INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, February 17, 2023

NESAMITHRAN

 A POEM BY

NESAMITHRAN


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


Knowing well that you would admonish me
for leaving the forehead without the usual dot - mark
I posed so for the photograph.
It was hoping against hope that you would search for me
that I went missing for a few days.
It was for making you hold me all the more closer
that I strolled along the pathways of foes.
It was for you to correct
my poem had several grammatical errors
For a small word of solace
I proclaimed my ailment
disclosed to no one else.
Driven by the craving of being held by thee
all these and more, you see.
The reason for my lying like a corpse
with all my identities erased
is not to make you wail beating your chest.
It is to have your love
in miniscule measure as the shine of star.
Height of absurdity - Yes
Yet it is due to such absurdities
that in this world
deaths are being postponed.

நீ திட்டுவாய் தெரியும்
தெரிந்துதான் அந்தப் புகைப்படத்தில்
பொட்டு இல்லாமல் நின்றேன்
நீ தேட மாட்டாயா என்ற நப்பாசையில் தான் சில நாட்கள் தொலைந்து போனேன்
என்னை இன்னும்
இறுகப்பற்றுவாய் என்றே
உன் எதிரிகள் வீதிகளில் புழங்கினேன்
நீ திருத்துவாய் என்றுதான் அந்த கவிதையில் ஒரு சந்திப் பிழையும் இரண்டு ஒற்றுப் பிழைகளும்
சிறிய ஆறுதல் சொல்லுக்காய்
யாருக்கும் சொல்லாத
நோய்மையை பறைஅறிவித்தேன்
ஏந்திக் கொள்வாய் என ஏங்கியே இவ்வளவும்
என் எல்லா அடையாளங்களையும் அழித்துக்கொண்டு பிரேதம் போல் கிடப்பது நீ மாரில் அடித்துக்கொண்டு அழ வேண்டும் என்பதற்காக அல்ல
ஒரு நட்சத்திரம் மினுங்கும் அளவு
உனது அன்புக்காகத்தான்
எவ்வளவு அபத்தம்
ஆனால் பார்
இப்படியான அபத்தங்களால்தான்
இவ்வுலகில் சாவுகள் ஒத்தி
வைக்கப்படுகின்றன.

நேச மித்ரன்

RAMESH PREDAN

 A POEM BY

RAMESH PREDAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


THE DARK AND THE MUSIC


The Veena changing place
was lying on his cot sideways
Lifting me he made me recline on his lap
and started strumming
Right above the terrace
midnight moon
melted and dripped.
In the cool shine filling the cabin
with the ceiling seeping
we rolled floating.
An hour before dawn
the strings one by one
were torn and burst apart.
After that despite dawning
Light has never pervaded inside the cabin.
He who makes love through Music
collects the specs of music that
vary within
and smashes them into a mass
so creating me as suits his whims and fancies.
Art is that which
happens outside the body.
That which happens within
is lust.
At the point wherein
Within and Without confront each other
God, the nebulous hypothesis
with no start nor finish
inserts its head into a noose
In the amorphous construct of sound
I emerge as Music
and am waiting.
In the art of lovemaking
of Dark and Light
For he alone
I would be in sight.

இருளும் இசையும்
வீணை இடம்மாறி
அவனது கட்டிலில்
ஒருக்களித்துப் படுத்திருந்தது
என்னைத் தூக்கி
மடியில் சரித்து
மீட்டத்தொடங்கினான்
நடுயிரவு மதியம்
மொட்டைமாடிக்கு நேர் உச்சியில்
உருகிச் சொட்டியது
தளம் கசிந்து அறைக்குள் நிரம்பிய தண்ணொளியில்
மிதந்துப் புரண்டோம்
விடியலுக்கு ஒரு நாழிகைக்கு முன்
தந்திகள் ஒவ்வொன்றாக
அறுந்துத் தெறித்தன
அதற்குப் பிறகு விடிந்தும்
வெளிச்சம் இதுநாள்வரை
அறைக்குள் பரவவில்லை
கலவியை இசையால் நிகழ்த்துபவன்
தன்னில் வேறுபடும்
ஒலித் துகள்களை
அள்ளிப் பிசைந்து
தனக்கு ஏற்றதாய்
என்னைச் செய்வான்
உடம்புக்கு வெளியே
விளைவது கலை
உடம்புக்கு உள்ளே
விளைவது காமம்
உள்ளும் வெளியும்
எதிர்கொள்ளும் புள்ளியில்
கழுத்தில் சுருக்கிட்டுத் தொங்குகிறது
கடவுள் என்னும்
ஆதியும் அந்தமுமில்லா கற்பனை
ஒலியின் உருவிலிச் சமைவில்
இசையாகத் தென்படுகிறேன்
காத்திருக்கிறேன்
இருளும் ஒளியும் புணரும் கலையில்
அவனுக்கு மட்டுமே கட்புலனாவேன்.

ரமேஷ் பிரேதன்

PON ILAVENIL B

 A POEM BY

PON ILAVENIL B

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

AWARDS

The heroic scars of leaping as high as
four feet plus
for a plastic cup
costing one rupee at the most
and tumbling down in the process
are dissolved with the
passage of Time.
Children today
know the way
of getting
Horse-dolls
Elephant-dolls
Toy-guns
James Bond dolls
Spiderman dolls
_ as suits their whims and fancies.
Hanging from atop the Tamarind tree
jumping from there
weeping wailing
insisting utmost
somehow they manage
to get them
at any cost.
Pon Elavenil B
விருதுகள்
________
ஒரு ரூபாய்
பிளாஸ்டிக் டம்ளருக்கு
நான்கு அடி சொச்சம் உயரம்
தாண்டித் தாண்டி
விழுந்த விழுப்புண்கள்
காலத்தோடு கரைந்து போய்விட்டது
தற்போதைய குழந்தைகளில்
குதிரை பொம்மைகள்
யானை பொம்மைகள்
துப்பாக்கி பொம்மைகள்
ஜேம்ஸ் பாண்டு பொம்மைகள்
ஸ்பைடர் மேன் பொம்மைகள்
இப்படி ஆசைக்கு ஏற்ப
புளியங்கொம்பில் தொங்கி
குதித்து அழுது அடம்பிடித்து
எப்படியாவது வாங்கி விடுகிறது.

RIZMI YOOSUF

 A POEM BY

RIZMI YOOSUF

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

When a new love blossoms
this world
creates an exclusive fragrance
Whenever you feel love
You would be filled with fragrance.
In the soothing bonds soft and tender
as soil blooming in rain
or as sand heaped by ants
The fragrance alone would remain
firm and fixed.
Even when there is nothing more to pursue
When the hold slackens and slips off
As the anguish of the yellow belly larva
being washed away in the streaming water
the fragrance would follow thee
wherever you be
That is Infinity.
புதிதாய் ஒரு நேசம் பிறக்கும் போது
இந்த உலகம்
ஒரு நறுமணத்தை உருவாக்குகிறது
நேசத்தை உணரும்தோறும்
நீங்கள் வாசனையால் நிறைவீர்கள்
மழையில் பூத்த மண் போலோ
எறும்புகள் குவித்த மண் போலோ
மென்மையூடிய பிணைப்புகளிடையே
வாசனை மட்டும் இறுகியிருக்கும்
தொடர்வதற்கு இனி ஏதுமற்ற போதும்
பற்றியிருக்க
பிடிகள் நழுவும் போதும்
நீரில் அடித்துச் செல்லும்
மஞ்சள் வயிற்றுக்குடம்பியின் தவிப்பாய்
அந்த மணம் கூடவரும்
அதுவே சாஸ்வதமுமாகும்.

ரிஸ்மி யூஸுஃப்

AATHI PARTHIPAN

 TWO POEMS BY

AATHI PARTHIPAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

(1)

Said the Lord _
‘Instead of placing millions of flowers in your hands
I would rather place just one flower in your heart
That would make your entire jungle fragrant’
Said the Lord _
‘Beyond all the birds that throng your garden
there would be one
with wings fluttering in your memory’s terrain.
Said the Lord _
Though you would walk in front of waves numerous
one particular wave would bring thee
the entire sea.
Thus arrived She
to He.

உனது கைகளில் கோடான கோடி மலர்களை வைப்பதிலும் பார்க்க
இருதயத்தில் ஒரே ஒரு மலரை வைப்பேன்
அது உன் மொத்த வனத்தையும்
சுகந்திக்கும் என்றார்
பின் தேவன்
உனது வனத்தில் கூடும் பறவைகளிலேயே தேடிக் கண்டுகொள்ளாதபடிக்கு
ஒரே ஒரு பறவை உனது நினைவுகளில் சிறகடிக்கும் என்றார்
நீ எத்தனை அலைகளில் முன்
நடக்கின்ற பொழுதும்
ஒரு அலை
மொத்த கடலையும் உன்னிடம் சேர்ப்பிக்கும் என்றார்
இவ்வாறாக
அவள் அவனிடம் சேர்ந்தாள்.

ஆதி பார்த்திபன்

(2)
A violin has started strumming
the first wave of a sea
woven by words _
On the shore melting and foaming
at the rim of heart
there stands a rock
with the scent of Life's moss
all fragrant
which just like the sea we have created earlier
is also made of words.
When I read the hue of sea
the first line, in seclusion
there sounds in the heart
the wings’ flutter
of the bird that rises above
after dipping into the water
The sea at one time a rock
with waves falling upon
sometime a fish, sometime a hook
Each word that you don’t get immersed
at the first instant
overcome by fear
and the water entire
in which you eventually drown
and die
is but a sea.
A Sea Wordlike.
Aathi Parthipan

சொற்களால் வேயப்பட்ட கடலொன்றின்
முதல் அலையை ஒரு வயலின் இசைக்க ஆரம்பித்திருக்கிறது
வாழ்வின் பாசி மணக்க இதயத்தின்
விளிம்பில்
கசிந்து நுரைக்கின்ற கரையில் ஒரு பாறை இருக்கின்றது
நாம் முதலில் செய்த கடலை போலவே சொற்களால்
உருவாக்கியது
கடலின் வண்ணத்தை, தனியே முதல் வரியை நான் படிக்கும் பொழுது
இதயத்தில் இரைகிறது
நீர் தழுவி மெலெழும்பும் பறவையின்
சிறகின் வலிப்பு.
கடல் ஒரு பொழுதில் அலை விழும் பாறை
ஒரு பொழுதில் மீன் ஒரு பொழுதில் தூண்டில்
நீ முதல் தடவை மூழ்காமல் அச்சப்படும் ஒரு சொல்லும்
முடிவில் மூழ்கிச் சாகும் முழுநீரும்
ஒரு கடலே
சொல்லைப் போல ஒரு கடல்.

FRANCIS KIRUPA

 A POEM BY

FRANCIS KIRUPA


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


Wonder why
Consciously or instinctively
I had taken a handful of sand
from where you had landed
and created a world
Ere I could make a sea out of your
wet strands of hair
Going past you disappeared
As the Sun up above
burns a sole glance
so very intense
My miniscule earth
dries up in scorching heat
If wells are dug in search of founts
Blood springs forth; splashes around.
My love
As alms ask I, thine
a few droplets pristine.

தெரிந்தோ தெரியாமலோ
உன் காலடி மண்ணெடுத்து
ஒரு பூமி செய்துவிட்டேன்.
உன் ஈரக் கூந்தலை
கடலாகச் செய்யும் முன்னே
கடந்து போய்விட்டாய்.
உயரத்திலிருந்து சூரியனாய்
வருத்துகிறது ஒற்றைப் பார்வை.
வெப்பத்தில் வறள்கிறது
எனது சின்னஞ்சிறிய பூமி.
நீரூற்று தேடிக் கிணறுகள் தோண்டினால்
பீறிட்டடிக்கிறது ரத்தம்.
கண்ணே
இரண்டொரு தீர்த்தமணிகளைத்
தானமிடு.
- ஜெ. பிரான்சிஸ் கிருபா

MADURAI SATHYA

 TWO POEMS BY

MADURAI SATHYA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

(1)


As the mother went running to catch the bus
lifting the child in her hand
The child had to let slip its lollypop.
Looking at the fallen candy longingly
the child had started sobbing.
With the day
wherein the grownups
having no time to stop and stare
moved on stamping on the lollypop
lying there
coming to an end
and the night commencing
small ants started swarming all over the lollypop.
The child which continued sobbing till then
thinking of the lollypop slipped and fallen
Thanks to the blessing of these tiny ants
calmed down
and set forth to sleep therein.

பேருந்தைப் பிடிக்க குழந்தையை
கையிலேந்தி ஓடிய அம்மாவின் பொருட்டு
தன் கையில் இருந்த லாலிபாப்பை
நழுவ விட்டது அக்குழந்தை
தரையில் விழுந்த லாலிபாப்பை
ஏக்கத்துடன் கைக்காட்டி
அழ ஆரம்பித்திருந்தது
லாலிபாப்பை கவனிக்காத மனிதர்கள் அதனை காலால் மிதித்தப்படி கடந்துப் போய்க்கொண்டிருக்க
பகல் அடங்கி இரவு முளைத்தபின்
தரையில் கிடந்த லாலிபாப்பை சுற்றி சிற்றெறும்புகள் மொய்க்கத் தொடங்கியது
அதுவரை கைத்தவறிய லாலிபாப் குறித்த விசும்பலில் இருந்த குழந்தை எறும்புகளின் ஆசிர்வாதத்தில் இப்போது ஆசுவாசமாக படுத்துறங்கத் தயாரானது .

மதுரை சத்யா

(2)

I am not all that familiar
to the two and a half year old
Little Shoby Dear
Just four days since she has joined my class
Wonder why but she keeps pursuing me
sits in my lap alone
In the place where I leave my footwear
she too brings and keeps hers.
Just as whenever rain comes
Sun would also come for a brief spell
offering rainbow.
Ho!
In such short-term Love do I repose
and rejuvenate

பெரிதாய் ஒன்றும் பரிட்சயமில்லை
இரண்டரை வயதான சோபிகுட்டிக்கு
நான்குநாட்கள் தான் ஆகியது
என் வகுப்பிற்குள் சேர்ந்து
ஏனோ என்னைத் தொடர்கிறாள்
என் மடிமீது மட்டுமே அமர்கிறாள்
என் காலணியை வைக்குமிடத்திலே
அவளும் தன்னுடையதை
கொண்டு வந்து வைக்கிறாள்
மழை வரும்போதெல்லாம் வெயில் வந்து கொஞ்ச நேரம் வானவில்லை
தந்துவிட்டு செல்வதுபோல்
இப்படியான குறுகியகால அன்பில் அவ்வப்போது என்னை இளைப்பாற்றிக்கொள்கிறேன்..

மதுரை சத்யா

INSIGHT MARCH 2021

INSIGHT - OCT - NOV, 2025 - PARTICIPATING POETS