INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, December 1, 2025

PRABHU K SANKAR

 INSIGHT - OCT-NOV, 2025

A POEM BY 

PRABHU K SANKAR

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

CINEMA HALL

Silver Screen, My Darling
who showered me with love
immense
when I was passing through
the age where everything proved
mysterious
With the electric lights going off
when the screen turns bright
the first ever wonder of the world
appeared in the retinas.
‘Thenpaandi Seemaiyilae
Thaerodum Veedhiyilea’
The stone-inscription of frames
till date etched in hearts and eyes.
The ‘Mrithyanju Manthra’
extending the life span of
many a quality actor
even after their departure.
A visual mentor
teaching us to cry for the love
and to sob profusely for the death
of someone unknown
and so be humane
The tales of intermissions
with the crackling sound of Popcorn
and the scent of Samosa - and so on
not only the eyes
but the stomach as well
getting filled up
Lord Ammaiyappan
who with the affluent Murugas
going around so easily
showing the world for the poor Vinayakas
right at the spot where they sat
if the one sitting next laughs
we too would laugh aloud
if he claps
we would join him
For two-and-a half hours
No one is a stranger here
Though in OTT we can move back and front
to any scene
The big screen
which can’t be paused
stands unsurpassed.
Though many theatres have
ceased to be
there remains entrenched
in our memory cells
the dream factory...
Prabu K Sankar

சினிமா தியேட்டர்
---------------------
இனம் புரியாத வயதில்
அளவற்ற நேசங்களை
அள்ளி வழங்கிய
வெண்திரை காதலி....
மின்விளக்குகள் அணைந்து
திரைஒளி படர்கையில்
விழித்திரைகளில் தோன்றிய
முதல் உலக அதிசயம்....
"தென்பாண்டி சீமையிலே
தேரோடும் வீதியிலே"
இன்றுவரை மனதிலும்
விழியிலும் பதிந்திருக்கும்
ப்ரேம்களின் கல்வெட்டு....
மண்ணை விட்டு மறைந்த
பல உயர்திணை நடிகர்களுக்கு
ஆயுளை நீட்டிக்கும்
மிருத்யுஞ்சய மந்திரம்....
யாரோ இருவரின்
காதலுக்காக கண்ணீர் விட்டது
இறப்புக்காக கதறி அழுததென
மனிதம் கற்றுத்தந்த
காட்சிவழி ஆசான்....
பாப்கார்ன் வெடிக்கும் சத்தங்கள்
சமோசா வாசமென
விழியோடு வயிற்றையும் நிரப்பிய
இடைவேளை கதைகள்....
பணக்கார முருகன்கள்
எளிதாக சுற்றிவர
ஏழை விநாயகன்களுக்கு
அமர்ந்த இடத்தில்
உலகை காண்பித்த அம்மையப்பன்....
அருகிலிருப்பவர் சிரித்தால்
உரக்கச்சிரிப்போம்
கரகோஷம் எழுப்பினால்
சேர்ந்து எழுப்புவோம்
இரண்டரை மணி நேரத்திற்கு
இங்கு யாரும் அந்நியர்களில்லை....
OTTல் முன்பின் என
எந்த காட்சிக்கு செல்ல முடிந்தாலும்
நிறுத்த முடியாத
அகன்ற திரைக்காட்சிகளுக்கு
ஈடு இணையில்லை.....
பல அரங்குகள்
அழிந்துப்போனாலும்
நினைவுச்செல்களில்
ஆழமாய் வேரூன்றி இருக்கும்
கனவுத் தொழிற்சாலை....
பிரபுசங்கர்_க

AAKAASA MOORTHY

 INSIGHT - OCT - NOV, 2025

A POEM BY

AAKAASA MOORTHY



Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

told tales
I know that tortoise for the past hundred years
When its black hands rolled
Its white belly could be seen
Stretching its head out of its shell
It was conversing with the children of the shore
about the splendid life of its Sea.
When those few strands of hair quivering ecstatically
on its mid-head
Bowed down paying their homage crying “Yes! Yes!”
It posed as a Zen master.
Its tail densely sandy was touching the waves
Even when called out “come, come...”
turning and placing its index finger on its lips
saying ‘Shhhhh’ it went on speaking
Finally
waving goodbye with its fanny hand
‘ there are still heaps of shells inside
so saying with a pair of eyes -
the wonder of the world, so nice
it returned to the sea

ஆகாச மூர்த்தி
ஆயிரம் வயதுடைய ஆமை
கதைகள் சொல்லியது
நான் அந்த ஆமையைக் கடந்த நூறு வருடங்களாக அறிவேன்
அதன் கருத்த கரங்கள் புரளும்போது
வெண் நிறமுடைய வயிற்றைப்
பார்க்க முடிந்தது
கரைக் குழந்தைகளிடம்
தனது கடலின் அற்புத வாழ்வியலை ஓட்டுக்குள்ளிருந்து தலைநீட்டிப்
பேசிக்கொண்டிருந்தது
அதன் உச்சந்தலையில் சிலிர்த்துக் கொண்டிருக்கும் நான்கைந்து மயிர்களும்
அது பேசிய கதைகளுக்குத் தலைவணங்கி ஆமாம் சாமி போட்டபோது
ஒரு ஜென் துறவியென தோற்றங் காட்டியது
அதன் மணல் அடர்ந்த வால் அலைகளைத் தொட்டுக் கொண்டிருந்தது
வா வா என்று அழைத்தபோதும் திரும்பி வாயில் ஆட்காட்டி விரல் வைத்து அலைகளிடம் உஸ்..... சொல்லிவிட்டு
பேசிக் கொண்டேயிருந்தது

நிறைவாகத் தன் விசிறிக் கரத்தால் டாட்டா காட்டியவாறு இன்னும் கதைக் கிளிஞ்சல்கள் உள்ளே கொட்டிக் கிடக்கின்றன எனவே
உலகின் வியப்பான இரு விழிகளால் இயம்பிவிட்டு
கடலுக்குத் திரும்பியது

ABDUL JAMEEL

INSIGHT - OCT- NOV, 2025

 TWO POEMS BY

ABDUL JAMEEL


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

(1)

Whenever they happen to cross
the thatched dwellings of
poor little boys and girls
who
despite having the potentials for drawing
not having the means to buy colours
the benevolent Butterflies
would well remember
to shed some of the radiant
hues and shades
spread on their wings
so dazzling.

ஓவியம் வரைவதற்கான
ஆற்றல்கள் இருந்தும்
நிறம் வாங்க வசதியற்ற
ஏழைச் சிறுவர் சிறுமியரின்
குடிசையினை கடக்க
நேரும் போதெல்லாம்
தனது றெக்கைகளில்
கண்களை கவர்ந்தபடி
விரவிக் கிடக்கும்
பகட்டு வர்ணங்களில் சிலதை
உதிர்த்தி விட்டுச் செல்ல
ஒரு போதும் மறப்பதில்லை
ஈரமிகு வண்ணத்துப் பூச்சிகள்
ஜமீல்


2. FACE THE FACES


As against what you believe -
that which I have
is not just one face at all
How many faces it comprises
I am unable to surmise
Sketching different faces upon my wall
Time has left them hanging there
As suits the time
Adorning me with appropriate faces
I cope with life
Here there can be almost none
having face just one
Just as the leaves having two faces
a coin having two faces
Each of us
have faces many
Just as adorning himself i
with dresses many
man wears masks myriad
at those instances when the face I wear
come off
at once wearing another
I manage time
Ere the remaining life is over
Wonder how many more faces
Time would force me to wear

ஒரு முகமென்பது
ஒரு முகமல்ல

நீங்கள் நம்பித் தொலைவதுபோல்
என் வசம் இருப்பது
ஒரு முகமே அல்ல
அது எத்தனை முகங்களென்றும்
எனக்குத் தெரியவுமில்லை
எனது சுவர் மீது விதம் விதமான
முகங்களை வரைந்து
தொங்கவிட்டிருக்கிறது காலம்
தருணங்களுக்கு ஏற்றவாறு
பொருத்தமான முகங்களை அணிந்து வாழ்வை சமாளிக்கிறேன்
இங்கு வேசமிடா பாத்திரங்களென
அனேகமாக யாருமே
இருக்கச் சாத்தியமில்லை
ஒரு இலைக்கு
இரண்டு முகம் இருப்பதுபோல்
ஒரு நாணயத்திற்கு
இரண்டு முகம் இருப்பதுபோல்
எல்லோர் வசமும்
நிறைய முகங்கள் இருக்கின்றன
புதிது புதிதாக
ஆடைகளை அணிவதுபோல்
விதம் விதமான முக மூடிகளையும்
அணியத் தவறுவதில்லை மனிதன்
நான் அணிந்திருக்கும் முகம்
கழண்டு விழும் கணங்களிடை
உடன் இன்னுமொரு முகத்தை
அணிந்து காலத்தை சமாளிக்கிறேன்
எஞ்சியிருக்கும் ஆயுள்
தீரந்து போவதற்கிடையில்
இன்னும் எத்தனை முகங்களை
அணிந்து கொள்ளச் சொல்லி
நிர்ப்பந்திக்குமோ காலம்
ஜமீல்

ABDUL SATHAR

  INSIGHT OCT-NOV, 2025 

A POEM BY

ABDUL SATHAR


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


Sorrow is but part and parcel of Life
Sometimes it is gravely malignant
at some other times it is graciously benign
No matter what
it is an inseparable part
of a great grand puzzle;
A soulful music
A game that keep us on toes all the while.
Sorrow helps us understand two things
It teachers us Life
and makes us realize
that we are alive.
Then...
It disappears
transforming us
Though sorrow terribly unsettles us
It does offer us
some valid lessons
Sometimes it makes us intelligent
all the more
Sometime it turns us stronger
than before
Eventually
sorrow leaves its indelible mark inside us,
the mortals.
And, each incident befalling us in Life
have traces of that strife;
take place,
invariably encompassing that phase
Losing our hues and shades along that course
turning listless White
and gloomy Black
struggling till the last
or accepting it all with a smile
as river flowing all the while
we reach our destination at last.

துயரம் என்பது
வாழ்க்கையின் ஒரு நியதி.
சில நேரங்களில்
அது பெரிதாகவும்,
மற்ற சில சமயங்களில்
ஒன்றும் இல்லாததாகவும்
அமைகிறது…
எவ்வாறாயினும்,
அது பெரிய புதிரின்
ஒரு பகுதி..
அது ஒரு
ஆழமான இசை..
அது நம்மை ஆட்டுவிக்கும்
ஒரு விளையாட்டு…
துயரம் இரண்டு விடயங்களை
நமக்கு உணர்த்திச்செல்கின்றது..
அது நமக்கு
வாழ்க்கையை
கற்றுக்கொடுக்கின்றது..
நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள்
என்பதை உணர்த்துகிறது..
பின்னர் …
அது மறைந்து
நம்மை மாற்றிவிடுகிறது…
துயரம் நமது மனதை
கலங்க வைத்தாலும்,
நமக்கு சில
படிப்பினைகளை தருகிறது..
அது சில சமயங்களில்
நம்மை மேலும்
புத்திசாலியாக்குகிறது.
சில நேரங்களில்
அது நம்மை
மேலும் வலிமையாக்குகிறது.
இறுதியில்
துயரம் அதன் அடையாளத்தை
நம்முள் விட்டுச் செல்கிறது…
மேலும் …
வாழ்க்கையில்
நமக்கு நிகழும்
ஒவ்வொரு நிகழ்வும்
ஏதோ ஒரு வகையில்
அதை உள்ளடக்கியே
அமைகின்றது..
அதில் நாம்
நம் வண்ணங்களை இழந்து
வெறுமையான
வெண்மையாகவும்
இருண்ட கறுமையெனவும்
நம் உயிர் மூச்சு
பிரியும் வரை..
போராடிக்கொண்டே
அல்லது
புன்முறுவலோடு
ஏற்றுக்கொண்டே
நதியென பயணித்து
நமது இறுதி இலக்கை
சென்றடைகின்றோம்..

-கோவை.அப்துல் சத்தார்

INSIGHT MARCH 2021

INSIGHT - OCT - NOV, 2025 - PARTICIPATING POETS