INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, December 7, 2019

SRIDEVI RAMYA. A ‘S POEM

A POEM BY
SRIDEVI RAMYA. A 


RENDERED IN ENGLISH BY LATHA RAMAKRISHNAN(*FIRST DRAFT)

Peacock’s plume concealed in each book
with the hope that they would bring forth little ones;
the eggs hidden away from mother’s eyes
hoping that chicken would come out;
the cycle my father promised me in VIII Std
if I were to come school first;
the holidays spent waiting for my uncle
who, saying “Sure, my next vacation too with you all”,
marrying his ladylove and left without a trace
the first love-letter received with so much of love
but brought no response _
many more such moments of endless waiting
come to my memory one by one,
each time you disconnect my call, saying
“I would call back in a minute.”

குட்டி போடும் என ஒவ்வொரு புத்தகத்திலும்
மறைத்து வைத்திருந்த மயிலிறகுகள்...
அம்மாவுக்குத் தெரியாமல் மறைத்து
கோழிகுஞ்சு வெளிவருமென பதுக்கி வைத்த முட்டைகள்...
எட்டாம் வகுப்பில் பள்ளி முதல் மாணவியாக
வந்தால் அப்பா வாங்கித்தருவதாக சொன்ன சைக்கிள்...
அடுத்த விடுமுறையும் உங்களுடன் தான் எனக்கூறி,
காதல்மணம் புரிந்து தொடர்பற்று போன மாமாவுக்காக
காத்திருந்த விடுமுறைகள்...
அத்தனை அன்புடன் பெற்றுக்கொள்ளப்பட்டு
பதில் ஏதும் வராத முதல் காதல் கடிதம்...
இன்னும் பல முடிவற்று காத்திருந்த கணங்கள்
அனைத்தும் ஒன்றாய் நினைவிற்கு வருகின்றன
ஒரு நிமிடத்தில் திரும்ப அழைக்கிறேன்
என நீ அழைப்பை துண்டிக்கும் ஒவ்வொரு முறையும்.


No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024