INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, December 7, 2019

PRIYAM's POEM

A POEM BY 
PRIYAM 
ON THE RENOWNED ARTIST CHANDRU
POET PRIYAM
(* This poem was penned in the year 2006)
rendered in English by Latha Ramakrishnan(*First Draft)




ARTIST CHANDRU

WHERE IS CHANDRU?
(1)
He who carries in his painting brush
the memories of those lost in history_
He who speaks nothing but the Truth
as against the rule of the day_
He who had come wading past the dreams_
He sans pretentions of any sort….
After ages
I come to see him
No shelter he has
nor shade to rest
Where is Chandru?
It was here that he was conversing with his students
His plans we knew not.
“He is a tippler”
“He is a seer”
He is an enlightened soul”
Get lost
We are not his students at all .
2.
The school of art that had shed off silence…..
stands responsible as the Hall of Justice
for those who had till now
pronounced verdicts
and also punished.
the stone stood at the entrance
as head
scratching against its soft-hairy cheek….
Ha, blood in the finger
“This must be Chandru’s conspiracy!”
smile on the stoney lips.
“Oh, what’s that – a smile!
“I have never seen you earlier!” I observed.
“I have been standing here for long.
it is your eyes that see not.
This is Court.
For what you have come - concentrate!” it responded.
where is Chandru?
I am not his sentry!
go up
might be there.
3.
The stairs make way for me
red carpet is spread
could be for sinners to walk
The fusion of footwear
seeking for the right place
on spotting one
wisdom mentioned:
“This is the safest place:
Enraged the footwear stamped:
“Hasn’t your second nature changed?”
In the hall, Heads
“Place those heads bearing wisdom
here
those without it – over there.:
beneath the board which proclaimed so
heads turn confusion-confounded:
Where will this hands place me?’
4
“For the painting hiding inside this canvas
to be revealed
paint with your finger’s blood”
with each one doing so
here there everywhere…more and more….
“We are to be brethren – how come….?”
The voice belonged to Chandru.
Where is Chandru?
These are words uttered by him long ago
This tone-elephant accompanying me
goes on repeating it non-stop.
5
These are lines documenting the traces of wind
that Mind the Monkey leapt and crossed.
Maybe the real monkeys are unaware of
No race nor caste
for those androgynous…..
Stop! Where is Chandru?
This is the Hall of Justice.
You can’t just see him
as suits your whims and fancies.
6
The marks of the string of malice-charged events
both confined and in excess vanished
smearing ash upon the riddles of yesterday
they became musical notations
brimming with devout flavour
This is the direction Nandan took to
These are the eyes Kannappan gave
This is the severed thumb of Ekalaivan.
the celestial status you claim for
can never offer man’s calibre..
Imposing fancy on truth
and writing it ever deceiving _ so
there goes a long history.
Enough…! Where is Chandru?
7
This is a painting created by human excrement
The mystery whereby even your shit turns artistic
is in fact revealed to us
by none other than Kamadhenu, my friend!
No use scowling
Sacrosanct has multiple meanings
Its pleasure lies nowhere except in inhaling
Sandalwood and scents
lose themselves
Your god who plunges into the sewage drain
and surfaces, laughs.
He mocks at you and me.
Kamadhenu would never give out
golden – cow dung.
8
Where is Chandru?
The friend you seek out
we are not his fans!
Hall of interrogation, court-martialing
this is.
No room for friendship or kinship here.l
“No need to go in a row.
Move on as you please.”
Row after row Jains impaled.
Seeing is different from experiencing.
These are no illustrations.
Understand!
Not just the forbidden fruits
but truths you feverishly removed.
There! solitary impalement noose
for your so-called justice.
A golden opportunity for the demons of dominance
lurking in your blood
to go away.
Plantain-leaf in human- skull
Manu placed in the plate
for munching.
An opportune moment to open up
the fair and just
concealed inside the heart-pouch.
Realize your mistakes!
Realizing is your real freedom.
Where is Chandru?
He went within through these paintings. Since then
He remains unseen....
(ப்ரியம் 2006 ல் எழுதியது)
ங்கே சந்ரு? 1,
_______________
சரித்திரத்தில் தொலைந்தவர்களின்
நினைவுகளை
தன் தூரிகையில் ஏந்திக்கொண்டிருப்பவனும்
வழக்கத்திற்கு மாறாக
உண்மைகளை மட்டும் பேசுபவனும்
கனவுகளைக் கடந்தவனும்
புனைவுகளற்ற அவனைக் காண
பல ஆண்டுகளுக்குப் பின்
வருகிறேன்
ஜாகையற்றவன்
நிழுலுமற்றவனும் கூட.
எங்கே சந்ரு?
இங்கு தான் மாணவர்களிடம் பேசிக்
கொண்டிருந்தார்
அவரது திட்டங்கள் நாங்களறியாதது.
"அவர் ஒரு குடிகாரர் "
அவர் ஒரு ஞானி "
"
அவர் ஒரு சித்தர் "
போ....! போபோ.....!
அவருக்கு நாங்கள் மாணவர்கள்
அல்ல!
_______________
2,
மெளனத்தை உதறிய கலைக் கூடம்.......
பொறுப்பேற்கிறது நீதி மன்றமாக.
இக் காலம்வரை
நீதிசொன்னவர்களின்மீதும்
தண்டனைப் பெற்றவர்களுக்குமாக.....
வாயிலில் கல் நின்றது தலையாக
அதன் கன்ன ரோமங்களில்
உரசி...
......! விரலில் குருதி.
"இது சந்ருவின் சதியாக இருக்கலாம்! "
கல் உதட்டில் புன்னகை.
"
புன்னகையா அது. ....!"
இதன்முன் இங்கு கண்டதில்லையே
உன்னை ! என்றேன்.
நெடுங்காலமாய் நிற்கிறேன் நான்
உன் கண்கள்தாம் குருடு.
இது நீதி மன்றம்
நீ வந்த வேலையைப் பார் ..! என்றது.
எங்கே சந்ரு?
அவருக்கு நான் காவலாளி அல்ல ..!
மேலே போ.
இருக்கலாம்.
__
_____________
3,
படிகற்கள் வழியை விடுகின்றன
செந்நிற பாய் விரிக்கப்பட்டுள்ளது.
குற்றம் செய்தவர்கள்
நடப்பதற்காக இருக்கலாம்
காலணிகளின் சங்கமம்.
இடம்தேடி ஒரிடம் கண்டதும்
புத்தி சொல்லியது
"இதுவே பாதுகாப்பான இடம்."
வெகுண்ட. காலணிகள் அறைந்தன
"உன் பிறவி புத்தி மாறவில்லையா..!"
கூடத்தில் தலைகள்.
"அறிவைச் சுமந்த தலைகளை
இங்கே வைக்கவும்
அற்றவர்கள் அங்கே"
என்ற பலகையின்கீழ் தலைகள்
குழம்பின.
தம்மை எங்கே வைக்கப்போகின்றன
இந்த கைகள்?...
_________________
4,
"
இக்கித்தானுக்குள் ஒளிந்திருக்கும் ......
ஓவியம் வெளிப்பட
உங்களின் விரல் குருதியைத்
தீற்றவும் "
ஓவ்வொருவராய் ஒவ்வொரிடமாய் தீற்ற
தீற்றிட தீற்றிட ...
"நாம் சகோதரர்களாய் இருக்க வேண்டியவர்கள்
எப்படி? "
குரல் சந்ருவுடையது.
எங்கே சந்ரு?
அவர் எப்போதோ பேசிய பேச்சு
இது.
சதா சொல்லக்கொண்டிருக்கிறது
உடன் வரும் இந்த கல் யானை.
__________
_________
5,
மனக்குரங்கு தாவிக்கடந்த
காற்றின் தடங்களை பதித்த கோடுகள்
இவை.
நிஜக்குரங்குகள் அறியாதிருக்கலாம்
வருணபேதங்களை.
அர்த்தநாரிகளுக்கில்லை
இனமும் சாதியும்.....
நிறுத்து! எங்கே சந்ரு?
இது நீதி மன்றம். உங்கள் விருப்பம் போல்
அவரைக்காணமுடியாது.
___________
____________
6,
மீறியும் மீறாதும்
நிகழ்ந்த வன்மக்கோவையின் முகவரிகள்
மறைந்து போயின.
நேற்றையப் புதிர்களின் மீது சாம்பல் பூசி
பக்திரசமிக்க இசைக்குறிப்புகளாயின.
நந்தன் சென்ற திசையிது
கண்ணப்பன் கொடுத்த கண்களிவை
ஏகலைவனின் துண்டித்த கட்டை விரலிது.
நீங்கள் கேட்கும் தேவநிலை
மனிதரின் தராதரத்தை தராது.
உண்மையின் மீது கற்பனையை
எழுதி எழுதியே ஏமாற்றிய
நெடு வரலாறு.
போதும்...! எங்கே சந்ரு?
_____________________
7,
இது மனிதக் கழிவுகளால் நிறைவேற்றப்
பட்ட ஓவியம்
உங்கள் மலமும் கலையாகும்
மர்மம்
உண்மையில் முதலில் உணர்த்தியது
காமதேனுதான் நண்பனே !
முறைப்பதால் பலனில்லை
புனிதம் என்பதற்கு பலபொருளுண்டு
நுகர்வதில்தாம் இதன் இன்பமுண்டு.
சந்தனமும் வாசனை திரவியங்களும்
தம்மை இழக்கின்றன.
பாதாளச் சாக்கடையில் முழ்கி எழும்
உன் கடவுள் சிரிக்கிறான்.
என்னையும் கேலி செய்கிறான்.
காமதேனு பொன்சாணி போடாது.
___________________
8,
எங்கே சந்ரு?
நீ தேடும் நண்பருக்கு
நாங்கள் விசிறிகள் அல்ல!
இது விசாரணைக்கூடம் நட்புக்கோ
உறவுக்கோ இங்கே இடமில்லை.
"வரிசையாக செல்ல வேண்டாம்
உங்கள் விருப்ப படி செல்லவும்"
வரிசையாக சமணர்களின்
கழுவேற்றம்.
பார்ப்பது வேறு, உணர்வது வேறு
இவைசித்திரங்கள் அல்ல
புரிகிறதா!
விலக்கப்பட்ட கனிகளை விட நீங்கள் விலக்கிய உண்மைகள்.
அதோ! தனிமை கழுவேற்ற கயிறு
உங்கள் நீதிக்கு.
உங்கள் உதிரத்தில் பதுங்கிய
ஆதிக்கப் பூதங்கள் வெளியேற வாய்ப்பு.
தலையோட்டில் வாழை
தட்டில் வைத்த மனு தீனி.
இதயப்பையில் ஒளித்தநீதியை திறக்க
ஒரு சந்தர்ப்பம்
குற்ங்களை உணருங்கள்!
உணருதலேஉங்கள் விடுதலை.
எங்கே சந்ரு?
இவ்வோவியங்கள் வழியே உள்ளேசென்றார்.அதன் பின் அவரைக்காணவில்லை......

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024