INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, March 7, 2026

SHANMUGAM SUBRAMANIAM

A POEM BY
SHANMUGAM SUBRAMANIAM

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

A day of mine
on returning home
has become the coin
lost by someone unknown
lying in the heap of dust
at the roadside
drawing the attention of none
in the power-cut that takes place
while listening to Music
the loss suffered by the musical strains
once the power is restored
one more ‘being together’.
with the four wall of the room.
In today’s absence of the star
that was closely watched the night before
Just as the radiance of the adjacent star
spreading
Another day so might dawn.
When getting up and going to drink water
In five steps
wondering why I got up
While washing the hand
The way the tongue craves for water
What else to do except laughing at it
The lines of the pages
of a year’s diary
which I thought of writing
but left the lines
untouched by the tip of my pen –
_ Alas, how so futile it is
to think of them now....

வீதியோரம் புழுதிக் குவியலில்
ஒருவரது கவனத்தையும் பெறாது கிடக்கும்
யாரோ தவறவிட்ட நாணயமாகிவிட்டது
வீடுதிரும்புகையில் எஞ்சும்
என் நாள்
இசை கேட்கையில் ஏற்பட்ட மின்தடையில்
துண்டிக்கப்பட்ட இன்னிசையிழைகள்
மின்சாரம் திரும்பிய பின்னர்
உணரும் இழப்பில்
அறையின் சுவர்கள் நான்குடன்
இன்னுமோர் உடனிருத்தல்
நேற்று உன்னித்த வான்புள்ளியில்
இன்று அத்தாரகையின்மையில்
அடுத்துள்ள தாரகையின் ஒளிமினுக்கம்
பரவுவது போலும்
இன்னொரு நாள் வாய்க்கலாம்
நீரருந்த எழுந்து சென்றதும்
ஐந்து அடியில் எதற்காக எழுந்தேனென யோசித்து
கையை கழுவும் போது
நா நீரை வேட்கையுறுதலை
நகைப்பதன்றி என்ன செய்வதோ
எழுதலாம் என்றிருந்த
ஒருவருடத்திய நாட்குறிப்பின்
எழுதுகோல் நுனி தீண்டாத பக்கங்களின் கோடுகளையெல்லாம்
இப்போது எண்ணி பயனென்ன?
- எஸ். சண்முகம்

SIVARASA KARUNAKARAN

A POEM BY
SIVARASA KARUNAKARAN

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
We stand along the path of no-return
Such ‘no-return paths are there
With one and all
You need not feel sad Ji
No use regretting
If we expect that we would become
a laughing stock
But, we are not the Time’s Clowns – Are we?
The path and the direction we travelled along
were indeed new
So was the field of action
Along the new paths
A thousand crucifix
Crown of thorns many thousands.
Those days many dared not
to travel by our side
They huddled in the dark of pit
shrouded by fear and apprehension
Today
They have become Heroes of the
Era of Valour
holding sword made of cardboards
and performing on stage.
We can’t laugh nor feel sad
Thus History has always been _
Clownish, venomous
Forever Masked
Along the path of no-return
Caught in destiny’s narrow crevice
that allows not to move on
We are struggling, Ji ...
Let You and Me
mutually turn our worries into a ball
and play
‘This is the Game of Madness’
- Some might say.
O Yes! - One and all new traces
do belong to the crazy ones !

நாம் திரும்பிச் செல்லவே முடியாத பாதையில்தான் நிற்கிறோம்
திரும்பிச் செல்ல முடியாத பாதைகள்
எல்லோரிடமும் உண்டு
நீ வருத்தப்பட வேண்டியதில்லை ஜீ
வருத்தப்பட்டு ஆகப்போவது ஏதுமில்லை
அப்படி எதிர்பார்த்தால் அது பரிகசிப்பாகும்
நாம் காலக் கோமாளிகளல்லவே.
நாம் பயணித்த பாதையும் திசையும் புதிது
களமும் புதிது
புதிய பாதைகளில்
சிலுவைகள் ஆயிரம்
முள்முடிகள் பல்லாயிரம்
அன்றெல்லாம் நம்முடன் பயணிப்பதற்குப் பலரும் வரவில்லை
அச்சமும் தயக்கமும் சூழ்ந்த குழியின் இருளில் பதுங்கினர்.
இன்றோ
அவரெல்லாம்
வீர யுகத்தின் நாயகராகி
அட்டைக் கத்திகளோடு
அரங்கில் கூத்தாடுகின்றனர்
சிரிக்கவோ துக்கப்படவோ முடியாது நாம்
வரலாறு இப்படித்தான் கோமாளித்தனமாகவும்
வஞ்சகமாகவும் முகமூடியோடிருக்கிறது
திரும்பிச் செல்ல முடியா வழியில்
மேலும்
முன்னகர வழியற்ற விதியின் இடுக்கில்
திணறிக் கொண்டிருக்கிறோம் ஜீ
உன் துயரை நானும்
என் கவலைகளை நீயும்
ஒரு பந்தாக்கி விளையாடுவோம்
இது 'பைத்தியக்காரத்தனத்தின் விளையாட்டு' என்று யாரும் சொல்லக் கூடும்
புதிய சுவடுகள் எல்லாம்
பைத்தியங்களினுடைவையாகத்தானே உள்ளன!

ZEENAT NAZEEBA

TWO POEMS BY
ZEENAT NAZEEBA
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
1. PUPPET
It is this brain
which proves difficult to handle
Wagging its tail always
It does bite you and tear you to pieces
umpteen number of times
I am the Master and I am the Slave
- thus it makes you dance
like a puppet
As a little girl
holding its knees
and burying the face
It persists tenaciously
If applauded
It leaps and jumps
Typing the poems long forgotten
It determines the pages too
All at once
It coils like a Millipede
Let ‘s leave it
What it is up to
It only knows.

கைப்பாவை
—————————————————————-
இந்த மூளைதான்
கையாளச் சிரமமாக இருக்கிறது
எப்போதும் வாலாட்டும் அது
பலமுறை
கடித்துக் குதறவும் செய்கிறது
நானே எஜமானும் அடிமையும் என்று
கைப்பாவையாக ஆட்டுவிக்கிறது
ஒரு சிறுமியென
முழங்கால்களைக் கட்டி
தலையைப் பொதித்து அடம்பிடிக்கிறது
பாராட்டினால்
எம்பிக் குதிக்கிறது
என்றோ மறந்த கவிதைகளை
தட்டச்சு செய்வதோடு பக்கங்களையும்
அதுவே தீர்மானிக்கிறது
திடீரென
ரயில்பூச்சியாக சுருண்டுகொள்கிறது
விட்டுவிடலாம்
அது
என்ன செய்யுமென்று
அதற்கு மட்டுமே தெரியும்.
*.
- ஜீனத்

2. STATE OF BEING
You creating the scene
that wasn’t
Out of that
I formed another.
Believing that
with two semi-circles
We have created a wholesome one
We have made the Moon
shine
on a New Moon Day
While you regain normalcy
I keep searching for myself
inside the circle.

நிலை
——————————————————
இல்லாத காட்சியை நீ உண்டாக்கிட
நான்
அக்காட்சியிலிருந்து
வேறொரு காட்சியை உருவாக்கினேன்
இரு அரைக்கோளங்களால்
வட்டம் சமைத்ததாய் நம்பி
சந்திரனையே ஒளிர வைத்தோம்
ஓர் அமாவாசை இரவில்
நீ
இயல்புநிலைக்குச் செல்கையில்
நானோ
வட்டத்திற்குள் என்னைத் தேடுகிறேன்
- ஜீனத்

PUNITH PUNI (PUNITHAN)

POEM BY
PUNITH PUNI (PUNITHAN)
Rendered in English by Latha Ramakrishnan(*first Draft)

THE DOG TOOK AWAY TODAY



As if someone has folded today and taken it away
the threshold remained barren.
In the midst of summer
the young man came and stood
in readymade attires.
In his eyes
the leaping frog in ‘Matsuo Basho*
kept croaking as a time-worn sound.
The humour sought for a long time
suddenly knocked on the door
In its countenance
Summer’s wilting was there
And also the fragrance of Water Lily.
The calmness of White of the winter stork
and miniscule memories
burning like the twigs of rainy season.
The lone stem of pumpkin
The shade of Banyan leaf
with which a kiss dabbed
The curved scepter of Eggplant
Grandpa’s umbrella handle
With Embroidery _
All of them
have formed the humour frame.
In the end
casting aside all philosophies
Mother alone
stood at the kitchen doorway
and said casually –
The Dog took away Today.
*Matsuo Basho: Most famous Zen poet of Japan


இன்றைய கிழமையை நாய் தூக்கி போனது
இன்றைய நாளை
யாரோ சுருட்டி எடுத்து சென்றதுபோல்
வீட்டு வாசலில் வெறுமை கிடந்தது.
கோடையின் நடுவில்
ஆயுத்த ஆடையில் நின்ற இளைஞன் —
அவன் கண்களில்
மட்சு பாஷோ வின் குளத்தில் தாவும் தவளை
ஒரு பழைய ஒலி போல
திரும்பத் திரும்ப ஒலித்தது.
நெடுநாட்கள் தேடிய
நகைச்சுவை
திடீரென கதவு தட்டியது.
அதன் முகத்தில்
கோடையின் வாடலும் இருந்தது,
ஆம்பல் மலரின் வாசனையும் இருந்தது,
குளிர்கால கொக்கின் வெண்மை அமைதியும்,
மழைக்கால சுள்ளிகள் போல
பற்றி எரியும் சிறு நினைவுகளும்.
ஒரு பூசணிக்காயின் ஒற்றைக் கொம்பு,
முத்தத்தை ஒற்றி எடுத்த
ஆலிலை நிழல்,
கத்திரிக்காயின் வளைந்த செங்கோல்,
பூவேலைபாடு கொண்ட
தாத்தாவின் குடைக் கைப்பிடி —
அனைத்தும் சேர்ந்து
அந்த நகைச்சுவையின் உடம்பை கட்டின.
முடிவில்
எல்லா தத்துவங்களையும் ஒதுக்கி வைத்து
அம்மா மட்டும்
சமையலறை வாசலில் நின்று
எளிதாகச் சொன்னாள் —
இன்றைய கிழமையை
நாய் தூக்கி போனது
.,.. க. புனிதன்

MOHAMED BATCHA

A POEM BY
MOHAMED BATCHA

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

“What are you doing?”
I asked the Sufi.
“I am loving the Almighty” said He.
“Does in any way
Love has an exclusive day”
Asked I
The world is filled with Love
said He.
If so
Why there is enmity and wrath?' asked I.
‘That is Satan’s excessive Love' said He.
‘Why so much of stupor in Love asked I.
‘It is sheer melting’, said He.
‘Will it bring any good?” asked I.
‘Fall in Love and it will be understood’
said He.

சூஃபியிடம், என்ன செய்கிறீர்கள் என்றேன்.
இறைவனைக் காதலிக்கிறேன் என்றார்.
காதலுக்கு
தனியென தினம் உண்டா?
என்றேன்
உலகம்காதலாலல்லவா நிரம்பியிருக்
கிறது என்றார்.
அப்படியென்றால்,
பகைமையும், வஞ்சமும் எதனால்? என்றேன்.
அது சாத்தானின் அளப்பரிய காதல் என்றார்.
காதல் என்றால் என்னதான் மயக்கம்? என்று கேட்டேன்...
உருகுதல் என்றார்.
அதனால் நன்மை உண்டா என்றேன்.
காதலித்து பார் புரியும் என்றார்.
.
முகமது பாட்சா

PK SIVAKUMAR

 A POEM BY

PK SIVAKUMAR

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

Time the same
People the same
But the Train is not the same
Mmm...
What did I say
The same people
But
Not exactly the same
So what
The train runs
And they too run on
Not looking around having fun
Engaged in a running race
with Time
None has time to stop and stare
All around the same haste
to ejaculate
அதே நேரம்
அதே மனிதர்கள்
அதே ரயில் இல்லை
ம்ம்
என்ன சொன்னேன்
அதே மனிதர்கள் தான்
ஆனால்
அவர்களே இல்லை
அதனால் என்ன
ரயில் ஓடுகிறது
அவர்களும் ஓடுகிறார்கள்
வேடிக்கை பார்க்காமல்
ஓடுகிற காலத்தோடு
போட்டி போட்டுக் கொண்டு
யாருக்கும் நிதானமில்லை
விந்தை வெளியேற்றத் துடிக்கும்
அவசரம் தான்.

- பி.கே. சிவகுமார்

INSIGHT MARCH 2021

KAVANUR SRINIVASAN

  A POEM BY KAVANUR SRINIVASAN Rendered in English by Latha Ramakrishnan(*First Draft) Enough Sunlight and heat we have Start collecting sha...