INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, October 7, 2023

K.MOHANARANGAN

 A POEM BY

K.MOHANARANGAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


DELIVERANCE
Giving her away to its ferocity
that grew all the more
whenever eyed intently
Erasing the intervening iron-bars
she freed the tiger of the painting.
Stretching and lifting its legs gone limp
shaking its fatigued body and rising
that which regained its original self
with a roar
turning and halting
gazing intently at her who stood there
frightened to draw closer
then
arrived at its jungle.
The same forest
where it had trodden all over
Yet
now everything seemed new.
Afflicted with the misfortune of
seeing those same fear-struck pair of eyes
again and again
in any and all prey
that it leapt and chased
Forgetting how to hunt
famished
it strays
crazy to the core.


விடுதலை
______________
உற்றுக் காணும்தோறும்
உருவேறி நிற்குமதன்
உக்கிரத்திற்குத் தன்னை
ஒப்புக்கொடுத்தவளாக ,
குறுக்கே நின்ற
கூண்டுக்கம்பிகளை
அழித்து ,
அந்த சித்திரத்துப்புலியை
அவள் விடுவித்தாள் .
துவண்டிருந்த கால்களை
தூக்கி வைத்து
சோர்ந்த உடலை
உதறிச் சிலிர்த்து
ஒரு உறுமலோடு
தனது சுயத்திற்கு மீண்ட
அது ,
அருகில் வர
அஞ்சி நிற்குமவளை
திரும்பி நின்று
தீர்க்கமாக ஒருமுறை நோக்கியபின்
தனது வனத்திற்கு ஏகியது .
அடியளந்த
அதே காடுதான்
ஆயினும் ,
இம் முறை
எல்லாமும் புதிதாக இருந்தது .
ஒடித் துரத்திய இரை
ஒவ்வொன்றிலும்
மருண்ட அவ்விரு கண்களையே
மறுபடியும் மறுபடியும்
காண நேரிட்ட
துரதிர்ஷ்டத்தால்
வேட்டைமறந்து
பசிமுற்றி அது
பைத்தியமாய் திரிகிறது.

க. மோகனரங்கன்

KUMAR AMBAYERAM

 A POEM BY 

KUMAR AMBAYERAM


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

1. YOU THEREIN .....

I have a piece of land

I am not using it now.

I am not sowing in it nor harvesting

It is a virgin land

Seeds on their own

Have sprouted there.

It’s size just 3/6

Don’t take it to be small

Just as ‘Appam’ and ‘Fish’

It would flourish infinitely

You can feed others

all through their lives

As for me

suffice to have my tomb’s doors not 

knocked at

for three days

till the time of my resurrection.











NAAVUK ARASAN

 A POEM BY

NAAVUK ARASAN




Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
...........................................................................................



Between that story which hesitating to tell the truth
went around beating the bush
and the poem that brazenly wrote
a Lie
Conscience remained stuck.
The poem that had softened the language in
feelings and emotions
and written on the walls of heart
proved incomprehensible to one and all.
In that
when Life too was recorded in the lines
True that the words appeared to be living in right earnest.
Fiction alone in which words
wherein the last letters contradict each other
and thus Doubt gets smeared all over
is quite interesting
- said they in unison.

உண்மையைச்
சொல்லத் தயங்கி
மழுப்பி எழுதிய கதைக்கும்
பொய்யை
வெளிப்படையாய்த்
துணிந்து எழுதிய கவிதைக்கும்
நடுவினிலே
மனசாட்சி சிக்கியிருந்தது
மொழியை
உணர்ச்சியில் மென்மையாக்கி
இதயத்தின் சுவர்களில்
எழுதப்பட்ட கவிதை
யாருக்கும் புரியவேயில்லை
அதில்
வசனங்களில்
வாழ்க்கையையும்
சேர்த்தே பதிந்த போது
வார்த்தைகள்
நேர்மையாக வாழ்வது போலத்
தெரிந்ததும் உண்மை.
கடைசி எழுத்துக்கள்
ஒன்றோறொன்று
முரண்பட்ட வார்த்தைகளில்
சந்தேகம் அப்பிக்கொள்கின்ற
புனை கதைதான்
சுவாரசியமென்று
எல்லோருமே சொன்னார்கள்.........

MULLAI AMUTHAN

 A POEM BY

MULLAI AMUTHAN

Translated into Tamil by Latha Ramakrishnan(*First Draft)


While narrating a story the listener should sound
‘Umm’…. ‘Umm’…
Otherwise he wouldn’t be interested
Even for harmless mischief
His walking stick would land on my back…
Elder sister would alleviate my pain
with fomentation.
Mother would cry inwardly.
Father was forever strict to the core
Elder sister got married
Father could no more
tell tales to her
Grandson came to be.
He too would listen sounding smartly ‘Umm’. Umm’ at regular intervals
Father felt happy within
One day there came no ‘Umm’, ‘Umm’, from the grandson
The cane spared him not.
Elder sister left enraged.
Mother cried profusely.
Father could get none
for his story-telling sessions.
Conversing with the wall, trees,
flowers
Father breathed his last.
Elder sister came.
The grandson held the ghee-lamp
Everything was over.
While leaving, without fail,
elder sister took Father’s cane with her
Henceforth
Father’s walking stick
might tell a thousand tales.

கதை சொல்லும்போது உம் உம் கொட்ட வேண்டும்.
சுவாரஸ்யம் அவருக்கு இருக்காது.
சிறு குறும்புகளெனினும் கைத்தடி
என் முதுகைப் பதம் பார்க்கும்
அக்கா வலிக்கு ஒத்தடம் கொடுப்பாள்.
அம்மா உள்ளுக்குள் அழுவாள்.
அப்பா தன் கண்டிப்பை விடுவதாயில்லை.
அக்காவுக்குத் திருமணம் ஆயிற்று.
கதை சொல்ல முடியவில்லை.
பேரன் கிடைத்தான்.
அவனும் சாதுர்யமாக உம் கொட்டிக் கொண்டே தூங்குவான்.
அப்பாவுக்கும் உள்ளூர மகிழவே...
ஒருநாள் பேரனிடமிருந்து உம் வரவில்லை.
அவனின் முதுகைப் பதம் பார்த்துவிட்டது கைத்தடி.
அக்கா கோபத்தில் வெளியேறிவிடடாள்.
அம்மா உள்ளுக்குள் அழுது தீர்த்தாள்.
கதைச்செல்ல அப்பாவுக்கு ஆள் கிடைக்கவில்லை.
சுவருடன்,மரங்களுடன்,
பூக்களுடன்
பேசி இறந்துபோனார்.
அக்கா வந்தாள்.
பேரனும் நெய் விளக்கு பிடித்தான்.
எல்லாம் ஆயிற்று.
அக்கா போகும் போது கைத்தடியை
மறக்காமல் எடுத்து சென்றாள்.
இனி
அப்பாவின் கைத்தடி
ஆயிரம் கதைகள் சொல்லக்கூடும்.
முல்லைஅமுதன்
21 /08 2023



All reactions:

JAYADEVAN

 A POEM BY

JAYADEVAN



Translated into English by Latha Ramakrishnan (*First Draft)

Eveni if you run after a bird
can you see its trail?
Even if you come at daybreak to
hear the sound of flower falling
that would have woken up long before you
and changed its attire.
In the water wherein the moon dripped
there wouldn’t emanate the fragrance of the moon
as you imagine.
Even if you see the five-coloured parrot ‘panchavarnakkili’
that you saw in the early evening
in twilight hour
its five colours will remain the same.
Where would You who goes to view mountain
see the mountain
You in the mountain or the mountain in you.
Even if you walk along the seashore
with waves touching your feet
in its foam that scatters as leaves
O which sea you would catch and how.
Stand as a plant in the plain
Stand as a fig tree in an expanse of sand
Relish the rain…. Savour the Sun
Camel would come
Get on it carrying a bundle of heat
Let the rain pour for a river to form next.

கவிஞர் ஜெயதேவன்
ஒரு பறவையின் பின் நீ பறந்தோடினாலும்
அதன் தடம் பார்க்கவா முடியும்.?
மலர் விழும் ஒலி கேட்க விடிகாலை வந்தாலும உனை முந்தி எழுந்து
உடை மாற்றி இருக்கும்.
நிலா சொட்டிய நீரில் நீ நினைப்பது போலே
நிலா மணம் வீசாதே.
முன் மாலை பார்த்த பஞ்சவர்ணக் கிளியை
பின் மாலை பார்த்தாலும்
ஐஞ்சு வண்ணம் மாறாது
மலை பார்க்கப் போகும் நீ மலை எங்கு
பார்ப்பாய்
மலைக்குள் நீ..அன்றி உனக்குள் மலை.
அலையில் கால் பாவ கரையோரம் நடந்தாலும்
இலை உதிர்வது போல் உதிரும்
நுரையில் எக் கடலை எப்படிப் பிடிப்பாய்?
சமவெளியில் நில் ஒரு செடியாய்.
மணல்வெளியில் நில் ஓர் ஈச்சமரமாய்
மழை ரசி...வெயில் ருசி
ஒட்டகம் வரும்
அதில் கொண்டு போ ஒரு பொதி வெயிலை.
மழை பெய்யட்டும் அடுத்து ஒரு நதி உருவாக..

A.K.MUJARATH

 A POEM BY

A.K.MUJARATH

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
WHENEVER YOU READ I WILL BE A LITTLE BOY INSIDE THIS POEM
I was deep in thought
contemplating on stopping this unstoppable Time
somehow
and safeguard my youth.
So I leave my youth also
and become a bird born yesterday.
My Time of yesterday
I remember not.
You too forget it.
Now I am a baby-bird sans worries.
I have wings.
I swing and sway them and feel joyous.
In the past
There would’ve been
business family children
and a lot more responsibilities
now I don’t remember anything
the Time has come to fly
I can reach the sky
Alight on the tree I want and have the fruits I wish to relish
Thus when my minutes were proving miraculous
They had to meet a night time
So
I can’t return without entering into dream.
I go inside.
The Time guiding me to old age
Midway I jumped off.
Before Time could catch me
Turning into a little boy
Let me finish this poem.
Whenever you read
I will be a little boy there.

நீங்கள் வாசிக்கும் போதெல்லாம் இக்கவிதைக்குள்
சிறுவனாக இருப்பேன்
*
தடுத்து நிறுத்த முடியாத காலத்தை
எப்படியேனும நிறுத்தி
எனது இளமையை பாதுகாக்க வேண்டுமென
யோசித்துக் கொண்டிருந்தேன்
அதனால் எனது இளமை பருவத்தை விட்டும் விலகி
நேற்றுப் பிறந்த ஒரு பறவையாகிறேன்
நேற்றைய எனது காலம்
மறந்துவிட்டது
நீங்களும் மறந்து விடுங்கள்
இப்போது நான்
எந்த கவலையுமற்ற ஒரு குஞ்சுப் பறவை
எனக்கு ரெக்கைகள் இருக்கிறது
அசைத்து அசைத்து மகிழ்கிறேன்
கடந்த காலத்தில்
தொழில் குடும்பம் பிள்ளைகளென
இன்னும் பல பொறுப்புகள்
இருந்திருக்கக் கூடும்
இப்போதைக்கு எதுவும் ஞாபகத்திற்கில்லை
பறக்கும் காலம் வந்திருக்கிறது
என்னால் ஆகாயத்திற்கு செல்ல முடியும்
நினைத்த மரங்களில் கனிகளை
உண்ண முடியும்
இப்படியாக எனது நிமிடங்கள்
அசத்தலாகும் போது
ஒரு இரவுப் பொழுது சந்திக்க நேர்ந்து விட்டது
அதனால்
கனவுக்குள் நுழையாமல் திரும்ப முடியாது
நுழைந்து பார்க்கிறேன்
காலம் மீண்டும் என்னை
முதுமைக்கு அழைத்துச் செல்ல
இடையில் நான் குதித்து விட்டேன்
காலம் என்னை மீள பிடிப்பதற்கு முன்
சிறுவனாக மாறி
கவிதையை முடித்துவிடுகிறேன்
நீங்கள் வாசிக்கும் போதெல்லாம்
நான் சிறுவனாகவே இருப்பேன்.
ஏ.கே.முஜாரத்

INSIGHT MARCH 2021

INSIGHT - OCT - NOV, 2025 - PARTICIPATING POETS