INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, August 31, 2026

VIDYA MANOHAR

FOUR POEMS BY 

VIDYA MANOHAR


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

THE WIND

(1) WIND AND I

I travel along the wavelength of Wind.

As a blank sheet of paper!

Atop mountains

Atop trees 

Atop flowers

Flying on and on

Finally I fall on the land

As poem penned by wind


(2) WIND’S BELOVED

They who know not 

my love for the wind

They who know not 

my lust for the clouds

Think that I stand in silence

All the while I fly 

joining hands with the wind

Aided by wings of thoughts.

(3)

Amorphous the wind’s hands are

Its fingers

Red Lily’s long stems

They would rub against the heads of mountains

Haul foam in waves

Would tap the buds

The flowery doors would open

In the wide-opened flower

It would collect pollen 

and apply it on the nails

It would get wet in the stream 

and the summer would dry it….

Clinging to life 

it would lie confined in the body!

As cold Northerly wind

arriving at the door

It would touch the Yellow of

Golden Shower plant

and smear it upon my skin

In dreams I waited 

to be wedded to this

Formless one!

‘Bring the password’ 

I would have you then

as my bride 

said the wind

and went past.

***

(4) MELTING IN THE WIND

The wind would

unsettle

extinguish

Say thee

Someday

 it would embrace!

It is to melt

In the wind

So long a wait

(மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: மூல கவிதையில் 'அணைக்கும்' என்ற சொல் இரண்டு அர்த்தங்களில் கையாளப்பட்டிருக்கிறது. அந்த அழகை மொழிபெயர்ப்பில் கொண்டுவர இயலவில்லை)






KANNAN VISWAGANDHI

TWO POEMS BY 

KANNAN VISWAGANDHI

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


[1]



“I have received” said one

“The wrapper is damn good” said another.

As if his crown would be in danger if something uttered

the senior remained submerged in silence as ever.

“Write on Love. You would get instant attention

suggested a fellow poet

who has acquired name and fame

As the family man from Kongu land 

waiting to see the minister                    

 _ spreading the towel

having hand as pillow

plunged into sleep at the entrance itself

the thoroughly tired Poem-Colleciton


"கிடைக்கப் பெற்றேன்" என்றார் ஒருவர் 

"அட்டைப் படம் அருமை" என்றார் மற்றொருவர் 

ஏதேனும் சொல்லி விட்டால் கிரீடத்திற்கு ஆபத்தென 

எப்போதும் போல ஆழ்ந்த மௌனத்தில் மூத்தவர் ஒருவர் 

"காதலை எழுது, கவனம் பெறுவாய்" ஆலோசனை சொன்னார் வளர்ந்த கவியொருவர்

அமைச்சரைச் சந்திக்கக் காத்திருக்கும் 

கொங்கு நாட்டு சம்சாரியாக

துண்டை விரித்துப் போட்டு 

தலைக்குக் கை வைத்து 

வாசலிலியே தூங்கி விட்டது

களைத்துப்போன கவிதைத் தொகுப்பு.


[2]


This is the fifth coffee

since morning

Beginning from the fist window 

I have come to the third window

As the sound of bell 

lunch in a short while

In between some official meetings

At 3 pm  it is time for the children 

to return from school

Coffee again

Charulatha seen long ago is remembered now

This is how , my friends

this miniscule   life

has kept the man 

having jungle in his mind

with legs chained

and arms stretched out begging for salary.

காலையிலிருந்து இது ஐந்தாவது காபி

முதல் ஜன்னலில் ஆரம்பித்து மூன்றாவது ஜன்னலுக்கு வந்து விட்டேன் 

மணியடித்தது போல இன்னும் சிறிது நேரத்தில் பகலுணவு 

இடையிடையே அலுவலக சந்திப்புகள் 

மூன்று மணிக்கெல்லாம் பள்ளி சென்ற பிள்ளைகள் வீடு திரும்பும் நேரம் 

மீண்டும் காபி

எப்போதோ பார்த்த சாருலதா இப்போது நினைவில் 

இப்படித்தான் நண்பர்களே

நினைவில் காடுள்ள மனிதனை

காலில் சங்கிலியிட்டு

சம்பளத்திற்கு கையேந்த வைத்திருக்கிறது 

இம்மீச்சிறு வாழ்வு

கண்ணன் விஸ்வகாந்தி


ATHMAJIV

 THREE POEMS BY 

ATHMAJIV



Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)



None from above

noticed.


The child drawn 

in the semblance of God

growing  into an adult

returns to a cliff.


Alive and kicking

it reaches the hands of 

the sculptor

 waiting to carve Satan.


With the removal of 

each particle

Satan alive 

is all set to come out.


He who comes

and stands next to Satan 

on the carved boulder

laughs:

“The same hands that carved me 

resembling  God’s 

when I was a child

had sculpted the semblance of Satan

Today’


The sculptor’s hands shiver.


‘indeed it is God that

 reality has turned into Satan’

-Observing thus

goes away Satan

pain-borne.


Now the sculptor’s hands

lie resting.


வானத்திலிருந்து கவனிக்கவில்லை

யாரும்.


கடவுளின் சாயலில் வரைந்த குழந்தை

வளர்ந்து பெரியவனாகித் திரும்புகிறது

ஒரு மலைப்பாறைக்கு.


சாத்தானை செதுக்க காத்திருக்கும்

சிற்பிக்கு கிடைக்கிறது உயிருடன்

அது.


ஒவ்வொரு துகள் அகலும்போதும்

உள்ளிருந்து வெளிவர துடிக்கிறது

உயிருடன் சாத்தான்.


செதுக்கப்பட்டப் பாறையில்

நிற்கிற சாத்தானுக்கு அருகில்

வந்து நிற்கிறவன் சிரிக்கிறான்.

"நான் 

குழந்தையாய் இருந்தபோது

கடவுளின் சாயலென 

செதுக்கிய கரங்கள்தான்

இன்று

சாத்தானின் சாயலை 

செதுக்கியிருக்கிறது'


சிற்பியின் கரங்கள் 

நடுங்குகின்றன.


"கடவுளைத்தான் 

சாத்தானாக்கி இருக்கிறது 

எதார்த்தம்" 

என்றபடி நகர்கிறது

வலிகளைச் சுமந்த சாத்தான்.


சிற்பியின் கரங்கள் இப்பொழுது

ஓய்வாக இருக்கின்றன.


ஆத்மாஜீவ் 


2.HOW MANY CABINS  STILL LEFT?


Facing Time that has wiped off 

all his dreams

 He asked just one question.


Losing his essential  self 

absolutely

Standing in the middle of a dense jungle

He was retrieving his soul 

buried under some unknown tree.


He separated his head from his torso

His hands remained stretched 

begging shamelessly

‘They who give are noble ones, 

those who give not….’

He swallowed 


the words that followed.

The right eye searched for a way 

to renew the lost vision of the left eye

At the time of death

Who would get this eye with 

ripe cataract.


Chasing words 

on behalf of the stomachs 

inside which

the demon of poverty 

danced deliriously

he begged all for alms

leaving none at all

Taking out poems of yester years

he quenched his hunger


For others too there would remain

dreams of their own to eat

so their hunger satiated.


For going to the other side of the revolving earth

and hide himself

doing away with all walls

he stood there bearing just the burdens


in the running train no place to sit

nor any spot to keep it and rest

the burden that has got into the heart

Alas where to place it at all


Coming out of the room

He never did return 


In Memory’s racks

How many remain as yet?


Unfastening the legs

That have grown weary in the

Incessant running with the query pursuing

Awaiting the arrival of hands 

that have gone to  beg

Not being able to wipe his tears

He remained standing at the door

Naked to the core.


மிச்சமிருக்கும் அறைகள் எத்தனை?

எல்லாக் கனவுகளையும்

அழித்துவிட்ட காலத்தின்முன்

ஒரேயொரு கேள்வியைதான் கேட்டான்

அவன்.


தன் இயல்பை முற்றாக இழந்து

அடர்வனத்தின் நடுவில்

ஏதோவொரு மரத்தின்கீழ்

புதையுண்ட ஆன்மாவை

மீட்டெடுத்துக் கொண்டிருந்தான்

அவன்.


தலையை தனியே கழட்டி விட்டான்.

ஈயென்று கைகள் ஏந்தியபடி இருந்தன.

இட்டார் பெரியோர், இடாதார்...

தொடர் வார்த்தைகளை

மென்று முழுங்கினான்

அவன்.


இடதுகண் இழந்த பார்வையை

புதுப்பிக்க வழிதேடியது வலதுகண்.


இறப்பின்போது யார்பெறுவார்

புரைமுற்றியக் இக்கண்ணை.


வறுமையின் கோரம் தாண்டவமாடிய

வயிறுகளின் சார்பாக சொற்களை துரத்தி

ஒவ்வொரு நபரிடமும் யாசித்தான்.


பழைய கவிதைகளை மீண்டும் எடுத்து

தன் பசியை போக்கிக் கொண்டான்.


மற்ற வயிறுகளுக்கும் மிச்சம் இருக்கும்

அவரவர் கனவுகள் தின்பதற்கு உணவாய்

அவரவர் பசி அடங்க.


சுழலும் பூமியின் மறுபுறம் போய்

தன்னை மறைத்துக் கொள்ள

எல்லாச் சுவர்களையும் அழித்து

சுமைகளை மட்டும் சுமந்து நின்றான்.


ஓடும் ரயிலில் உட்கார இடமில்லை

வைத்து இளைப்பாற இடமும் இல்லை.

இதயத்தில் ஏறிய பளுவை

எங்கேதான் இறக்கி வைக்க.


அறையை விட்டு வெளியே வந்தவன்

பின்மீண்டும் திரும்பவே இல்லை.


நினைவின் அடுக்குகளில் இன்னும்

மிச்சமிருக்கும் அறைகள் எத்தனை?


கேள்வியுடன் தொடரும் ஓட்டத்தில்

ஓய்ந்துபோன கால்களை கழட்டி

யாசகத்துக்குப்போன கைகளை எதிர்பார்த்து

வழியும் கண்ணீரை துடைக்க வழியின்றி

வாசலிலேயே நின்றிருந்தான்

ஆடையின்றி.


ஆத்மாஜீவ்  


3



In the dream of the hungry man

costly dishes being served.

He looks around searching for his 

starving family

But there was none

In front of him who likes not to eat all alone

the dishes come hand in hand and console him.

‘In their dreams too we would be served

So, eat to your heart’s content’ – They say.

But, refusing to believe

he wakes up his family members

They all get up startled

‘In your dreams were you served with 

delicious costly dishes?’

Asks he hurriedly.

And, they stare at him blankly.


பசித்திருக்கும் மனிதனின் கனவில் 

விலையுயர்ந்த உணவுகள் பரிமாறப்படுகிறது. 

தன் குடும்பத்தை தேடுகிறான். 

பசித்திருக்கும் குடும்பத்தினர்.

அங்கே யாருமில்லை.

தனியே உண்பதற்கு விரும்பாத 

அவன் முன்பு 

உணவுகள் ஒன்று சேர்ந்து 

சமாதானப்படுத்துகிறது.

அவர்களின் கனவுகளிலும் 

நாங்கள் பரிமாறப்படுவோம்

தாரளமாக வயிராற உணவு கொள்.

அவன் நம்பத் தயாராக இல்லை.

விழித்துக் கொள்கிறான்.

அருகில் உறங்கிக் கொண்டிருக்கும் 

தன் குடும்பத்தினரை எழுப்புகிறான்.

திடுக்கிட்டு எழுகிறார்கள் அனைவரும்.

"உங்கள் கனவில் 

விலையேறப்பட்ட உணவுகள் பரிமாறப்பட்டதா"

அவசர அவசரமாக கேட்கிறான்.

அவர்கள் திருதிருவென பார்க்கிறார்கள் 

அவனை.

ஆத்மாஜீவ் 

Friday, July 3, 2026

APRIL, MAY, JUNE 2026 - INSIGHT

 


MULLAI AMUTHAN

  A POEM BY

MULLAI AMUTHAN


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


We have cast away the nest
with venom unleashed.
Yet
the voice of the Koel
filled with anguish and despair
hovers over the nest
shattered beyond repair.
This is how I carried him
who went as witness for my sake
Mother said: Be silent….
Write not a word…
Don’t turn enraged
This is how one should press the
cartridges
said my friend …
The shot missed the target
Comrades bear the burden……
The burden of burial ground
weighed in the tears of everyone…
Tell now, isn’t the Koel’s voice of
anguish and despair
reverberating in the graveyard too,
everywhere…..

கூட்டை குரோதத்துடன் அகற்றியிருந்தோம்..
ஆனாலும்
குயிலின் ஈனக்குரல்
இன்னும்
சிதைந்த கூட்டைச் சுற்றி அலைகிறது.
எனக்காக
அவன் சாட்சியாய்ப் போனவனை
இப்படித்தான்
சுமந்தேன்.
அம்மா சொன்னாள்..மௌனமாக இரு..
எதையும் எழுதாதே..கோபங்கொள்ளாதே..
வில்லைகளை
இப்படித்தான் அழுத்தவேண்டும் என தோழனும் சொன்னான்..
குறி பிசகியது..
தோழர்கள் சுமக்கிறார்கள்.
இடுகாட்டின் கனதி அனைவரின் கண்ணீரில் தெரிந்தது..
இப்போது சொல்..
குயிலின் ஈனக்குரல் இடுகாட்டிலும் ஒலிக்கிறது..
முல்லைஅமுதன்

HAVI

 TWO POEMS BY

HAVI

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
(*With correction suggested by the poet duly incorporated)

(1)















Yes Mother
Life is not easy
Miles to go
Many more steps, staircase
Bends and turns myriad
But, what are these
You have never said anything openly
Here in front of me also
stretches a luminous path
I would cross it, for sure
Just as thee, Mother.
ஆம் அம்மா
வாழ்க்கை சுலபமானதல்ல
இன்னும் நிறைய தூரம்
நிறைய படிக்கட்டுகள்
நிறைய வளைவுகள் திருப்பங்கள்
ஆனால் இதெல்லாம் என்ன
இதை குறித்து
நேரிடையாக நீ ஏதும்
சொன்னதில்லை
இதோ என் முன்பும்
நீள்கிறது ஓர் ஒளிப்பாதை
அதை நிச்சயம் கடப்பேன்
உன்னைப் போலவே
ஹவி

(2)


In the room of the city
where plasters keep peeling
I remain confined.
In the pricking heat
flowing down from the roof
I am reading the poem
on Mother’s Sari.
Time with utmost nothingness,
everyone living in their own worlds
In the heat of the day
the smell of scorched existence.
That which is called a life of strife
is like the sari swaying in the wind
as multitudes of waves,
between Mother and her.

காரைகள் உதிரும்
நகரத்தின் அறையில்
அடைந்து கிடக்கிறேன்
கூரையிலிருந்து
கோடையில் வழியும்
தைக்கும் வெப்பத்தில்
அம்மாவின் சேலை
பற்றிய கவிதையை பற்றி
படித்துக் கொண்டிருக்கிறேன்
வெறுமை முற்றிய காலம்
அவரவர் உலகில் வாசம்
நாளின் தகிப்பில்
ஆயுள் கருகும் வாசம்
அல்லாடும் வாழ்க்கை
என்பது
அம்மாவுக்கும் அவளுக்கும்
நடுவில்
அலை அலையாய்
காற்றில் ஆடும் சேலை
போல
ஹவி ஹவி


Thursday, July 2, 2026

SIVARASA KARUNAKARAN

A POEM BY
SIVARASA KARUNAKARAN

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


In this city
those who read not/ like not Poetry
go on multiplying
Not just poems
They like not Stories too.
For a good movie
just three as audience
In just two days
the theatre had taken it off.
The city-bred
like not even forests ponds rivers.
Destroying forests seem to be
the passion of too many
Ponds and canals they promptly close
Beautiful beach they are
not able to tolerate
Scattering plastic wastes and garbage
everywhere
They feel happy to the core.
One and all hurry on
For sure none knows the destination.
Even during night
after wandering for hours
here there everywhere
thoroughly exhausted
going to bed late
and getting up late
they go
hurrying again
Wind comes hesitantly
sneaking and creeping
Even the Sun.
She who remembers poetry
conceals it from others’ eyes.
If known
She might be deemed a strange species
“What is this?”
So others might frown at her
Gripped by this fear and shame
She hides her own self
Just the same
Those who think of ponds
who dream of birds and
who want to hear bird’s voices.

இந்த நகரத்தில் கவிதைகளைப் படிக்காத / பிடிக்காதவர்களே /
அதிகமாகி வருகிறார்கள்
கவிதைகளை மட்டுமல்ல
அவர்களுக்குக் கதைகளும் பிடிப்பதில்லை
நல்லதொரு திரைப்படத்துக்கு
மூன்றுபேர் மட்டுமே பார்வையாளர்கள்
இரண்டு நாளில் அதைத் தூக்கி விட்டது
தியேட்டர் நிர்வாகம்
நகரவாசிகளுக்கு காடுகளும் குளங்களும்
ஆறுகளும் கூடப் பிடிப்பதில்லை
காடுகளை அழிப்பதில் பலருக்கும் ஆர்வம்
குளங்களையும் வாய்க்கால்களையும் மூடிவிடுகிறார்கள்
அழகான கடற்கரையை
அவர்களால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை
எங்கும் குப்பைகளையும் பிளாஸ்டிக் கழிவுகளையும் கொட்டி மகிழ்கிறார்கள்
எல்லோரும் விரைந்து கொண்டிருக்கிறார்கள்
போகுமிடம் யாருக்கும் சரியாகத் தெரியாது.
இரவில்கூட
எங்கெல்லாமோ அலைந்து களைத்தபின்
பின்துங்கி
பின் எழுந்து
மீண்டும் விரைந்து கொண்டிருக்கிறார்கள்
காற்றுத் தயக்கத்தோடு பதுங்கிப்
பதுங்கி வருகிறது
சூரியனும்தான்
கவிதையை நினைவில் வைத்திருப்பவள்
யாருக்கும் அது தெரியக் கூடாதென்று ரகசியமாக மறைத்துக் கொள்கிறாள்
தெரிந்தால்
தான் ஒரு வினோதினியாக்கப்படுவேனோ
”என்ன இது?” என்ற முகச் சுழிப்புக்குள்ளாகி விடுவோமோ
என்ற அச்சத்தில் / கூச்சத்தில் / தன்னையே மறைத்துக் கொள்கிறாள்
அப்படித்தான் குளங்களைப் பற்றி யோசிப்பவர்களும்
மரங்களைக் கனவு காண்போரும்
பறவைகளின் குரலைக் கேட்க விரும்புவோரும்.

சிவராசா கருணாகரன்


PAALAIVANA LANTHER

POEM(S) BY
PAALAIVANA LANTHER
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
THE FIRST SEMBLANCE OF LIGHT BANGING AGAINST THE INAUSPICIOUS NIGHT
When the hand of the doll that got broken and scattered

Dashing against the floor
And turning smithereens
It spread all over the room
As abandoned children
The doll sans hand was sought by
Another hand abandoned.

*
For those who
tie a noose with Jute rope
In a thick branch of the Pine Tree
And pushing away the bamboo basket
that was holding the legs
Leaving the body dead and gone
as a lantern swaying in the wind
there is an exclusive song..
One half of it the koel and the rest of it
The lips of the hanging man
would sing. Listen.
*
She who calls during nights
the god with hands extended on both sides
Or the son of God
Prays that solace be offered to all her sorrows
In the form of a kiss.
He refuses to promise.
She leaves him not; insists.
*
Those who brew alcohol
are heartless, said they spinning tale.
Till I began gulping it
I didn’t believe.
But, as I went on drinking.
I began to believe
I felt hesitant to believe it all by myself.
When I asked another also to believe it
He refused.
I tore off the chest of the one
Brewing that spirit.
Probing inside I said no heart there.
“Hear - No heart here.”
He began to believe.
With the smell of flesh
Alcohol was all fragrant.
You do believe – Don’t you?
*
Dark so very dark night
Rain so very soft aand so vewry rainy
So very means
striving to reach the spider web
woven by saliva
inside the ligament surrounded by tissues
The spider eye
Sees through Medulla
*
At the instant when a name pierces through
the bones bent and performs
the figure of a cat.
The cat leaps from one parapet wall to another
Cat’s legs all over the body
Cat’s furs here and there.
*
She calls the lLusts of the universe,
Curse.
She calls curses, desire.
Desire enters inside a light
and illuminates
the Holy Way.
Desire everything it tells and kills
Desire is The Radiance.
துர்சகுனத்து இரவில் மோதும் ஒளியின் முதற்சாயல்
**




உடைந்து தெறித்த பொம்மையின் கை
தரையில் மோதி
சுக்குநூறாக சிதறியபோது
கைவிடப்பட்ட பிள்ளைகளின் முகங்களென
அறைமுழுக்க பரவியது
கை அற்ற
பொம்மையை
நாடியது கைவிடப்பட்ட இன்னொரு கை.
**
பைன் மரத்தின் தடித்தகிளையொன்றில்
சணல் கயிற்றால் கழுத்தை சுருக்கிட்டு
கால்களைத் தாங்கிக்கொண்டிருந்த
மூங்கில் கூடையைத்தள்ளிவிட்டு
உடலை
காற்றிலாடும் லாந்தர் விளக்குபோல்
மாய்த்துக்கொள்பவர்களுக்கென பிரத்தியேகமாக
ஒரு பாடல் இருக்கிறது
அதன் ஒரு பாதியை
அந்தக்குயிலும்
மீதியை
தொங்குபவனின் உதடுகளும்
பாடும் கேள்.
**
கைகள் விரித்தபடி நிற்கும் கடவுளை
அல்லது
கடவுளின் மைந்தனை
இரவுகளில் அழைப்பவள்
தனது
எல்லா நிராசைகளுக்கும்
ஒரு முத்தத்தின் வடிவத்தில்
நிவாரணமளிக்குபடி இறைஞ்சுகிறாள்
அவர்
வாக்களிக்க மறுக்கிறார்
அவள் விடுவதாகயில்லை.
**
எரிசாராயம் காய்ச்சுபவர்களுக்கு
இதயம் இல்லையென கதை சொன்னார்கள்
எரிசாராயத்தை பருகத்தொடங்கும் வரை
அதை நம்பவில்லை
பருகப்பருக
பருகப்பருக
நம்பத்தொடங்கினேன்
தனித்து நம்பத்தயக்கமாக இருந்தது
இன்னொருவனையும் நம்புமாறு கேட்டதற்கு
அவன் நம்பமறுத்தான்
எரிசாராயம் காய்ச்சுபவனின் மார்பைக்கிழித்தேன்
கைகளால் துழாவி இதயம் இல்லையென்றேன்
“இதயம் இல்லை”
அவன் நம்பத்தொடங்னான்
மாம்ச வாசனையில்
எரிசாராயம் மணத்துக்கிடந்தது
நீங்கள் நம்புகிறீர்கள்தானே?
**
இரவென்றால் அத்தனை கரிய இரவு
மழையென்றால் அத்தனை நெகிழ்மழை
அத்தனையென்றால்
திசுக்கள் சூழந்துகிடக்கும் தசைநார்க்குள்
எச்சிலால் பின்னப்பட்ட
சிலந்திவலையை அடையும் முயற்சி
சிலந்தியின் கண்
மெடுல்லாவின் வழிக்காண்கிறது
ஒரு பெயர்
ஊடுருவும் நொடியில்
எலும்புகள் வளைந்து பூனையுருவை நிகழ்த்துகிறது
பூனை மதிலுக்கு மதில் தாவுகிறது
உடலெங்கும் பூனைக்கால்கள்
ஆங்காங்கே பூனைமயிர்கள்
பிரபஞ்சத்தின் காமங்களை
சாபம் என்கிறாள்
சாபங்களை ஆசையென்றழைக்கிறாள்
ஆசை
ஒளியொன்றில் நுழைந்து
பரிசுத்தப்பாதைக்கு ஒளிக்காட்டுகிறது
அத்தனைக்கும் ஆசைக்கொள்ளென கொல்கிறது
ஆசையே ஒளி.

INSIGHT MARCH 2021

INSIGHT - JULY 2026