்கு மூச்சுத் திணறல்
ஏற்படாமல் இல்லை
காற்றை நேசிப்பதற்காக
யாரும் ஜன்னல்களை
முற்றாக வெறுக்காதீர்கள்
அகலத் திறந்து கிடக்கும்
ஜன்னல்கள் ஊடாகத்தான்
இந்த தங்க உலகை
நாம் வியந்து ரசிக்கிறோம்
பிறவியிலிருந்து நடக்க
முடியா ஒருத்தனுக்கு
ஜன்னலென்பது கால்களாகும்
அறையின் பேரழகே
அதன் குட்டிக் குட்டி ஜன்னல்கள்தான்
ஜன்னல்களற்ற அறைகளை
பெரிதாக யாரும் விரும்புவதில்லை
நம்மில் எத்தனைபேர்
நமது இதயத்தின் ஜன்னலை
தூய்மையுடன் திறந்து வைத்திருக்கிறோம்
♥
ஜமீல்


s

VASANTHADHEEPAN(2)

 TWO POEMS BY

VASANTHADHEEPAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

PUPPET SHOW
In ecstasy unleashed
he jumped
With the moisture of blood
She lay there
with eyes closed.
Deep down
in the abyss unreachable
a small face
Transforming into angel
She in blank dreams
was crossing Eons and Spaces
wading through the body.
In dense forest
Light swells.
With hues multiplying
changing course
scorching jaws of sand
hauls and gulps
the yields of desire
With sobs taking roots
tears brimming
once again pulling
into the embrace of death….
She swoons with the knowledge of
her new-born girl-baby
being fed the deadly mixture
Of ‘Erukkam Paal’ and ‘Nallennai’.
Drowning the trembling night and day
into the river of flooding mother’s milk
She journeys beyond Time.
Spreading lusts so wide
He gets ready to dry the body,
drenched in passion and dripping,
for another spell of torment.


பொம்மலாட்டம்
____________________

பரவசப்பட்டு
துள்ளிக் குதித்தான்.
ரத்தப் பிசு பிசுப்போடு
அவள்
விழி மூடிக் கிடந்தாள்.
தீண்ட முடியாத ஆழத்தில்
சிறுமுகம்
தேவதையாய் உருமாற
வெற்றுக் கனவுகளில்
அவள்
காலங்களையும் வெளிகளையும்
உடலினூடாகக் கடந்து கொண்டிருந்தாள்.
அடர்த்தியான காடுகளுக்குள்
ஒளி திரள்கிறது.
வண்ணங்கள் பெருகி
திசை மாற
எரிக்கும் மணல் வாய்
விழைவுகளின் தாவரங்களை
வாரி வாரி விழுங்குகிறது.
அழுகை வேர் தரிக்க
கண்ணீர் ததும்பி
மறுபடியுமாக...
மரணத்தின் அணைப்புக்குள்
உள்ளிழுக்க...
தன் பெண் சிசுவிற்கு
எருக்கம் பாலில் நல்லெண்ணெய் கலந்து
புகட்டுவதை
அறிந்தபடி மயங்கிப் போகிறாள்.
வெட வெடக்கும்
இரவையும் பகலையும்
பால் சுரப்பு அடங்காத
திமிறலின் நதிக்குள் மூழ்கடித்து விட்டு
அவள்
அகாலத்திற்குள் பயணிக்கிறாள்.
இச்சைகளை விரித்துக் கொண்டு
இன்னொரு வதைக்காக
தாபத்தின்
ஈரம் சொட்டும் சரீரத்தை
உலர்த்த
அவன் ஆயத்தமாகிறான்.

வசந்ததீபன்


MERCIFUL TEARS MAKE ME LIVE ON

As the depth of the sea
I stay quiet.
Heart alone
with lashing waves.
All alone
I am as the shed of cremating useless old
Corpses.
Not even a handful of rice I have.
White ants inside the stomach.
The Moon and the Sun
come without fail.
Beautiful girls dance in my dreams.
My gloomy room sans light
Trembles at night.
Attires with bad odour
cover my torso.
During daytime, coming to the window
a sparrow chats with me and go.
Seeing the faraway clouds
I can perceive the mercy meant for me.
Bad, evil thoughts strive to turn me
into an animal.
Yet
I would remain an affectionate human.
கண்ணீரின் கருணையில் வாழ்கிறேன்
_______________________________________
கடலின் ஆழத்தைப் போல
அமைதியாக இருக்கிறேன்
மனசு தான்
அலையடித்துக் கொண்டிருக்கிறது
தனிமையாய்
பயனற்ற
பழைய பிணமெரிக்கும் கொட்டகையாய் இருக்கிறேன்
ஒரு பிடி அரிசி இல்லை
வயிற்றுக்குள் கரையான்கள்
நிலவும் சூரியனும்
தவறாமல் வந்து போகின்றன
அழகான பெண்கள்
என் கனவுகளில் நடனமாடுகிறார்கள்
என் வெளிச்சமற்ற அறை
இரவுகளில் நடுங்குகிறது
துர்வாசமடிக்கும் உடுப்புகள்
என் உடலை போர்த்தியிருக்கின்றன
பகலில் ஜன்னலருகே வந்து
ஒரு சிட்டுக்குருவி
என்னிடம்
பேசி விட்டுப் போகிறது
தூரத்து மேகங்களைப் பார்க்கையில்
எனக்கான கருணை தெரிகிறது
கெட்ட கெட்ட எண்ணங்கள்
என்னை
மிருகமாக்கப் பார்க்கின்றன
ஆனாலும்
அன்பான மனிதனாகவே இருப்பேன்.

வசந்ததீபன்



INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024