INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, February 12, 2021

SANKARI SIVAGANESAN

 A POEM BY

SANKARI SIVAGANESAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

Bringing rain from somewhere
a bird unknown was watering my
tree-plants.
I rose to get some grains
to appease the hunger of the bird
that quenched my plants’ appetite.
It tried to fly
and sprayed a small rain on the balcony.
My heart getting drenched began scribbling something.
“What are you writing mother?”
Asking my daughter approached me.
‘Rain-Poem’ said I.
Safeguarding herself against getting soaked in rain
she was holding an umbrella.
Still
She was getting wet
by the raindrops scattered.
Burying her face in the rainy wind
enjoying thunder lightning and other things
saying ‘suffice’ moved away
My son who stayed away from the rain
huddled in the verandah of Poesy
observed
“There is the aroma of native soil
In the very first line, mother’
It was only then
the rain began
gaining momentum within.
சங்கரி சிவகணேசன்
எங்கிருந்தோ மழையை
வாங்கி வந்து
என் தொட்டிச் செடிகளுக்கு
நீரூற்றிக் கொண்டிருந்தது
பெயரறியாப் பறவையொன்று..
என் செடிக்கு பசியாற்றிய
பறவையின் பசிக்கு
நெல்மணிகள் எடுக்க
எத்தனித்தேன் - அது
பறக்க எத்தனித்து
குட்டி மழையொன்றை
தூறிச் சென்றது பல்கனியில்...
நனைந்து கொண்டிருந்த
என் மனது ஏதோவொன்றைக்
கிறுக்கத் தொடங்கியது..
'என்னம்மா எழுதுறீங்க'
என்று கேட்டுக் கொண்டே
அருகில் வந்தாள் மகள்
'மழைக் கவிதை'
என்றேன்...
குடையோடு நின்றிருந்தாள்
நனையாதிருக்க..
ஆனாலும்
தெறித்த துளிகளில்
நனைந்து கொண்டுதானிருந்தாள்..
மழைக் காற்றில் முகம் புதைத்து
இடி.. மின்னலென
சுகித்தவள் போதுமென
நகர்ந்துவிட்டாள்...
நனையாமலே
கவிதையின் தாழ்வாரத்துள்
ஒதுங்கியிருந்த மகன்
'முதல் வரியிலே
மண்வாசனை வருகிறதும்மா'
என்றான்..
அப்போது தான் என்னுள்
மழை வலுக்கத்
தொடங்கியது..
சங்கரி சிவகணேசன்

RAJAJI RAJAGOPALAN(MANARKAADAR)

 TWO POEMS BY

RAJAJI RAJAGOPALAN



Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



(1)

Is there a ‘Golden-Lotus-Pond’ in your place
No, not a pond of that sort
Then what at all there so special
Well, there is pond there is lotus

• Potraamaraikulam – goldenlotuspond


உங்கள் ஊரில் பொற்றாமரைக்குளம் இருக்கிறதா
அப்படி ஒரு குளம் இல்லை
அப்போ உங்கள் ஊரில்
விசேடமாக என்னதான் இருக்கிறது
குளம் இருக்கிறது தாமரை இருக்கிறது

மணற்காடர்
(சமீபத்திய தொகுப்பு ‘ஒரு சிறு புள்ளின் இறகு)


(2)

When I looked at my own shadow
wonder-struck
A cloud came and stole it off
Then, wonder what it thought
It returned my shadow
It might’ve thought that I would
admonish it
for it hid itself behind another cloud
The clouds must’ve learnt their lessons
From children.

என் நிழலையே நான் பார்த்து வியந்தபோது
ஒரு மேகம் வந்து அதைத் திருடிச் சென்றது
பிறகு என்ன நினைத்துக்கொண்டதோ
திருப்பி என் நிழலைத் தந்துவிட்டது
நான் திட்டுவேனென்று எண்ணிக்கொண்டதோ
இன்னொரு மேகத்தின் பின்னால் ஒளிந்துகொண்டது
மேகங்கள்
குழந்தைகளிடம் பாடம் படித்திருக்கலாம்.
மணற்காடர்
(சமீபத்திய தொகுப்பு ‘ஒரு சிறு புள்ளின் இறகு)

S.J.BABIYAN

 A POEM BY

S.J.BABIYAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

Everywhere on the road
Human emotions lay scattered
Emerging out of the lot I stand
Faraway
the tree and the crow
and the fox standing beneath
are seen.
The raging lions that befriended one another
believing the words of fox
glared furiously.
There remained still
the ‘Vadaa’ in crow’s mouth!
The fox stood there waiting for a sweet song.
Expectation for relishing the Vadaa in full
everyone nurtured.
The crow appearing rapturous
being eulogized by the fox
In the mouth that cherished life
as the slipping Vadaa
with saliva oozing
and dripping on the land
the unscrupulous ones lying in wait
for a lone drop
turned frantic and distressed.
Holding the Vadaa between its feet
the crow cawing as usual
the fox was fooled as before.
The ants all over the mountain
began collecting and eating the particles of Vadaa
that the crow’s toes had scratched
and caused to scatter.
செ.ஜெ பபியான்
வீதி எங்கும்
மனித உணர்ச்சிகள்
சிதறி கிடந்தன..
அதிலிருந்து எழுந்து
நிற்கிறேன்.
தூரத்தில்
மரத்தில் காகமும்
கீழே நரியும் இருப்பது
தெரிகிறது.
நரியின் பேச்சை
நம்பி தோழமை கொண்ட
சீறும் சிங்கங்கள்
சீற்றத்தோடு முறைத்து பார்த்தன.
காகத்தின் வாயில்
இன்னும் இருந்தது வடை!
அழகிய பாடலுக்காய் காத்திருந்தது நரி
முழு வடையை குறித்து எதிர்பார்ப்பு
எல்லோருக்கும் இருந்தது.
நரி புகழுரையில்
காகம் மயங்கியது போலிருக்க
தவறி விழுந்திடும்
வடையென
ஜீவன் காத்த வாயில்
எச்சில் வடிந்து
நிலத்தின் மீது விழ
ஒற்றைத் துளிக்காய்
பார்த்திருந்த பதர்கள்
பதறி தவித்தன.
காலில் வடை வைத்து
காகம் எப்போதும் போல
கா... கா.. என கரைய
வழமை போன்று
ஏமாந்தது நரி
காகத்தின் விரல் கீறி
சிந்திய வடையின்
துகள்களை
பொறுக்கி தின்னத் தொடங்கின
மலை எங்கும் வியாபித்திருந்த எறும்புகள்.!

BOOMA ESWARAMOORTHY

 A POEM BY

BOOMA ESWARAMOORTHY

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

The wind passed by flowers dropped
The wind took away
one or two flowers
The wind passed by leaves dropped
The wind took away
one or two leaves
The wind passed by fruits dropped
My daughter and myself took away
one or two fruits
With wind passing by we dropped
Just like flowers leaves fruits….

Booma Eswaramoorthy

காற்று கடந்து போனது பூக்கள் உதிர்ந்தன
ஒரிரு பூக்களை
காற்று எடுத்துப் போனது
காற்று கடந்து போனது இலைகள் உதிர்ந்தன.
ஒரிரு இலைகளை
காற்று எடுத்துப் போனது.
காற்று கடந்து போனது கனிகள் உதிர்ந்தன
ஒரிரு கனிகளை
நானும் மகளும் எடுத்துப் போனோம்
காற்று கடந்து போக உதிர்ந்தோம்
பூக்கள் போல இலைகள் போல கனிகள் போல

SRIDHAR BHARATHI

 A POEM BY

SRIDHAR BHARATHI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

Even after the eyesight had dimmed
Grandpa would lift water from the well using ‘kamalai’
Despite the everlasting joint-pain
Grandma would pluck off weeds
Under the burning sun
Father would be ploughing
With dust falling into the eyes
Mother would be winnowing in the field
With the sky failing
Bank-loan strangling
Field changing hands
Time rolling by
With pain unbearable
Daily
I go past
the ‘Ad-board’
bearing the big bold letters
‘PLOTS FOR SALE’

Sridhar Bharathi

கண்பார்வை மங்கிய பிறகும்
கமலை இறைப்பார் தாத்தா
தீராத மூட்டு வலியிலும்
களையெடுப்பாள் பாட்டி
சுட்டெரிக்கும் வெயிலில்
கலப்பை பிடிப்பார் அப்பா
கண்களில் தூசிவிழ
களத்தில் தூற்றுவாள் அம்மா
வானம் பொய்க்க
வங்கிக்கடன் மென்னியை நெரிக்க
கழனி கைமாற
காலம் உருண்டோட
'பிளாட்டுகள் விற்பனைக்கு'
எனும் பெரும் எழுத்துகள் சுமந்த
விளம்பரப்பதாகையை
அனுதினம் வலியோடு
கடந்தபடி இருக்கிறேன் நான்.
-
Sridhar Bharathi

AASU SUBRAMANIAN

 A POEM BY

AASU SUBRAMANIAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

In a lone piece of charcoal
How many a cinder would have burnt and died down!
In the twinkling flame of the wick
what all permutations and combinations of light
would have mingled!
In a flower
how much of pollen would be encircling!
In a fruit
how much flavour would taste sweet!
In a friendship
how much love would have bloomed!
Deeming all to be aroma unmatched
let’s twine them all in a string;
Within us Everything.
Aasu Subramanian

ஒரு கரித்துண்டில்
எத்தனை கங்குகள்
எரிந்து அடங்கியிருக்கும்
ஒரு சுடரில்
எத்தனை ஒளிச்சேர்வை
கூடியிருக்கும்
ஒரு பூவில் எத்தனை
மகரந்தங்கள் சூழ்ந்திருக்கும்
ஒரு கனியில்
எத்தனை சுவை தித்திப்பாய் இருக்கும்
ஒரு நட்பில்

SINDUJAN NAMASHY

 A poem by

SINDUJAN NAMASHY

Translated into English by Latha ramakrishnan

THE CONVERSATION OF THE
TIMELESS TIME
She with lovely fingers
and He who knows writing poetry
start conversing from a midnight onwards.
Applauding poems and fingernails
and then
dialoguing endlessly on love
nudity
and the aspects and components of lust
growing tired of it all
in the end
they are now speaking of
adopting a baby elephant.

அகாலத்தின் சம்பாஷணை
அழகிய விரல்களை உடையவளும்
கவிதை எழுத தெரிந்த ஒருவனும்
ஓர் நள்ளிரவிலிருந்து சம்பாஷிக்க தொடங்குகிறார்கள்
இருவரும் கவிதைகளையும்
கைவிரல் நகங்களையும்
சிலாகித்து
பிறகு காதல் பற்றியும்
நிர்வாணம் பற்றியும்
காமத்தின் கூறுகள் பற்றியும்
பேசித்திர்த்தவர்கள்
எல்லாம் சலித்துப்போய் ஈற்றில்
யானை குட்டி ஒன்றை தத்தெடுப்பதை
பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
சிந்துஜன் நமஷி

IYYAPPA MADHAVAN

 A POEM BY

IYYAPPA MADHAVAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

(*This Poem is dedicated to Dear Younger Brother

Udhayakumar Karunanithi)

In the sound of raindrops falling I go on experiencing
the sorrow of his loneliness
with no respite.
For comforting him with soothing words he has no beloved at all.
Still, he is so full of love.
A squirrel from a tree used to visit him.
He had bought Almond nuts and kept them ready for it.
A dog in the opposite apartment was all love for him.
Sometimes he would chat with it.
Apart from these he had a friend – a girl.
She was afflicted with a terminal disease.
As wished by her he had gifted her with a puppy.
He loved to talk to her and be so fond of her.
He who used to visit her all too often
doesn’t do so these days.
She was buried deep down the tomb.
This is how in the stories after him
in the sound of the raindrops falling
I go on experiencing the sorrow of his loneliness.

தம்பி Udhayakumar Karunanithi க்கு
இந்தக் கவிதை...

மழை சொட்டும் ஓசையில் அவன் தனிமைத் துயரை இடைவிடாது உணர்ந்த வண்ணமிருக்கிறேன்
அவனுக்கென்று ஆறுதல் சொல்லவோ ஆற்றுப்படுத்தவோ ஒரு காதலிகூட இல்லை
எனினும் அவனுக்கு காதல் நிறையவே
உண்டு
மர அணிலொன்று அவனைப் பார்க்க வந்துகொண்டிருந்தது
பாதாம்பருப்புகளை அதற்காகவே வாங்கி வைத்திருந்தான்
எதிர்ப்புற குடியிருப்பில் இருக்கும் நாயொன்று அவன் மீது தீரா அன்பு கொண்டிருந்தது
சிலபொழுதுகளில் அதனுடன் பேசுவான்
இதைத் தவிரவும் அவனுக்கொரு குட்டி சினேகிதி இருந்தாள்
அவளுக்குத் தீர்க்கவே முடியாத நோய் இருந்தது
அவள் விருப்பத்தின்படி குட்டி நாயொன்றை பரிசாகக் கொடுத்திருந்தான்
அவளுடன் பேசுவது அவள் மீது வாஞ்சையோடிருப்பது அவனுக்கு ரொம்பப் பிடிக்கும்
அடிக்கடி அவளைப் பார்க்கச் செல்லும்
அவன் இப்போது செல்வதில்லை
அவள் கல்லறையுள் புதையுண்டு போனாள்
இப்படித்தான் அவனுக்கு பின்னால் உள்ள கதைகளில் மழை சொட்டும் ஓசையில் அவன் தனிமைத் துயரை உணர்ந்துகொண்டிருக்கிறேன்.
AYYAPPA MADHAVAN
11. 41 ஜன் 13/20

YUGA YUGAN[RENGARAJAN VEERASAMY]

 A POEM BY

YUGA YUGAN

[RENGARAJAN VEERASAMY]

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

Gulping the one salty drop
that your eye has shed
How many a river
I am to keep drinking forever....

Rengarajan Veerasamy

உன்
விழியுதிர்த்த
ஒரு துளி கரிப்பை விழுங்கிவிட்டு
எத்தனை நதிகளை
குடித்துக்கொண்டிருப்பது நான்.
-யுகயுகன்

INSIGHT MARCH 2021

INSIGHT - OCT - NOV, 2025 - PARTICIPATING POETS