INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, October 11, 2019

YAVANIKA SRIRAM's POEM

A POEM BY 
YAVANIKA SRIRAM

Rendered in English by Latha Ramakrishnan

 
That Time is not something incomprehensible;
but as concrete that can be felt by our senses and stands erect absolutely vertical
having the characteristic of a (institutionalized dominance) politico-historical
that it is the ultimate achievement of human intelligence evolved as orangutan on earth,
and above that the Theory of Evaluation approving of it
and languish in imbalance in a dead-end lane
with the passage of Time,
and that on the verge of the finish of its annihilation
it has to accept the silly defeat of its power,
That earth is but the  shrunken proof of the  hope of achievement
of  various immeasurable movements, functions and operations of the universe
saying so he observed that we the humans were more elated to learn and know it intellectually.
( He) _An Alien had died.
Not  something inanimate or infrior but the way the earth  sees it,
He belonged to the highest order of animate beings.
So long,  the Sensory –acumen – Fare Thee Well.
On behalf of this Earth in the universe, a bouquet of wild flowers for You.
Heaven or Hell be damned
In some strange  planet,  you would be squatting
 Beside the grandma roasting Vada

காலம் என்பது
உணரவியலா
அரூபம் அல்ல
புலன்களால் தொட்டுணரக்கூடிய செங்குத்து வடிவில் நிமிர்ந்து நிற்கும் கான்கிரீட்டைப் போல (நிறுவன ஆதிக்க) அரசியல் வரலாற்று தன்மையுடையது என்றும் அதுவே பூமியில் குரங்காகப் பரிணாமம் பெற்ற மனித அறிவின் இறுதிச்சாதனை
என்றும் அதற்கு மேல் எவாலுவேஷன் தியரி த்ன்னை ஒப்புக் கொண்டு முட்டுச்சந்தில் ஏற்றத்தாழ்வாய் உழலுகிறது என்றும்
காலத்தில்
அது தன் அழிவின் முடிவான விளிம்பு நிலையில் தன் அதிகார அபத்த தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டும்
என்றும் அளவிடஇயலா பல்வேறு பிரபஞ்ச இயக்கங்களின் சுருங்கிய நிரூபண சாதனை நம்பிக்கைதான் பூமி
என்றவர் அது குறித்து மனிதர்களாகிய நாம் அறிவுப்பூர்வமாய் அறிதல் முறையில் அதிகம் மகிழ்ந்திருந்தோம்
என்றார்
ஒரு ஏலியன் இறந்து போனார்(போனது)
அஃறிணை அல்ல நம் வழக்காறான பூமியின் அர்த்தத்தில் அவர் ஒரு உயர்திணை
செயலின்மையின் உடலறிவே சென்று வா
பிரபஞ்சத்தில் இப் பூமியின் சார்பாக உனக்கு கானக மலர்களால் ஒரு பூங்கொத்து
சொர்க்கமாவது நரகமாவது
வேற்று கிரகத்தில் அல்லது நிலவில் பாட்டி வடை சுடும் இடத்தில் குத்தவைத்து அமர்ந்திருப்பாய்


KADANGANERIYAAN PERUMAL's POEM

A POEM BY 
KADANGANERIYAAN PERUMAL

rendered in English by Latha Ramakrishnan

With lust spread dense as the hue of rainy night
with love as flashes of lightning
showing the way
earth and space
entwined in communion
in the  desolate  wilderness.
The ‘white rat’ fearing torrential downpour
goes on elongating its furrow
unaware of the trace of snake
pursuing.
Not like the swarm of moths
that live and die not more than a day
the flower blossoming
midway.


கார்கால இரவின் நிறமென
காமம் படர்ந்திருக்க
அவ்வப்போது தோன்றிமறையும்
மின்னலாய் காதல் வழிகாட்ட
முயங்கிக் கிடக்கின்றன
விண்ணும் மண்ணும்
ஆள் அரவமற்ற
தரிசுக் காட்டில் .
பெருமழைக்குப் பயந்த வெள்ளெலி தன் வளையை
நீட்டித்துக் கொண்டேயிருக்கிறது
பின்வரும் சர்ப்பத்தின் தடமறியாமல் .
ஓரிரவு வாழ்ந்து மடியும்
புற்றீசல்களைப் போலில்லை
மத்திமத்தில்
மலரும் பூ





















PALAIVANA LANTHAR

A POEM BY 
PALAIVANA LANTHAR
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

Inside a globalized condom
with sanctity eroding
sleeps
another Buddha.

Inserting a thin sharp rod into the
garbage
piercing and probing,
collects
another Buddha.

Purchasing the whole lot of plastic wastes
and destroying them thoroughly
manufactures a new gadget
constructs another gadget
yet another Buddha

When the women applies another Buddha
on their lips
the  men inhales as smoke.

 உலகமயமாக்குதல் செய்யப்பட்ட 
ஓர் ஆணுறைக்குள்
புனிதத்தன்மை தேய
உறங்கி கொண்டிருக்கிறான்
இன்னொரு புத்தன்
காலாவதியான அந்த குப்பையை
கூர்மையான கம்பியால்
குத்திக்கொதறி சேகரிக்கிறான்
இன்னொரு புத்தன்
மொத்த நெகிழிக் குப்பைகளை
கொள்முதல் செய்து
அழித்தொழித்து புதிய சாதனம்
செய்கிறான் இன்னொரு புத்தன்
இன்னொரு புத்தனை
பெண்கள் இதழ்களில் பூசிக்கொள்ளும்போது
ஆண்கள் புகையாக இழுக்கின்றனர்..



FIROZEKHAN JAMALDEEN's POEM

A POEM BY 

FIROZEKHAN JAMALDEEN

Rendered in English by Latha Ramakrishnan

PRIMORDIAL MAN

 I am the son of jungle
Mountain-man
Animals and birds
are my clan and feed too
We have never fought among ourselves
for our dwelling place
Truly those places are theirs.
Even before we originated
they were there as woods and mounts.
We have no chieftains.
Nor do they have.
Never was there any political rivalry.
Our race was peopled having hair of red-soil
Hue;
with skin-colour surpassing that of crow.
Nights are our favourites.
We are the primordial tribes
akin to flight between mountain-forests.
We hunt and eat
animals and birds
We had never hunted and killed a human.
For, we are primitives.


ஆதிக்குடியவன் – 12

நான் வனப்புதல்வன்
மலை வாசி.
மிருகங்களும் பறவைகளும்
எனது உறவும் உணவும் கூட
எமது வாழ்விடங்களுக்காக நாங்கள்
ஒரு போதும் சண்டையிட்டுக் கொண்டது இல்லை.
நிசமாக அந்த இடங்கள் அவைகளதுவே
நாங்கள் தோன்றியதற்கு முன்னமே அவர்கள்
வனமாகவும் மலையாகவும்
இருந்தவர்கள்.
எமக்கு தலைமை கிடையாது
அவைகளுக்கும் தான்.
அரசியல் போட்டிகள் வந்ததேயில்லை.
எங்கள் இனம் செம்புழுதியையொத்த
முடியைக் கொண்டவர்கள்.
காகத்தை மெஞ்சிய நிறமுடையவர்கள்
எமக்கு இரவுகள் ரெம்ப விருப்பமானவை
மலைக்காடுகளிடையோன பறத்தலை
ஒத்த ஆதிவாசிகள் நாங்கள்.
..
மிருகங்களையும் பறவைகளையும்
வேட்டையாடி தின்பவர்கள்
எதற்காகவும் நாங்கள் எங்களில்
ஒருத்தனை வேட்டையாடி கொன்றதில்லை.
ஏன் என்றால் நாங்கள் ஆதிவாசிகள்.

JOHNMARY ROSE's POEM

A POEM BY 
JOHNMARY ROSE
Translated into English by Latha Ramakrishnan

Wondering how the rear gate of sorrows would be
I came and saw;
Here also there are trees filled with fruits!
Plants that shower flowers!
The touch of breeze is felt everywhere!
There are stars too that unblinkingly savours the sight 
Of exquisite night!
The first-ever man is there
just like the Great Grand Garden!
Y…e…s indeed…as long as you don’t press
the calling bell at the front door
its rear door is always beautiful
as the Garden of Eden!

துயரங்களின் பின் வாசல் எப்படி இருக்கும் என்றெண்ணி
வந்து பார்த்தேன்....
இங்கும் கனிகள் நிறைந்த மரங்கள் உள்ளன!
பூக்கள் சொரிக்கும் செடிகள் உள்ளன!
தென்றலின் ஸ்பரிசமும் மிகுந்துள்ளன!
இரவின் அழகை இமை கொட்டாமல் ரசிக்கும் நட்சத்திரங்கள் உள்ளன!
ஆதி மனிதன் உண்டு மகிழ்ந்து கழித்த அந்த அழகிய தோட்டத்தை போல்!
ஆம்..... ........ன்...., முன் வாசலில் உள்ள அழைப்பு மணியை
நீ அழுத்தாத வரை
அதன் பின் வாசல் என்றும் அழகுதான் ஏதேன் தோட்டத்தை போல்
! –
ஜானு


INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024