INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, March 7, 2024

INSIGHT - JAN-FEB, 2024

 INSIGHT - JAN-FEB, 2024




K.MOHANARANGAN

A POEM BY

K.MOHANARANGAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

NAME BEING NONBEING

A person having more than one name is
no wonder indeed.
The real name in the records
Another to be used by the household members
Known as just the Initials in
work spot.
Friends mostly use codeword
none other can decipher.
For all these references
In tune with the tone and tenor of the voices
that call
there remain
memories exclusive in heart’s racks!
When you start calling a person
in a name unknown to any
so uniquely
a world for
just the two of you
with its secrets integral
comes to be.
When midway
for some reason
one of the two goes away
their world’s sheer aloneness
with none to address
turns the remaining one
go crazy anon
and wander with name gone oblivion.


க. மோகனரங்கன்

பெயரழிதல்
_______________
ஒருவருக்கு
ஒன்றிற்கு மேலும் பெயர்களிருப்பது
அவ்வளவு ஒன்றும் அதிசயமில்லை!
ஆவணங்களில் அசலான ஒன்று,
வீட்டிலுள்ளவர்கள் அழைக்க வேறொன்று,
வேலையிடத்தில் அறியப்படுவதோ
வெறும் தலைப்பெழுத்துகளாக மாத்திரமே !
நண்பர்கள் பாவிப்பதோ
பெரும்பாலும் குழுஉக்குறி
வேறெவருக்கும் புரியாது .
இத்தனை விளிகளுக்கும்
அழைத்திடும் குரல்களின் தொனிக்குத் தக ,
மனத்தின் அடுக்குகளில்
தனி நினைவுகள் உண்டு !
பிறர் யாருமறியாத பெயரில் ,
பிரத்யேகமாக ஒருவரை
நீங்கள் அழைக்கத் தொடங்கும்போது ,
உங்களிருவருக்கு மட்டுமே ஆனதொரு
உலகம் அதன் இரகசியங்களோடு பிறக்கிறது !
இடையில் ஏதோ காரணம்பற்றி
ஒருவர் விலகும்போது
எஞ்சிய மற்றவரை ,
அவ்வுலகின்
அழைப்பாரற்ற தனிமை
பித்தாக்கிப்
பெயர் மறந்தலையச் செய்கிறது.

G.P.ELANGOVAN

A POEM BY

G.P.ELANGOVAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


We are so used to a life of
going past, as usual,
the all too rare death
That takes place in that split-second
of that very moment
For that split-second of that particular moment
We have become close friends
As the tongue turning dry ere
it could experience the taste of the Tea
This Life is turning
So very simple.
In its end
The great sea grandly illusory
falling upon the shore
keep fumbling on
the Shore
and the Sea
forever.

அந்த நொடியின்
அந்த கணத்தில் நிகழும்
அபூர்வமான ஒரு மரணத்தை
எப்போதும்போல்
கடந்துபோகும் ஒரு வாழ்விற்கு
நாம் பழகிவிட்டோம்
அந்த நொடியின்
அந்தக் கணத்திற்கு
நாம்
நண்பர்களாக
மாறிவிட்டோம்.
ஒரு தேநீரின்
சுவையை அடைவதற்குள்
வறண்டுபோகும் நாவினைப்போல்
இந்த வாழ்வு
அவ்வளவு எளிதாக
மாறிக்கொண்டிருக்கிறது
இதன் இறுதியில்
ஒரு பெரும் கனவாகிய
பெருங்கடல் கரையில் விழுந்து
கரையிலும்
கடலிலும்
தடுமாறிக்கொண்டிருக்கிறது.

 

SEENU RAMASAMY

TWO POEMS BY

SEENU RAMASAMY

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



(1)
THE VISION OF DAUGHTER DEAREST

Door closed
forever glowing lamp radiant
_ the sanctum sanctorum.
In the quiet space of the bronze-tongues of bells
the Yaazhis descend
and lie rolling to one side.
Small elephants
Sway a little.
Mother with her exclusive power
opens the doors of the sanctum sanctorum
without waking up her little daughter
sleeping there
without completing the portrait.
Through the divine vision of the depiction
I pay my devout reverence
to Mother God Ammai’s munificence.

(*Dedicated to sister Bavatharini)

ஓவிய மகள்
.............
தூண்டா மணி விளக்கு சுடர்கிற
மூடிய கோயிலின்
கர்ப்பக்கிரகம்,
வெண்கல மணி நாவுகளின்
மௌன வெளியில்
யாழிகள் இறங்கி
புரண்டு படுக்கின்றன.
சிறிய யானைகள்
அசைந்து கொடுக்கின்றன
தாய் தன் விசேஷ சக்தியால்
மூலஸ்தானத்தின் கதவுகளை திறக்கிறாள்
ஓவியத்தை நிறைவு செய்யாமல் பாதியில் உறங்கிய இளைய மகளை
அம்மை எழுப்பவில்லை,
ஓவிய தரிசனத்தின் வழியே
அம்மையின் கருணை அருளுக்கு நான் கை கூப்பினேன்.
சீனு ராமசாமி

( தங்கை பவதாரிணிக்கு )


2. HIS BODY

He bought two wheels to the legs
As it sped past along the way
she heard not what he intended to say.
He bought her a helmet
With head weighing heavy
She went on
Ignoring his eyes lovelorn
She asked for her heart an engine
and he did buy one
Excited at flying all too fast
She went round and round
with her eyes failing to see him
standing on the ground.
He gave her the key of a new house
and she forgot to unlock the cabin-cage door
wherein she has confined him evermore.
He the man drawn towards a metallic lass
and buys her all that she asks for
a heart that is lovelorn he has
and hands made of bones
Flesh and blood and nerves
sweat-secreting skin
and legs to kneel. Alas…..
............
அவன் உடல்
கால்களுக்கு இருசக்கரங்கள் வாங்கித் தந்தான்
விரைந்த வேகத்தில் அவன் சொல்ல வந்தது கேட்கவில்லை அவளுக்கு
தலைக்கு கவசம் வாங்கி தந்தான்
பிரியத்தின் கண்களை கனத்த தலையால்
பார்க்காது போனாள்.
இதயத்திற்கு இஞ்சின் கேட்டாள்
வாங்கி தந்தான்
அதிக இயக்கத்தில் பறக்கும் வியப்பில்
மண்ணில் நிற்கும் அவனை அவள் கண்களுக்கு தெரியவில்லை,
ஒரு புதிய இல்லத்தின் சாவியை தந்தான்
அவனை பூட்டிய அறை கூண்டை திறக்க மறந்தாள்.
உலோகப் பெண்ணோடு
சிநேகித்து
கேட்டதெல்லாம் வாங்கி தரும்
அவனுக்கு அன்பில் மயங்கும் இதயமும் எலும்பால் ஆன கைகளும்
ரத்தமும் சதையும் நரம்பும்
வியர்வை சுரக்கும் உடலும்
மண்டியிடக் கால்களும் இருந்தன..
சீனு ராமசாமி.


 

VEERAMANI

  A POEM BY

VEERAMANI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



Some conversations end
within a limit
Not going beyond
Beyond a limit
some rights
call it a day and go away
Beyond a limit
To give and take
nothing is there
For Love alone
that knows not to blossom
with boundaries drawn
emanating fragrance
within a limit
remains unknown.

ஒரு எல்லையுடன்
சில உரையாடல்கள்
முடிந்துவிடுகின்றன
ஒரு எல்லைக்குப்பிறகு
சில உரிமைகள்
விடைபெற்று விடுகின்றன
ஒரு எல்லையைக்கடந்து
தருவதற்கும் பெறுதற்கும்
ஏதுமிருப்பதில்லை
ஒரு எல்லைக்குள்
மலரத்தெரியாத
அன்பிற்குத்தான்
ஒரு எல்லைக்குள்
மணப்பதற்கும்
தெரிவதில்லை

வீரமணி



M.M.BYSAL

 A POEM BY

M.M.BYSAL

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

A sunny heat
lies buried in me.
At the time of torrential downpour
I would take it out and look at it with teary eyes.
It would remain unchanged.
Jumping into the pond
while swimming under water
It would come leaping like a fish.
The heat that turning into a dog
comes pursuing along
I would lock inside a dark cabin.
At midnight
it would be shrouding my body
as a thin blanket
For those who watch from a distance
I would appear a firefly.

(Translator's Note: வெயில் என்ற சொல் ஒளியையும் வெப்பத்தையும் சூரியனையும் பகலையும் பருவத்தையும் உற்சாகத்தையும் சோர்வையும் இன்னும் நிறைய அர்த்தங்களைத் தரும். இதற்கு இணையான வார்த்தை என்று SUNஐ சொல்லவே முடியாது. ஆனாலும் மொழிபெயர்ப்பில் அந்த சொல்லைத்தான் பயன்படுத்தவேண்டியிருந்தது
...........................................................................................
M.M.BYSAL
ஒரு வெயில் என்னில் புதைந்திருக்கிறது
பெரும் மழைக்காலத்தில்
அதை
எடுத்து நீர் ததும்பப்
பார்ப்பேன் தன்னிலை மாறாதிருக்கும்
குளத்தில் குதித்து
அடியொழுக்கு வழியாக
உள்நீச்சல் அடிக்கும்போது
ஒரு மீனைபோல் நீந்தி வரும்
நாயாகி குழயக்குழயச்
சுற்றி வரும் வெயிலை
இருண்ட அறையில்
பூட்டிவைப்பேன்
நடு இரவில் ஒரு மெல்லியப் போர்வையாக மூடியிருக்கும்
என்னுடலை
தூரத்தில் பார்ப்பவர்களுக்கு நான்
ஒரு மின்னுட்டாம் பூச்சியாகத் தெரிவேன்


AJAYAN BALA BASKARAN

A POEM BY

AJAYAN BALA BASKARAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

EX-BELOVED’S HUBBY


Yesterday I was waiting in Pondy Bazaar
to see the husband of my ex-lover
I know not how he looks like
Would go this way at this time
In a bike – that’s all the clue
In which shade he would be wearing his shirt
crop or helmet
Does he wear spectacles, wristwatch
Scooty or ducati
I know nothing at all
But, ex-beloved’s husband would come this way only
If he comes to know of my standing here
what would he think
- I can only blink.
This is how I have seen my ex-beloved’s mother
or sister brother
father, even grandparents
and lived on.
On those occasions
my heart would experience joy in abundance
of having played the hero
inside the lines of a novel or short story.
Friends, you at least might write a tale
captioned
At Pondy bazaar searching for ex-beloved’s ‘better-half ‘
When you do write
Just add a line without fail
About that long rainy day
When the two strolled along
under the same umbrella
all the way

பழைய காதலியின் கணவன்
நேற்று பாண்டி பஜாரில் காத்திருந்தேன்
பழைய காதலியின் கணவனை பார்க்க
அவன் கறுப்பா சிவப்பா
எதுவும் தெரியாது
இந்த பக்கமாக் இத்தனை மணிக்கு
அவன் பைக்கில் போவான்
அவ்வளவுதான் குறிப்பு
அவன் எந்த நிறத்தில் சட்டையணிந்திருப்பன்
கிராப்பா ஹெல்மட்டா
கண்ணாடி,கைகடிகாரம் உண்டா
ஸ்கூட்டியா டுகாட்டியா
எதுவுமே தெரியாது
ஆனால் பழைய காதலியின்
கணவன் இந்தவழியாகத்தான் வருவான்
அப்படி வருபவனுக்கு
இப்படி நான் நிற்பது தெரிந்தால்;
என்ன நினைப்பான்
அதுவும் தெரியாது
பழைய காதலியின் அம்மாவை
அல்லது சகோதரியை சகோதரனை
அப்பாவை தாத்தாவை பாட்டியைக்கூட
இப்படித்தான் பார்த்து வாந்திருக்கிறேன்
அச்சமயங்கலில் ஒரு நாவல்
அல்லது சிறுகதையின் ‘
வரிகளூக்குள் நாயகனாக நடித்த
மகிழ்ச்சி பொங்கும்
நண்பர்களே நீங்களாவது
பாண்டிபஜாரில் பழைய காதலியின் கணவனைத் தேடி
எனும் தலைப்பில் ஒருகதை எழுதலாம்
அப்படி எழுதும் போது
ஒரே வரி மட்டும் சேர்த்து எழுதிவிடுங்கள்
ஒரு மாலையில் ஒரே குடையில்
இருவரும் நடந்து சென்ற அந்த
நீண்ட மழை நாளை
...
அஜயன்பாலா . பாஸ்
-- ஒரு beta male கவிதை

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024