INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, March 29, 2022

RENGARAJAN VEERASAMY

 A POEM BY

RENGARAJAN VEERASAMY


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

Turning the sleepless night
into Sea _
Your separation.
Your body becomes the
plastic bottle
floating on it.
Lust _
the wave that swells
filling your within
for having you drowned in it
as the enormity of the gigantic elephant trunk
rolling the rocks playfully.
As the tiny pin proving difficult to handle_
Aloneness.

(Yugayugan)
Rengarajan Veerasamy
உறக்கமற்ற இரவை
கடலாக்குகிறது
உனது பிரிவு
அதில் மிதக்கும்
நெகிழிப் போத்தலாகிறது
உனதுடல்
உன்னுள் நிரம்பி
தன்னுள் ஆழ்த்த
தளும்பும் அலையாகிறது
காமம்
பாறைகளை உருட்டி விளையாடும்
தும்பிக்கையின் பிரமாண்டம்
கையாளத் திணரும்
குண்டூசியென தனிமையின்
திருகு இறுகிய மூடி.
- யுகயுகன்

NA.PERIYASAMY

TWO POEMS BY

NA.PERIYASAMY

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

1. TEA BLOSSOM
We could’ve stayed a little longer
Our conversation could have stretched
A little
The little girl who drew our attention
Need not have finished her game
So soon.
Everything ends all too fast
With no rhyme or reason
Yet
To stay on lingering in memories
Something or other does take place
The Tea blossomed that day
Oh, why should its taste be
sheer divine….

மலர்ந்த தேநீர்
இன்னும் கொஞ்ச நேரம்
அமர்ந்திருந்திருக்கலாம்
உரையாடல்
சற்றே நீடித்திருக்கலாம்
நமை ஈர்த்த சிறுமி
விளையாட்டை முடிக்காது இருந்திருக்கலாம்
எல்லாமும்
காரண காரியமற்றே
சடுதியில் முடிந்திடுகிறது
இருப்பினும்
நினைவில் தங்கி வாழ்ந்திருக்க
ஏதாவது நிகழத்தான் செய்கிறது
அன்று மலர்ந்த தேநீருக்கு
ஏன்தான் அத்தனை சுவையோ…


2. SCENARIO
A line stretched
along the open space
At the instant when the birds
with beaks entwined
Up-down
Down-up
Came into view
When you came and sat for a
split-second
in the empty seat next to mine
absolutely divine.

காட்சி
அந்தரத்தில்
நீண்டிருந்தது கோடு
மேலிருந்து கீழும்
கீழிருந்து மேலுமாக
அலகுகள் பிணைந்திருந்த
பறவைகளைக் கண்ட கணத்தில்
என் அருகாமையிலிருந்த காலி இருக்கையில்
நீ அமர்ந்து சென்ற கண நேரம்
அத்தனை மகத்தானது.

ANBUTHOZHI JAYASHREE

 A POEM BY

ANBUTHOZHI JAYASHREE

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

TOO SMALL A WORLD


A tiny rose fell by my side
In its stem that bore it firm
there were thorns and leaves
Half-unfolded coyly
It would lure you into caressing it
as if in communion.
For gifting its quietude a bouquet
in rows would bloom
a woodland of rose
in the mobile.
Would gift a sequence of the hours
of the wilderness of flowers
with no intent whatsoever
Would beget roses untiringly.
With sturdy hands spreading
from out of blue
the strength to bear that massive hug
truly its tiny wings wouldn’t be having
_ So saying with a bow
the little sparrow
of the hardened wild tree
would fly away, up above.
ANBUTHOZHI JAYASHREE
மீச்சிறு ரோஜாமலரொன்று வந்து விழுந்தது
உறுதியோடு தாங்கிப் பிடிக்கும் காம்பில்
முட்களும்... இலைகளுமிருந்தன
விரிந்தும் விரியாத அதன் தயக்கத்தை
முயக்கமாக கொஞ்சத் தோன்றும்
அம்மௌனத்திற்கு ஒற்றைப்
பூங்கொத்தைப் பரிசளிக்க
வரிசையாக வந்து விரியும்
அலைபேசியிலோர் ரோஜாக்காடு
மலர்க்காட்டின் தொடர்பொழுதுகளை
நோக்கமின்றிப் பரிசளிக்கும்
சலிக்காது ரோஜாக்களைப் பிரசவிக்கும்
வலிமிகு கைகள் எங்கோயிருந்து பரவ...
அப்பெரும் அணைப்பைத் தாங்கும் வலிமை
நிச்சயம் தன் மீச்சிறு சிறகுகளுக்கு இருக்காதென்றே
இரக்கமில்லா காட்டுமரத்தின் சிட்டுக்குருவி
வணக்கம் சொல்லிப்பறக்கும்

THAMIZHNATHY

A POEM BY
THAMIZHNATHY
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


FROZEN TIME FRAME
The woman releasing herself from home
removes the wall clock of the home exclusive
where she has arrived
and hides it.
Tears off the calendar pages
holding them in a bunch
After switching off the mobile
She looks in the mirror
The face gleaming in the gay abandon
of forsaking Time.
Henceforth her hours and meals time
are nameless.
No need to feel sad about the dust
settling on the door
that no friend nor foe knocks at.
Just as discarding the all too tight
and absolutely unnecessary inner-wears
She removes all the dos and don’ts carefully taught
and with a swing throws them out.
They rise up above, higher and higher
as a bird having no heart to ever return
to the world at all.

காலம் உறைந்த சட்டகம்

வீட்டிலிருந்து
தன்னை விடுவித்துக்கொண்ட பெண் தான் வந்தடைந்த தனி வீட்டின் சுவர்க்கடிகாரத்தைக் கழற்றி மறைத்துவைக்கிறாள்
நாட்காட்டியின் தாள்களை கொத்தாகக் கிழித்தெறிகிறாள்
அலைபேசியை அணைத்துவைத்தபின் காலத்துறப்பின் களிப்பேறி மினுங்கும் முகத்தை கண்ணாடியில் பார்க்கிறாள்.
இனி அவளது
பொழுதுகளுக்கும்
உணவு வேளைகளுக்கும் பெயர்களில்லை
நண்பர்களாலோ எதிரிகளாலோ தட்டப்படாத கதவில்
படியும் காலத்தின் தூசியைக் குறித்தொரு விசனமுங் கொள்ள வேண்டியதில்லை
இறுக்கமானதும் அவசியமற்றுப் போனதுமான உள்ளாடைகளைக்
கழற்றி எறிந்ததுபோல
கற்பிக்கப்பட்ட ஒழுங்கனைத்தையும்
கழற்றி சுழற்றி வீசுகிறாள்
அவை மேலே மேலே செல்கின்றன
பூமிக்குத் திரும்பவே மனமற்ற ஒரு பறவையைப் போல.

தமிழ்நதி

FATHIMA NALEERA

 A POEM BY

FATHIMA NALEERA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

Slowly I am making my exit from your dreams
As the next move
Or the final move
You are shifting your coins for
the next move…..
Reasons for your moving away
being mere lip service
not attached nor detached
Go thee concealing as someone unknown.
Though the joy of yesterday
Is missing today
This day’s sorrow
I would fight successfully tomorrow….
Like Siddhartha you might visit for a few hours
and leave…
But I won’t ask a question like Yasodhara….
Who is Yasodhara
History would have forgotten her….
So lies concealed
throughout the expanse of History
Woman’s Life and, her misery.

Fathima Naleera

மெல்ல மெல்ல -உன்
கனவுகளிலிருந்து --நான்
விடைப்பெற்றுக் கொண்டிருக்கிறேன்...
அடுத்த கட்ட நகர்வாக ...
அல்லது இறுதி நகர்வாக --உன்
நகர்வுக்கான காய்களை
நகர்த்திக் கொண்டிருக்கிறாய்....
உன் விலகலுக்கான காரணங்கள்
உதட்டளவில்
ஒட்டியும் ஒட்டாமலும்
”யாரோ”வாக மறைத்துச் செல்கிறாய்....
நேற்றைய மகிழ்ச்சி
இன்றில்லை யெனினும்...
இன்றைய சோகத்தை
நாளைய பொழுதினுள் எதிர்த்து
வெல்வேன்....ஆனால்
ஏதோ ஒரு மனநெருடலுக்காக
நீ சித்தார்த்தன் போன்று
ஒருசில நாழிகை வந்து செல்லலாம்...
என்றாலும்
நான் யசோதரையைப் போன்று
ஒரு கேள்வி கேட்கமாட்டேன்...
யசோதரையென்றால்...யாரென்று
வரலாறுகளும் மறந்து போயிருக்கும்..
இப்படிதான் வரலாறு வழிநெடுகிலும்
பெண் துயரம் அல்லது
சரித்திரம் மறைக்கப்படுகிறது...

--பாத்திமா நளீரா--

RIZMI YOOSUF

 A POEM BY

RIZMI YOOSUF

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

In the empty classroom
Bharathi remained alone
The moustache sprouted on the table
was muttering the elegies of a bygone era.
Within the silence-swallowing Silence Supreme
one by one entered and exited.
Each pair of eyes kept on staring
in attachment unabated
The characters that came to life
as Gugan
Mariyaall
Salma
casting a keen look upon
the wall clock
From the battery that worked no more
a loud wail exploded.
From the shrubs that have eaten the void
that creates graveyards
a sound went on resonating.

Rizmi Yoosuf

வெறிச்சோடிய வகுப்பறையில்
பாரதி தனித்திருந்தான்
மேசையில் முளையவிட்ட மீசை
முடிந்துபோன காலமொன்றின்
இரங்கல் பாடல்களை முணுமுணுத்தபடியிருந்தது
அமைதியை விழுங்கிய பேரமைதிக்குள்
ஒருவர் பின் ஒருவராய்
வந்து போயினர்
ஒவ்வொரு சோடிக்கண்களும்
தணிந்துபோகாத பற்றுதலில்
வெறித்தபடியிருந்தன
குகனும்
மரியாளும்
சல்மாவுமாய்
உயிர்பெற்ற பாத்திரங்கள்
சுவர்க்கடிகாரை உற்றுப்பார்கையில்
நின்றுபோன பற்றரிக்குள்ளிருந்து
ஒரு துடி அழுகை பீறிட்டெழுந்தது
மயானவெளிகளை உருவாக்கும் வெறுமையைத் தின்ற
புதருக்குள்ளிருந்தும்
ஓர் அரவம் இசைத்தபடியிருந்தது

IYARKKAI

 A POEM BY

IYARKKAI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


“PLUCKKkk…”
The dry pond is quiet and still
When a thin current of wind
swirls and gets on the shore
in the manner of making even the
small mounds and fissures,
When the trees spread the shadow
of their barren branches
and express thanksgiving in their own way
With the dung of sheep and rat
and urine spreading stench,
avoiding going around and
the cattle getting down straight
and reaching the bank
looking back at the length breadth
and depth of the waterbed
the pond remains quiet
just as an old woman
occasionally feeling the shrunken lines
of her abdomen
looking at its lines on the shore
and the shadows of the birds flying past
watching the dryness that flows on the shore
and climbs up the mountain
it stays quiet.
That day
at that time
an unknown woman
comes and sits on the pond-steps
searching from her sterile lap
she throws the stones
one by one
One
Two
Three
Till that the pond watching quietly
and the fourth stone lands in it
“Plukk……”

ப்ளக்.
******
- இயற்கை

வறண்ட குளம் அமைதியாக இருக்கிறது
மிகச் சின்னதான ஓரு காற்றுச் சுழல்
வெடிப்புகளைச் சமன் செய்வதைப் போலச்
சுழன்று கரையேறுகிற போதும்
மரங்கள் தமது
வெறுங் கிளைகளின் நிழலைப் போட்டு
தமதளவில் ஓர் நன்றியாற்றுகிற போதும்
முதல் நாளின் புழுக்கைகளும் சிறுநீரும் நெடி கிளப்ப
சுற்றிச் செல்வது தவிர்த்து
நேராக இறங்கிக் கரையேறும் மந்தை
குளத்தின் நீளம் அகலம் ஆழத்தை
திரும்பி பார்த்துச் செல்கிற போதும்
குளம் அமைதியாகவே இருக்கிறது
வயோதகி எப்போதாவது
தனது அடிவயிற்றின் சுருக்கங்களை
தடவிக்கொள்ளுதல் போல
சுற்றிலும்
கரையில் படிந்திருக்கும்
தனது கோடுகளைப் பார்த்துக்கொண்டு
கடக்கும் பறவைகளின் நிழல்களைப் பார்த்துக்கொண்டு
கரையில் வழிந்து மலையேறும்
வறட்சியைப் பார்த்துக்கொண்டு
அமைதியாகவே இருக்கிறது
அன்று
அந்நேரம்
யாரோ அவள்
வந்து
படித்துறையில் உட்காருகிறாள்
திறக்காத மடியில் துழாவி
ஒவ்வொரு கல்லாய் எறிகிறாள்
ஒன்று
இரண்டு
மூன்று வரை
அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தக் குளத்தில்
நான்காம் கல்
ப்ளக்.

INSIGHT MARCH 2021

INSIGHT - OCT - NOV, 2025 - PARTICIPATING POETS