A POEM BY
RIYAS QURANA
rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
She shed off the words
Some more still remained stuck
Speaking non-stop
she helped those words stuck upon the tongue
to escape.
Those which were flying
went right up to his ears.
But didn’t get inside.
The whirr and the drone
I could hear incessantly.
I take it that they wait for the opportune moment to invade his ears.
Her finger just as ants kept creeping on to his head
The silence that landed so unexpectedly
laid them under siege.
Both were sinking into it.
Or the buzz and the squeal
didn’t reach me.
The TV moved to the next song.
No matter watching how many more times
Beyond that they did nothing.
What next
It is to know that
I keep watching it again and again.
அடுத்தது என்ன
சொற்களை உதறி எறிந்தாள்
இன்னும் சில ஒட்டிக்கொண்டே இருந்தன
கதைத்து கதைத்து
நாக்கில் ஒட்டியிருந்த சொற்கள்
தப்பிச் செல்ல உதவினாள்
பறந்து கொண்டிருந்த அவை
அவனுடைய காதுவரை சென்றன
உள்ளே நுழையவில்லை.இலையான்கள் போல
இரையும் சத்தம்
எனக்கு கேட்டபடி இருந்தது
ஆனால், அவனுடைய
காதினுள் நுழைவதற்கான
சரியான தருணத்திற்காக
காத்திருக்கின்றன என்றே
நான் எடுத்துக்கொள்கிறேன்.அவளுடைய விரல்கள்
ஒவ்வொன்றாக எறும்புபோல
அவன் தலையில் ஏறிக்கொண்டிருந்தன
எதிர்பாராமல் தோன்றிய மௌனம்
அவர்களைச் சுற்றிவளைத்தது
அதற்குள் இருவரும் புதைந்து
கொண்டிருந்தனர்
அல்லது அவர்களின்
உடலெழுப்பும் இரைச்சல்
என்னை வந்தடையவில்லை
தொலைக்காட்சி
அடுத்த பாடலுக்குச் சென்றது
எத்தனை முறைபார்த்தாலும்
அதற்குமேல்
அவர்கள் ஏதும் செய்துவிடவில்லை.அடுத்தது என்ன
அதை அறியத்தான்
திரும்பத் திரும்பப் பார்க்கிறேன்
இன்னும் சில ஒட்டிக்கொண்டே இருந்தன
கதைத்து கதைத்து
நாக்கில் ஒட்டியிருந்த சொற்கள்
தப்பிச் செல்ல உதவினாள்
பறந்து கொண்டிருந்த அவை
அவனுடைய காதுவரை சென்றன
உள்ளே நுழையவில்லை.இலையான்கள் போல
இரையும் சத்தம்
எனக்கு கேட்டபடி இருந்தது
ஆனால், அவனுடைய
காதினுள் நுழைவதற்கான
சரியான தருணத்திற்காக
காத்திருக்கின்றன என்றே
நான் எடுத்துக்கொள்கிறேன்.அவளுடைய விரல்கள்
ஒவ்வொன்றாக எறும்புபோல
அவன் தலையில் ஏறிக்கொண்டிருந்தன
எதிர்பாராமல் தோன்றிய மௌனம்
அவர்களைச் சுற்றிவளைத்தது
அதற்குள் இருவரும் புதைந்து
கொண்டிருந்தனர்
அல்லது அவர்களின்
உடலெழுப்பும் இரைச்சல்
என்னை வந்தடையவில்லை
தொலைக்காட்சி
அடுத்த பாடலுக்குச் சென்றது
எத்தனை முறைபார்த்தாலும்
அதற்குமேல்
அவர்கள் ஏதும் செய்துவிடவில்லை.அடுத்தது என்ன
அதை அறியத்தான்
திரும்பத் திரும்பப் பார்க்கிறேன்
No comments:
Post a Comment