INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, March 5, 2022

KANIMOZHI.G

 A POEM BY

KANIMOZHI.G

Translated into English by Latha Ramakrishnan(First Draft)
FOUR MOONS

Night ripe as Jamun fruit ‘Naaval Pazham’ …
Two days old crescent moon
devoured by night
Midsea with waves subsided
Our small vessel anchored
swaying milky cradle for us
Wind blowing beyond direction
light-holes above
not being eye-sore
When a pair of eyes arched
towards those wide-opened
species came on their own
into the net
Waves swirling with the species
gained speed
Enraged severing the moor
watery screens everywhere
The vessel securing holes slowly sinks in waves
The fishes squirming for water
gulping salty water begin to swim
Water-soaked when all our senses smiled
our radiant eyes that night
were Four Moons alright.

நான்கு நிலவுகள்
நாவல் பழமென பழுத்திருந்த இரவு..
இருள் விழுங்கியிருந்த இருநாள் பிறை
அலை தணிந்த நடுக்கடல்
நங்கூரமிறக்கிய நம் சிறுநாவாய்
நமக்கு அசையும் பால்வாசத்தூளி
திசை கடந்து வீசும் காற்று
மேலெங்கும் விழியுறுத்தா ஒளித்துளைகள்
மலர்த்திய விழிகளை நோக்கி
விழிகளிரண்டு கவிழ்ந்தபோது
வலைக்குள் எளிதாய் வந்தன உயிரிகள்
உயிரிகளோடு புரண்ட அலைகள் வேகமடைந்தன
சீற்றமாகி நங்கூரம் துணித்து நாற்புறமும் நீர்த்திரைகள்
கலம் துளைகொண்டு மெல்ல அலையில் அமிழ்கிறது
நீருக்குத் துடித்த மீன்கள்
உப்புநீர் குடித்து நீந்தத் துவங்கின
நீருறி புலன்களெல்லாம் புன்னகைத்தபோது
சுடர்ந்த நம் விழிகள் அன்றிரவு நான்கு நிலவுகள்.
Kani Mozhi G

KOSINRA

 A POEM BY

KOSINRA

Translated into English by Latha Ramakrish nan(*First Draft)



WOMEN TALKING TO TREES
Three women
Standing under a tree
Were pointing at the tree and talking
Of them one woman stretches her finger
And saying something laughs
I watch them from a little distance away.
I could see nothing.
Leaves were swaying
No sign of nests
There was no bird sitting
Their chitchatting went on unabated
Does the tree conceal a secret
Does it appear differently to
men and women
does it appear differently to adolescents
and married ones
are they watching the tree
or the tree relishing the sight of them?
While conversing
Why does one woman blush?

மரங்களிடம் பேசும் பெண்கள்
மூன்று பெண்கள்
மரத்தினடியில் நின்றுக்கொண்டு
மரத்தைக்காட்டி பேசுகிறார்கள்
அதிலொரு பெண் விரல் நீட்டி
ஏதோ சொல்லி சிரிக்கின்றாள்
சற்று தூரத்திலிருந்து பார்க்கின்றேன்
எதுவும் தென்படவில்லை
இலைகள் அசைந்துக்கொண்டிருந்தது
கூடுகள் இருந்தது போலவும் தெரிய வில்லை
பறவை எதுவும் அமர்ந்திருக்கவில்லை
பேச்சு குறைந்திடவில்லை
மரம் ரகசியத்தை மறைக்கின்றதா
பெண்களுக்கு ஒரு மாதிரியும்
ஆண்களுக்கொரு மாதிரியும் தெரிகிறதா
விடலைப் பையன்களுக்கு ஒரு மாதிரியும்
மணமானவர்களுக்கு ஒரு மாதிரியும் தெரிகிறதா
மரத்தை அவர்கள் பார்க்கிறார்களா
மரம் அவர்களைப்பார்த்து ரசிக்கின்றதா
மரத்திற்கும் பெண்களுக்குமான
உரையாடலில்
ஒரு பெண் ஏன் வெட்கப்படுகிறாள்

IYYAPPA MADHAVAN

 A POEM BY 

IYYAPPA MADHAVAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
Be a slave to some Tom Dick and Harry.
Fold your hands and cover your mouth
reverentially
Take off your torn hat
and greet.
Kneel down; submit
Your family wouldn’t perish;
You wouldn’t die unnecessarily.
While walking along the streets
have your head lowered
Dangers won’t devour you.
Your views not in tune
Ho, have them buried deep down.
Don’t you support those
who are armed
fighting for liberty
The enemies would butcher your off-springs.
and you would have to leave your land
and become a refugee somewhere else.
Illicit canoe might come to save thee
But you would lose your homeland in the melee
Always have your larynx safely locked
Can’t say wherefrom missiles would come
Peace-talks would never save you or your country.
With a clear mind be slave-like
Dare not to wear your cap
in front of your foes
My friend, they have loads and loads of
armaments, you know….


Iyyappa Madhavan


யாருக்கேனும் அடிமையாக இரு
கை கட்டு வாய் பொத்து
உன் கிழிந்த தொப்பியை கையிலெடுத்து முகமன் கூறு
அடி பணிந்து போ
குடும்பம் பிழைத்துக்கொள்ளும்
நீ தேவையில்லாமல் சாகமாட்டாய்
தெருக்களில் நடக்கையில் தலை குனிந்தே நட
உன்னை அபாயங்கள் சூழாது
உன் எதிர் கருத்துகளை உனக்குள் வைத்து புதைத்துவிடு
ஆயுதம் ஏந்தி விடுதலைக்காய்
போராடுபவர்களை ஆதரிக்காதே
உன் குழந்தைகளைக் கொன்றுவிடுவார்கள்
நீ நாடு விட்டு நாடு ஓடி அகதியாக நேரிடும்
கள்ளத்தோணிகள் உன் உயிரைக் காப்பாற்றிவிடும்
ஆயினும் உன் சொந்த நாட்டை இழந்துவிடுவாய்
எப்போதும் உன் குரல்வளையைப் பூட்டி வை
ஏவுகணைகள் எப்போது எத்திசையிலிருந்து வருமென்று தெரியாது
சாமதானங்கள் ஒரு போதும் உன்னையோ உன் நாட்டையோ
காப்பாற்றாது
தெளிவாக இரு ஒரு அடிமையைப் போல
உன் தொப்பியை உன் எதிராளிகளின் முன் அணிந்து சென்றுவிடாதே
அவர்களிடம் ஆயுதங்கள் குவிந்து கிடக்கின்றன நண்பனே... 

DHASARADAN

 TWO POEMS BY

DHASARADAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

(1)

Not an inch of land for me, said they.
I don’t care.
For the six feet due for me
let anybody be buried for all I care.
Let the Thumbai plant
that would be implanted on me
and the morsels of food
that would be strewn around me
be saved.
Save at least this
for the next generation.
Let me be the bandicoot
lying with the tummy bloated and burst
I want not an inch of land.
Dhasaradan
எனக்கு ஒரு அங்குலம் நிலமில்லை என்றார்கள்
எனக்கு கவலை இல்லை.
எனக்கு கிடைக்கவேண்டிய ஆறடியில்
எவரையாவது புதைத்து போகட்டும்
என் மீது நடப்படும் தும்பை செடியையும்
என்னைச் சுற்றி வீசப்படும்
சோற்றுப் பருக்கைகளும் மிச்சமாகட்டும்
அடுத்த தலைமுறைக்கு இதையாவது
சேர்த்து வையுங்கள்
வயிறு பெருத்து வெடித்து கிடக்கும்
பெருச்சாளியாய் இருந்து போகிறேன்
எனக்கு ஒரு அங்குலம் நிலம் வேண்டாம்

(2)


Those who are dead
come in dreams
They ask for their favourite dish to relish
Read the half-read book
Count the money concealed
in old clothes kept in rows
Listen to songs they like
Invite us to dance with them
Kiss with all the affection in the world
Saying that they would come again
tomorrow
Waving they vanish without a trace.

மரணமடைந்தைவர்கள் கனவில் வருகிறார்கள்
பிடித்த உணவை உண்ண கேட்கிறார்கள்
பாதி வாசித்த புத்தகத்தை படிக்கிறார்கள்
அடுக்கி வைக்கப்பட்ட பழைய துணிகளில்
ஒளித்து வைக்கப்பட்ட பணத்தை எண்ணுகிறார்கள்
பிடித்த பாடலை கேட்கிறார்கள்
நடனமாடுகிறார்கள்
நடனமாட அழைக்கிறார்கள்
வாஞ்சையாக முத்தமிடுகிறார்கள்
மீண்டும் நாளை வருவதாக
கையசைத்து மறைந்தும் விடுகிறார்கள்.








DEEN GAFOOR

 A POEM BY

DEEN GAFOOR

Translated into English by Latha Ramakrishnan
(*First Draft)

CAT AT HOME

A book which I was reading way back
at the very beginning
with the hand moving away
slipped and fell down
at the corner of chair.
That book was a collection of species
other than humans.
Dealing with the lives of animals
The wind began unfolding with its hands
the pages of the book fallen down
Before I could bend and lift
the book
some of the animals in it
jumped outside and
began leaping.
Wonder why
but they left the cat behind.

வீட்டில் பூனை
•••
ஆதியில் நான்
வாசித்துக் கொண்டிருந்த புத்தகமொன்று
கை விலகி கதிரையின் ஓரமாய்
கீழே வீழ்ந்தது.
அப்புத்தகம் மனிதமற்றமைகளின் தொகுப்பு.
மிருகங்களின் வாழ்க்கைமுறை பற்றியது.
கீழே வீழ்ந்த புத்தகத்தின் பக்கங்களை
காற்று தன் கரங்களால்
விரிக்கத் தொடங்கியது.
நான் குனிந்து புத்தகத்தைத் தூக்குவதற்கிடையில்
அதிலுள்ள மிருகங்கள் சில
வெளியில் பாய்ந்து
தாவத் தொடங்கின.
பூனையை ஏனோ விட்டுச் சென்றன.
••••
டீன் கபூர்

PRIYA BASKARAN

 A POEM BY

PRIYA BASKARAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


FATHER’S CYCLE
Fifty-five years of classic camaraderie
between Father and his bicycle.
The very first vehicle bought out of his salary.
Every Saturday it would also have oil-bath.
Being alone
both of them would be chitchatting
Father’s secrets _ It knows them all!
When we taking it for learning cycling
fell down
Father caressed it
was all concerned about it
It is this cycle that he continues to ride on
even after losing one leg
in an accident
Just the way father has borne us
the cycle carries him untiringly
with zest and fervour
always.

அப்பாவின் சைக்கிள்
அப்பாவின் சைக்கிளுக்கும்
அவருக்கும் ஐம்பத்தைந்து
வருடத் தோழமை.
அவரது சம்பாத்தியத்தில்
முதல் வாகனம்.
சனிக்கிழமை தோறும் அதற்கும்
எண்ணெய்க் குளியல்.
இருவரும் தனிமையில்
உரையாடிக் கொள்வார்கள்.
அதற்குத் தெரியாத
அப்பாவின் இரகசியங்கள்
என்று ஒன்றும் இல்லை.
நாங்கள் கற்றுக் கொள்ள எடுத்துத்
தவறிக் கீழேவிழுந்தபோதும்
வாஞ்சையுடன் அதனைத்தான்
தடவிக் கொடுத்தார்.
விபத்தொன்றில் காலிழந்து
செயற்கைக் கால் பொருத்தப்பட்ட
பின்னரும்
அவர் ஓட்டும் ஒரே வாகனம்
அந்த சைக்கிள் தான்.
அப்பா எங்களைச் சுமந்தது போலவே
சலிப்பேதுமின்றி
அப்பாவை சுமக்கிறது சைக்கிள்.

பிரியா பாஸ்கரன்

INSIGHT MARCH 2021

INSIGHT - OCT - NOV, 2025 - PARTICIPATING POETS