INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, March 9, 2026

KAVANUR SRINIVASAN

 A POEM BY

KAVANUR SRINIVASAN

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

Enough Sunlight and heat we have
Start collecting shades
Go out
Without
Your shadow
Take leave of yourself
Take hold of
your own hands
shake hands once
That which has
smashed thee
The same would
sculpt thee
Plants would never
counter
Blossom once
brimming wholesome.
Can’t turn everything
into writing
be silent.

- போதுமான அளவு
வெயில் இருக்கிறது.
நிழல்களை சேகரி.
உன் நிழலற்று
வெளியே செல்.
உன்னிடமிருந்து
விடைபெறு.
நீயே
உன் கைகளைப் பிடித்து
ஒரு முறை
கைகுலுக்கிக்கொள்.
எது
உன்னை உடைத்ததோ
அதுவே
உன்னைச் செதுக்கும்.
மறுப்பேதும் சொல்லாது
செடிகள்
ஒருமுறை பூத்துகுலுங்கிக்கொள்.
எல்லாவற்றையும்
எழுத்தாக்கிக்
கொண்டிருக்க முடியாது.
மௌனமாய் இரு.
- காவனூர் சீனிவாசன்.

Saturday, March 7, 2026

KUGAI MA PUGAZHENDHI

A POEM BY
KUGAI MA PUGAZHENDHI

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

Now Through my writing
I have stretched a little
Due to my nature of lying down
all huddled
in whatever space I could get
For a long time
I was caught in the meanness of
just a handful of words
The broadmindedness of Poetry
has made me also lie down
with my legs stretched
keep pushing and dashing and
so extending.
That in the vast expanse of Poesy
Hereafter the yield and harvest would increase
_ So an estimate of Nature
makes my poems extend
in their mental frame.
The time of telling briefly and precisely
turning dormant
the sudden surge of the poem’s
flooding space of being
originates from me.
In the brimming vision
She of the desert
wandering from far off
carrying her pot
suddenly erects a dam
With her pot getting filled up
I overflowing
pursues.
Changing instantly my being
that was turning into an ocean
She drags along
the Poem
drop by drop
in her direction.

இப்போது
என் எழுத்தின் வழி
சற்றே நீண்டிருக்கிறேன் நான்
கிடைத்த இடத்தில்
உடல் சுருக்கி
குறுகிப் படுத்துக் கொள்ளும்
என் இயல்பு கொண்டு
சொற்ப வரிகளின்
சிறுமையிலேயே
அகப்பட்டிருந்தேன் நெடுங்காலம்
கவிதையின் மன விசாலம்
என்னையும்
கால் நீட்டிப் படுக்க வைத்திருக்கிறது
சொற்கள் மண்புழுக்களைப்போல
முட்டி முட்டி நீள்கின்றன
கவிதையின் பெரு நிலப்பரப்பில்
இனி சற்றே விளைச்சல் கூடுமென்கிற
இயற்கையின் கணிப்பு
என் கவிதைகளை
மனப்போக்கில் நீளச் செய்கின்றன
சுருங்கச் சொல்லலின் காலம் முடங்கி
திடுமென நீண்டு பெருகும்
கவிதையின் நிகழ்வெளி
என்னிலிருந்து ஊற்று கொள்கிறது
எங்கு நிறுத்துவதெனத் தெரியாமல்
பொங்கும் தரிசனத்தில்
தொலைதூரத்திலிருந்து
குடத்துடன் அலைந்து திரிந்த
பாலைவனத்துக்காரி
சட்டென அணையிடுகிறாள்
அவள் குடம் நிறைய
நான் நிரம்பி வழிந்து
பின் தொடர்கிறேன்
பெருங்கடலாய் மாறும் என் இருப்பை
நொடியில் மாற்றி
அவள் திசையில் இழுத்துப் போகிறாள்
கவிதையை சொட்டுச் சொட்டாய்.

குகை மா.புகழேந்தி

VIDYA MANOGAR

A POEM BY
VIDYA MANOGAR

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)



From the radiance
of your eyes
A WORD
From the smile
sneaking on your lips
A WORD
From the warmth of
my palm
A WORD
From the womb’s
heat
A WORD
While living thus
with WORDS
Isn’t Life itself POETRY?_
O Yes!

உன்
விழி ஒளியிலிருந்து
ஒரு சொல்
இதழில் தவழும்
புன்னகையிலிருந்து
ஒரு சொல்
என்
உள்ளங்கை
கதகதப்பிலிருந்து
ஒரு சொல்
கருப்பை
வெம்மையிலிருந்து
ஒரு சொல்...
சொற்களோடு
வாழ்கையில்
வாழ்வென்பதும்
கவிதை தானே!

வித்யா மனோகர்

K.MOHANARANGAN

TWO POEMS BY
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


For days too many
You didn’t talk
What could be the reason
I wondered and wondered
Nothing I could gather.
True, the sky didn’t come down
crashing on the ground
Yesterday also
Full moon glowed
straight above
The war pronounced
has not yet commenced.
But, everywhere
Uncertain prevails
Starting late for the meeting agreed upon
In the wall clock glanced at hastily
In the split-second when the second hand
Tumbles down and moving on
You think of me
by chance
while bending towards your footwear.
And, thinking that it would prove
pricking all along
Before getting into the car
You carefully shed off the memory
and proceed.

படர் மெலிந்திரங்கல்
_________________________
நெடுநாளாய் நீ பேசவில்லை
என்ன காரணமாக இருக்கும்
என்று எவ்வளவு யோசித்தும்
எதுவும் புலப்படவில்லை.
வானம் ஒன்றும் இடிந்து
தரை மீது விழவில்லை.
நேற்றும் சாளரத்திற்கு
நேர் மேலாகத்தான் ஒளிர்ந்தது
நிறை நிலவு.
அறிவிக்கப்பட்ட போர்
இன்னும் தொடங்கவில்லை.
அதனால் எல்லா இடங்களிலும்
நிச்சயமின்மை நிலவுகிறது.
ஒப்புக்கொண்ட சந்திப்புக்கு
தாமதமாகப் புறப்படுகையில்
அவசரமாக ஏறிட்டு நோக்கிய
சுவர் கடிகாரத்தில்,
நொடி முள்
தடுக்கி விழுந்து நகரும்
விநாடிக்கும் குறைவான நேரத்தில்
எதேச்சையாக
என்னை நினைத்துக்கொள்கிறாய்.
குனிந்து செருப்பை காலில் அணிகையில்,
செல்லும் வழி நெடுக
உறுத்திக்கொண்டே இருக்குமேயென
எண்ணி,
காரிலேறும் முன் கவனமாய்
அந் நினைவை உதறிவிட்டுப் போகிறாய்.
க. மோகனரங்கன்


2. BEYOND THE
BIOLOGICAL MOTHERHOOD....


In the countenance of
fatherless children
there would be an
invisible Orphanhood
inimitably Widespread.
There are those rare women
who
grasping it at the very first look
would embrace them
with all the affection in the world.
And they all
in such a young age
become Mothers
to many
grown-up children.

பெறாத போதும்
____________________
அப்பா இல்லாத
பிள்ளைகளின் முகத்தில்
அடுத்தவர் கண்களுக்கு
அவ்வளவாகப் புலப்படாத
அருவமானதொரு
அநாதைத்தனம்
அப்பிக்கொண்டிருக்கும்.
முதல் பார்வையிலேயே
அதை அறிந்தவர்களாக
அரவணைத்துக் கொள்கிற
அபூர்வமான பெண்கள்
இப்போதும் இருக்கிறார்கள்.
அவர்களெல்லாம்
அத்தனை சிறிய வயதிலேயே
எத்தனையோ பெரிய குழந்தைகளுக்கு
அன்னையர் ஆகிவிடுகிறார்கள்.

க.மோகனரங்கன்

JEYANTHAN JESUDOSS

TWO POEMS BY
JEYANTHAN JESUDOSS
(Nova Nadhi)
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

THE ULTIMATE TEXT ABOUT RAIN

The sky started leaking
The land began to rot
Old age became an all drenched blanket
In the joints that toiled till losing consciousness
The rusted doors groan
The shrunken skin all crumpled
Are streams from time immemorial
Droplets run through them
and search for the trails of youth past.
The rain that touches the staggering legs
Is but needle piercing to annihilate
For some woman
Tea at the window-corner
For some male
Watery mat
Spread by the leaking roof
Using the shovel called Rain
Time digs the land.
The droplets leaping and splashing
in the rock aged thousands of years
are but water-bullets.
Nothing is permanent here.
The degenerations of land are but
the invaluable signatures of Rain.
Siddhartha’s statue
and He believed to be a Siddha
are floating in the wrath of Rain
Rrgid and frozen.
Rain is not
Poetry being written by God
It is His ongoing interrogation.
......................................................................................
*FELLOW POET CHOZHAN VAALARIVAN'S READERLY TEXT:
............................................................................................
*Rain doesn’t pour. The sky slowly eases out its burden. The Land doesn’t accept it. It demolishes itself. Here, Nature is no mere scene here. that is the way Time is told. Old age is not a feeling or emotion. Just as the soaked blanket it presses itself hard on the body. the joints that had toiled hard till they lost consciousness are no more able to bear. The doors surrounding them, not being closed, groan. Man living within his body is revealed by the Rain here.
The shrunkenness of skin, its crumpling and shrinking appear like Land’s time-immemorial steams. When the rain-drops run htrough them it is not the journey of water. It is the trail of Time searching for the youth gone past and lost. The rain that touches the staggering legs is no pleasing coolness. It is the needle piercing inside, the rain that becomes the windowside Tea for one woman becomes aroofless night for another man. The same water – but different punishments.
Rain here is not Gods Poetry. It is the hand of Time that takes hold of the shovel and dig the land. At the instant when the droplets splashing on the rock aged thousands of years turn into water-bullets, all that was believed to be permanent start floating. Siddharthas statue, and the man who was believed to be a Siddha stand alike, rigid and frozen, with no difference at all. Rain doesn’t penalize. It interrogates. Continuously. Steadfastly. Till there is a response
......................................................................................
மழை குறித்த இறுதிப் பிரதி
கசியத் தொடங்கியது வான்
நசியத் தொடங்கியது நிலம்
நனைந்த போர்வையானது முதுமை
நினைவு தப்பும்வரை உழைத்த மூட்டுகளில்
துருவேறிய கதவுகள் முனகுகின்றன.
தோலின் சுருக்கங்கள் தொல் ஓடைகள்
துளிகள் அவற்றின் வழி ஓடிக்
கடந்து போன இளமையின்
தடம் தேடுகின்றன
தள்ளாடும் கால்களைத் தொடும் மழை
கொல்ல ஊடுருவும் குத்தூசி
யாரோ ஒருத்திக்கு
ஜன்னலோரத் தேநீர்
யாரோ ஒருவனுக்கு
ஒழுகும் கூரை விரித்த
தண்ணீர் பாய்
மழை மண்வெட்டி கொண்டு
நிலத்தைக் கொத்துகிறது காலம்
பல்லாயிரம் வயதுகொண்ட பாறையில்
துள்ளித்தெறிக்கும் துளிகள்
தண்ணீர் தோட்டாக்கள்
நிலைபெற்றதென எதுவுமில்லை
விலை கொடுக்க முடியாத
மழையின் கையெழுத்துக்களே
மண்ணின் சிதைவுகள்
சித்தார்த்தனின் சிலையும்
சித்தன் என நம்பப்பட்டவனும்
மழையின் கோபத்தில்
விறைத்து மிதக்கிறார்கள்
கடவுள் எழுதும் கவிதை அல்ல மழை
அவரின் தொடர் விசாரணை.
- நோவா நதி
...................................................................................................................
*சக கவிஞர் சோழன் வாலறிவனின் வாசகப் பிரதி:
.......................................................................................................................
மழை பெய்வதில்லை; வான் மெதுவாக தன் சுமையைத் தளர்த்துகிறது. நிலம் அதை ஏற்றுக்கொள்வதில்லை, அது தன்னைச் சிதைக்கிறது. இங்கே இயற்கை ஒரு காட்சி அல்ல; அது காலம் செயல்படும் விதம். முதுமை ஒரு உணர்ச்சி அல்ல, நனைந்த போர்வை போல உடலின் மேல் அழுத்தமாகப் படர்கிறது. நினைவு தப்பும்வரை உழைத்த மூட்டுகள் இனி தாங்கவில்லை; அவற்றைச் சுற்றிய கதவுகள் மூடப்படாமல் முனகுகின்றன. மனிதன் தன் உடலுக்குள் வாழ்வதை இங்கே மழை வெளிப்படுத் துகிறது.
தோலின் சுருக்கங்கள் நிலத்தின் பழைய ஓடைகளைப் போலத் தெரிகின்றன. மழைத்துளிகள் அவற்றின் வழியே ஓடும்போது, அது நீரின் பயணம் அல்ல; கடந்து போன இளமையைத் தேடும் காலத்தின் தடம். தள்ளாடும் கால்களைத் தொடும் மழை குளிர்ச்சியல்ல, அது உள்ளே ஊடுருவும் குத்தூசி. ஒருத்திக்குக் ஜன்னலோரத் தேநீராக மாறும் மழை, இன்னொருவ னுக்குக் கூரையில்லா இரவாகிறது. ஒரே நீர், வேறு வேறு விதமான தண்டனை கள்.
மழை இங்கே கடவுளின் கவிதை அல்ல. அது மண் வெட்டி எடுத்துக் கொண்டு நிலத்தைக் கொத்தும் காலத்தின் கை. பல்லாயிரம் வயதுடைய பாறையில் துள்ளும் துளிகள், தண்ணீர் தோட்டாக்களாக மாறும் தருணத்தில், நிலைபெற்றதென நம்பிய அனைத்தும் மிதக்கத் தொடங்குகிறது. சித்தார்த்தனின் சிலையும், சித்தன் என நம்பப்பட்ட மனிதனும் வேறுபாடின்றி விறைத்து நிற்கிறார்கள். மழை தண்டிப்பதில்லை; அது விசாரிக்கிறது. தொடர்ச்சியாக, இடைவிடாது, பதில் வரும்வரை.


(2)
I gushed out of a rock
None there to call me a fountain
I became a stream
The sky alone touched me
A Fawn soaking its legs
leapt crying ‘The source of river’
As I too leapt
The rainbow christened me
Waterfall.
I walked on
well past the foothills
They sanctified me as Mother
Trees called me their mirror
Stars tried to swim in my waves
Wherever she goes
She extends life to waterbeds
and fertility
As the mother of our lungs -
Said the silvery stars
with their eyes twinkling
dazzling against the eyes of
Moon playing waterskiing.
When I came to the city
I yearned to see the faces of those
going past hurriedly.
Those who spent time bathing in me
Got lost drowning in their own selves.
As bearing all the sins
Even the bridges don’t look at me.
The city goes past me
Day-in and day-out
Nut, I am not able to go past the city
Inside the prison of walls
I lie unconscious
Stars come not to swim
Moon wants not to do skiing
The fish
keep searching for me
in the tanks.

பாறையின் இதயத்திலிருந்து பீறிட்டேன்
ஊற்றென அழைக்க ஒருவரும் இல்லை
ஓடையாக உருவெடுத்தேன்
வானம் மட்டும் எனைத் தொட்டது
நவ்வியொன்று கால் நனைத்து
நதிமூலம் என்று துள்ளிற்று
நானும் துள்ளிக் குதித்ததால்
அருவியெனப் பெயர் சூட்டியது
வானவில்
அடிவாரம் கடந்து நடந்தேன்
அன்னையாகப் புனிதப்படுத்தினர்
என்னைத் தம் கண்ணாடி என்றன மரங்கள்
நட்சத்திரங்கள் என் அலைகளில் நீந்த முயன்றன
செல்லுமிடமெல்லாம் செழிப்பையும்
நீர்நிலைகளுக்கு உயிர்ப்பையும்
நீட்டுகிறாள் எங்களின் நுரையீரல் தாயென
நீர்ச்சறுக்கி விளையாடும்
நிலவின் கண்கள் கூசும்படி
மின்னிக் கூறின வெள்ளி மீன்கள்
நகரம் நோக்கி வந்தபோது
விரையும் மனிதர்களின்
முகம் காண ஏங்கினேன்
என்னில் நீராடிக் கழித்தவர்கள்
தன்னில் மூழ்கித் தொலைந்தார்கள்
பாவங்கள் அனைத்தையும் சுமப்பதால்
பாலங்கள் கூட என்னைப் பார்ப்பதில்லை
நகரம் அன்றாடம் என்னைக் கடக்கிறது
நகரத்தை என்னால் கடக்க முடியவில்லை
மதில்களின் சிறைக்குள்
மயங்கிக் கிடக்கிறேன்
நட்சத்திரங்கள் நீந்த வருவதில்லை
நிலவுக்குச் சறுக்க விருப்பமில்லை
மீன்கள்
தொட்டிகளில் என்னை
தேடிக்கொண்டிருக்கின்றன
- நோவா நதி

INSIGHT MARCH 2021

KAVANUR SRINIVASAN

  A POEM BY KAVANUR SRINIVASAN Rendered in English by Latha Ramakrishnan(*First Draft) Enough Sunlight and heat we have Start collecting sha...