INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, October 11, 2019

THENMOZHI DAS' POEM

A POEM BY 
THENMOZHI DAS

Rendered in English by Latha Ramakrishnan





CLOUD FALLING AS SARI FROM THE CRESCENT MOON

Without fail does the branch surface
with the voice of Jesudas
With snow pouring on cravings compressed
It is Words make the pain-swelling foams boil.
Echo being the witness.
When tender coils of hair cropped and sprouted
bounce unleashed and watch
the Karpoora Vettrilai creeper too
can stir at the root of imagination.
The causes can be straight lines
or curvy ones.
The way the sour taste of dance inside
the beverage made of tamarind
When the sugarcane field is afire
the smell of sweetness weeps in dark hue
We can feel.
The cloud bearing greenish yellow hue
makes thirst to be.
Mostly union is not without radiance
Parting is but
the cloud falling as sari from the crescent moon.
Without fail the owl comes at midnight to howl
inside the mathematical forms of directions.
Without fail the day also arrives.
To weave life with the twine of chant divine:

‘Namasthethu Mahaamaaye Sripeede Surapooojithe


பிறை நிலவிலிருந்து மேகம் புடவையாக வீழ்வது

எப்படியும் வந்துவிடுகிறது ஒரு கிளை
ஏசுதாஸ் குரலோடு
ஏக்கங்களின் அழுத்தங்களில் பனிபெய்ய
வலி பொங்கும் நுரைகளை 
வார்த்தைகள் தான் கொதிக்கச் செய்கின்றன 
எதிரொலி அத்தாட்சி தானே 
வெட்டி முளைத்த இளம் கேசம் 
திமிறி நோக்கும் போது
கற்பூர வெற்றிலைக்கொடி கூட அதன் 
கற்பனையின் அடிவேரில் அசையலாம் 
காரணங்கள் நேர்கோடுகளாகவோ 
வளைவு கோடுகளாகவோ இருக்கலாம் 
புளிக்கூட்டின் உள்ளே புளிப்பு நடனமிடுவதையும் 
கரும்புவயல் தீப்பற்றும் போது இனிப்பின் வாசம் 
கருமையான நிறத்தில் கேவுவதையும்
நாம் உணரலாம் 
பசும்மஞ்சள் நிறமேகம் வானில்
தாகத்தை உதிக்கச்செய்கிறது 
கலத்தல் பெரும்பாலும் ஒளியின்றி இல்லை 
பிரிதல் 
பிறை நிலவிலிருந்து மேகம் புடவையாக வீழ்வது
அவ்வளவு தானே 
எப்படியும் வந்து விடுகிறது நள்ளிரவில் ஆந்தை 
திசைகளின் கணித வடிவங்களுக்குள் 
அலறுவதற்கு 
மேலும் முதுகில் கண்வைத்து இரவை அளப்பதற்கு
எப்படியும் வந்துவிடுகிறது பகலும் 
நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸூரபூஜிதே
எனும் 
மந்திரநூலால் வாழ்வை நெய்வதற்கு

Composed by - Thenmozhi Das
15.3.2018 



No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024