INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, June 22, 2026

A H M NAWAS

A POEM BY AHM NAWAS
A POEM BY
A H M NAWAS
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
THE LIBRARY OF BONES

Inside the body
There is a library
None has opened it
But it remains opened always.
Its books are not made of paper
They are made of bones.
Each bone bears an era
A Wound
A Laughter
A Name
An amnesia
I look at my hands
They appear as pages
With words increasingly illegible
But with meanings that can be felt.
Nerves are the trails of that library
Blood is but the cam reading that
runs through it.
At times
I feel fatigue in my shoulders
That is not the burden of age
That is the weight of Times
read
The body
doesn’t remember memories
It becomes the very memories
Each experience freezes
as a bone
Each loss
stands as an interim space.
Each instance of waiting
Unfolds as a long page
I hear a voice inside me
But
It is not words
But the sound of pages unread.
On a day I wonder
If my entire body were to be a library
What would happen?
Am I a reader in that?
Or a Book?
Or a History borne without
Reading it ever
During night
The body grows quiet
at that time
the library would be wide awake.
The bones speak softly
But their language remains incomprehensible
It is the sacred scripture
of all the days of my being.
I don’t try to stop it
For
when it urns still
Not just me
but memories too would
come to a standstill.

எலும்புகளின் நூலகம்! -
ஏ.எச்.எம். நவாஷ் (ஈழக்கவி) -
உடலுக்குள்
ஒரு நூலகம் இருக்கிறது.
அதை
யாரும் திறக்கவில்லை.
ஆனால்
அது எப்போதும் திறந்திருக்கிறது.
அதன் புத்தகங்கள்
காகிதத்தால் ஆனவை அல்ல.
எலும்புகளால் ஆனவை.
ஒவ்வொரு எலும்பும்
ஒரு காலத்தைச் சுமக்கிறது.
ஒரு காயம்.
ஒரு சிரிப்பு.
ஒரு பெயர்.
ஒரு மறதி.
நான்
என் கைகளைப் பார்க்கிறேன்.
அவை
பக்கங்களைப் போலத் தோன்றுகின்றன.
படிக்க முடியாத எழுத்துகளுடன்.
ஆனால்
உணரக்கூடிய அர்த்தத்துடன்.
நரம்புகள்
அந்த நூலகத்தின் வழித்தடங்கள்.
இரத்தம்
அதில் ஓடும் அமைதியான வாசிப்பு.
சில நேரங்களில்
நான் என் தோள்களில் சோர்வு உணர்கிறேன்.
அது
வயதின் சுமை அல்ல.
அது
படிக்கப்பட்ட காலங்களின் எடை.
உடல்
நினைவுகளை நினைவில் வைத்திருக்கவில்லை.
அது
நினைவுகளாகவே மாறுகிறது.
ஒவ்வொரு அனுபவமும்
ஒரு எலும்பாக உறைகிறது.
ஒவ்வொரு இழப்பும்
ஒரு இடைவெளியாக நிற்கிறது.
ஒவ்வொரு காத்திருப்பும்
ஒரு நீண்ட பக்கமாக விரிகிறது.
நான்
என்னுள் குரல் கேட்கிறேன்.
ஆனால்
அது வார்த்தைகள் அல்ல.
அது
படிக்கப்படாத பக்கங்களின் சத்தம்.
நான்
ஒரு நாள் நினைக்கிறேன்.
என் உடல் முழுவதும்
ஒரு நூலகமாக இருந்தால்
என்ன நடக்கும்?
அதில்
நான் வாசகனா?
அல்லது
ஒரு புத்தகமா?
அல்லது
படிக்கப்படாமல்
சுமக்கப்படும் ஒரு வரலாறா?
இரவு நேரத்தில்
உடல் அமைதியாகிறது.
அப்போது
நூலகம் விழித்திருக்கும்.
எலும்புகள்
மெல்ல பேசுகின்றன.
ஆனால்
அந்த மொழி
எனக்குப் புரியாது.
அது
நான் வாழ்ந்த
அனைத்து நாள்களின்
மறை மொழி.
நான்
அதை நிறுத்த முயலவில்லை.
ஏனெனில்
அது நிற்கும் போது
நான் மட்டுமல்ல
நினைவுகளும் நிற்கும்.



DANISKARAN KANDASAMY

A POEM BY 

DANISKARAN KANDASAMY

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

A WANDERER AND SOME JUNGLES


I was spreading and reading
the songs of jungles
one by one.
Before I could read the last song
He began drawing the jungle around me.
In his jungle
Some were taking photos
Some others were cooking
Scratching the head with the felled
dry twigs
Two monkeys were pricking
each other.
Seeing an elephant at a distance
I approached it, drawing close.
The artist pulling me by the hand saying
It is a rogue elephant.
Shaking off his hand
I moved still closer
The river where it was drinking water
was running in crimson colour.
Watching its legs
hastily I asked him to draw Dr.Krishnamoorthy.
This is year 2022. Not possible now
He refused.
For the sake of saving the remaining elephants
at any cost
I asked for converting the empty bottles
lying broken in the painting
into stones
stones started accumulaing in heaps
here there everywhere
Now I have made possible the painting
inside your eyes
All of you please exit
I need to think about making possible
the jungle.





ANTON BENI

A POEM BY
ANTON BENI
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
IF I AM TO SET GOING A SUICIDE….





I am all alone in this house
Thought I till yesterday
That it is not so
dawned on me today.
If seen the way I was conversing with Samikannu
in the bazaar
some two days back
The one who is in the front room of this house now
is the same me… the nature too
being the same.
Not just in the terrace at the sixth floor
but from whatever height I am seen
The way I fear Srinivasan and take flight
No need to watch it all separate.
At the compound gate you should never see me
_An Alsatian
wandering with tongue stretched to the ground
biting and tearing off the children’s straying balls
with its molar teeth
Mother’s mercy in going in search of
the cup of tea or coffee or fruit juice
concealed in the kitchen
_ Even Azhagusundaram who is always with me
would have never found in me
In the bedroom
Except the two pillows I require
All other things should think of me being with her.
Or , considering me to be a lunatic
of the well of night
Should leave me.
Henceforth all my worries would be
If I am to commit a suicide
From which I should I initiate

நான் ஒரு தற்கொலை செய்வதென்றால்....
***
இந்த வீட்டிற்குள்
நான் மட்டும் இருக்கிறேன் என்றே
நேற்றுவரை நினைத்திருந்தேன்.
அப்படி இல்லை என்பது இன்றுதான் தெரிந்தது.
இரண்டு நாட்களுக்கு முன் கடைத்தெருவில்
சாமிக்கண்ணுவுடன்
பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்திருந்தால்
வீட்டின் முன் அறையில் இப்போது இருப்பதும்
அதே நான்தான்.. சுபாவம் கூட அதே தான்.
ஆறாவது தளத்தின் மொட்டை மாடியில் என்றில்லை
எந்த உயரங்களில் என்னைப் பார்த்தாலும்
வழக்கமாக சீனிவாசனுக்குப் பயந்து
நான் ஓடுவதை தனியே பார்க்க வேண்டியதில்லை.
சுற்றுச் சுவர் வாசலில் என்னை நீங்கள் பார்க்கவே கூடாது
வழி தவறும் பாலகர்களின் பந்துகளை
கடவாயில் குதறி தரை தட்டும் நாவோடு அலையும்
ஆறடி அல்சேசன்
சமையலறைக்குள் ஒளிந்திருக்கும்
ஒரு கோப்பைத் தேநீர் அல்லது காஃபியை
அல்லது ஒரு குவளை பழச்சாற்றை
தேடிச் செல்லும் அம்மாவின் கருணையை
என்னுடனே திரியும் அழகுசுந்தரம் கூட
என்னில் அறிந்திருக்கமாட்டான்.
படுக்கை அறையில் எனக்குத் தேவையான
இரண்டு தலையணைகள் தவிர்த்து
மீதம் இருக்கும் அத்தனையும் அவளுடன் நான்
இருப்பதாகவே கொள்ள வேண்டும்.
அல்லது பின்னிரவுகளின் மனநோயாளி என்றே
என்னை விலக வேண்டும்.
இனி என் கவலையெல்லாம்
நான் ஒரு தற்கொலை செய்வதென்றால்
முதலில் எந்த என்னிடமிருந்து
தொடங்குவது.
…ஆண்டன் பெனி

ATHMAJIV

THREE POEMS BY
ATHMAJIV
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

(1)

Unable to remain stable and peaceful
I go running
Escaping.
Hearing the soft thud of my heart
That wishes utmost to stamp on the shadow of my sorrow
And make it cease to be
My I lies frozen
Inside the tent filled with agonies
Caught in the legs of sorrow intense
that rages on swinging to and fro
between the words that lie broken
I standing in the midst of words
that lie broken
From my eyes that remain there
as a statue made of stone
the stains of tears flowing down
It is that I call poems
having no option
Facing Time
that has made him extend his Hands
to quench his hunger
Eating his queries
a poor poet standing with bowed head
silent as a reticent woman
stamped on his shadow and smashed it.
The Hunger of Time
that made the hand that was writing
elongate for alms
is more malicious
than that of the stomach. Alas.

நிலைகொள்ள முடியாமல்
தப்பி ஓடிக் கொண்டிருக்கிறேன்.
விரட்டும் என் துயரின் நிழலை
மிதித்துக் கொல்ல துடிக்கும் இதயத்தின்
மெல்லிய சத்தத்தைக் கேட்டு
உறைந்து போய் கிடக்கிறது
நான்.
வேதனைகள் கவிந்திருக்கும் கூடாரத்திற்குள்
இங்கும் அங்கும் வெறிகொண்டு ஆடும்
மாளாத்துயரின் கால்களில் சிக்கி
உடைந்து கிடக்கும் சொற்களின் நடுவில்
கற்சிலையாய் நிற்கும் என் கண்களில் இருந்து
வழியும் கண்ணீரின் கறைகளைத்தான்
வேறுவழியின்றி கவிதை என்கிறேன்.
வயிற்றுப் பசிக்காய் கையேந்த வைத்த
காலத்தின் முன்
கேள்விகளை தின்றவனாய்
பேசாமடந்தையின் மௌனத்துடன்
தலைகுனிந்து நிற்கும் ஏழைக் கவிஞன்
தன் நிழலை மிதித்து கொன்றான்.
எழுதிக் கொண்டிருந்த கையை
ஏந்த வைத்த காலத்தின் பசி
வயிற்றுப் பசியை விட கொடூரமானது.
ஆத்மாஜீவ்

(2)




He pleads for help
'Please don’t ask us anything hereafter'
So his friends move away
politely and tactfully
He writes the deafening roar
with the body emaciating
as
the Silence of Hunger.
Long long ago
His words were translated you know....
The wind anguished carried along
the fire burning inside the quietude of sorrow.
Along with the words kneeling and
crying out
there drips the painting Time fails to sketch.
The woes of the Poor Poet
proving indescribable
sinks inside the Cave of Hunger.
Judgment should be out
before tonight comes to a close.
A full-stop for Being and Ceasing to Be
keeps wandering to and fro.
In the reverberating sounds of his prayers
God’s ears turn deaf to the core.
The silence of friends who have forsaken him
is but the poem of
sorrows and sufferings infinite.
The eyes of the with hands outstretched
suffering Death
The shame of the spirit wandering within the body
is torn to pieces
He turns upward
his outstretched hands
In between his hands
that shiver in hunger
Praying beseeching there remains
bowing its head
faraway from the unknown world
a poem of his
unwritten.

உதவி கேட்டு கெஞ்சுகிறான் அவன்.
இனிமேல் எதுவும் கேட்காதே என்னிடம் என்று
நாசுக்காக விலகிக் கொள்கிறார்கள்
நண்பர்கள்.
உடல் நலிந்து காதடைக்கும் இரைச்சலை
பசியின் மௌனம் என்று எழுதுகிறான்.
ஒரு காலத்தில் அவனுடைய சொற்கள்
மொழிபெயர்க்கப்பட்டன.
துயரின் அமைதிக்குள் எரிகிற நெருப்பை
வேதனையுடன் எடுத்துச் செல்கிறது காற்று.
மண்டியிட்டு கதறும் சொற்களுடன் வழிகிறது
காலத்தால் வரைய முடியாத ஓவியம்.
ஏழைக் கவிஞனின் சொல்லொணாத் துயரின்
கதறல்கள் பசிக் குகைக்குள் புதைகிறது.
இன்றிரவுக்குள் தீர்ப்பு எழுதப்பட வேண்டும்.
இருப்புக்கும் இறப்புக்கும் ஒரு முற்றுப்புள்ளி
அங்கும் இங்கும் அலைந்தபடி இருக்கிறது.
அவனுடைய பிரார்த்தனைகளின் சப்தங்களில்
செவிடாகிப் போகிறது கடவுளின் காதுகள்.
கைவிட்ட நண்பர்களின் மௌனம்
எழுதித் தீரா வேதனைகளின் கவிதை.
கையேந்துபவனின் கண்கள் செத்து
உடலுக்குள் அலையும் ஆவியின் அவமானம்
நார்நாராய் பிய்த்தெறியப் படுகிறது.
ஏந்திய கைகளை மேல்நோக்கி திருப்புகிறான்.
பசியில் நடுங்கும் கரங்களுக்கு இடையில்
கெஞ்சியபடி தலைகுனிந்து கிடக்கிறது
அறியப்படாத உலகத்திற்கு வெகுதொலைவில்
அவனுடைய எழுதப்படாத ஒரு கவிதை.
ஆத்மாஜீவ் (காலக்ரமம் ஆத்மாஜீவ்)

(3)


My Most Esteemed Friends” –
“Please don’t shed tears
for not coming to my aid
at the hour of utmost need’
_Indicating so
with eyes bulging
mouth wide-opened
yet speaking nothing
He who lay there on his back
had in his hand all coiled
Time’s Rope.

"காப்பாற்ற வேண்டிய சமயத்தில்
காப்பாற்றத் தவறினோமே என்று
கண்ணீர் விட்டு கலங்காதீர்கள் என்
நண்பர்களே"
என்ற குறிப்புடன் விழிபிதுங்க
வாய்திறந்திருந்தும் பேசாமல்
மல்லாந்து கிடந்தவனின் கையில்
சுருண்டு கிடந்தது
காலத்தின் கயிறு.
ஆத்மாஜீவ் :

:

S. FAIZA ALI

A POEM BY
S.FAIZA ALI
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
THE ACT OF BALANCING


Reflections breaking in the
swing and sway of brimming water
are but droplets of Love
of this great grand universe
In buffalo’s dark skin
the dance of atoms millions
The soft fire of its breath
determines Time’s direction.
She, the White Crane
- my optical companion
sitting beside me
balancing in her one leg -
Is it Gravitation alone?
சமனிடல்
நீரின் தளும்பலில்
உடையும் விம்பங்கள்
பிரபஞ்சப் பெருவெளியின் நேசத்துளிகள்
எருமையின் கருந்தோலில்
கோடியணுக்களின் நடனம்..
அதன்
மூச்சுக்காற்றின் மென்கனல்
காலத்தின்
திசையைத் தீர்மானிக்கிறது
அருகமர்ந்த வெண்கொக்கெனும் ஒளியியல் தோழி
ஒற்றைக்காலில் சமன்செய்வது
புவியீர்ப்பை மட்டும்தானா...
எஸ். பாயிஸா அலி

 9

 8

INSIGHT MARCH 2021

MULLAI AMUTHAN

  A POEM BY MULLAI AMUTHAN Rendered in English by Latha Ramakrishnan(*First Draft) We have cast away the nest with venom unleashed. Yet the ...